31 டிசம்பர், 2010

கூகிள்கள் காணாத தேடல்கள் என்னோடு....

என்ன தலைப்பு ஒரு வகையாக இருக்கிறதே..! என்று எண்ணுகிறீர்களா?..ஆம்..இந்த நாட்களின் நம் அனைவரின் வாயிலும் முணுமுணுக்கும் பாடல்வரிகளாக இவை காணப்படுகின்றன..(ஏன் நானும் கூட)இணையத்தின் தேடற்பொறிகளின் அரசன் கூகிள் என்பது உங்களுக்கு நான் சொல்லிதெரியவேண்டியதில்லை..கூகிள் தேடற்பொறி மூலம் அனைத்தையும் தேடிப்பெறலாம் என்பது யாவரும் நம்புகின்ற ஒரு விடயமாகும்.இருந்த போதும் சில நேரங்களில் சில விடயங்களை தேடித்தருவதில் கூகிள் தேடற்பொறியிற்கும் (Search engine) முடியாமல் போய்விடுகிறது.கூகிளாலும் தேடிப் பெறமுடியாத விடயங்களை தொகுக்க வேண்டுமென ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட்டு விட (நான் அவனில்லை..) உலகளாவிய ரீதியில் மக்களின் பங்களிப்புடன் இயங்கும்படியாக இணையத்தளமொன்றை அவர் ஆரம்பித்தார்.உலகளாவிய ரீதியில் பரந்து விரிந்து காணப்படும் அத்தனை வலையமைப்புகளிலும் கூகிள் தேடியும் கிடைக்காதவற்றை அத் தேடலை மேற்கொண்டவர்கள் இணையத்தளமூடாக குறித்த தேடல் பற்றி மிக விபரமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ள இந்த தேடல் தொடர்பான விடயங்கள் தேடல் தொடர்பான வினைத்திறனின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன. http://www.cantfindongoogle.com என்பதே இவ்விணையத்தள முகவரியாகும்.

27 டிசம்பர், 2010

Facebook+Yahoo Messenger+Google Talk+My Space = Nimbuzz

இன்றைய நாட்களில் இணைய பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்று வருகின்றவை சமூக வலைப்பின்னல்கள் (Social Networks) இணையத்தளங்களே.அதாவது இன்று மனித நட்புக்கள் கிராம,நகர,நாடு போன்ற எல்லைகளை தாண்டி இணையத்தினூடாக நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் இணைய அரட்டை எனப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிட்டது.இதற்கு உதாரணம் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.Facebook,Google Talk,Yahoo messenger,AIM,Myspace என விரியும் பல தளங்கள் மூலம் நாம் நண்பர்களுடன் Chatஇல் ஈடுபடுகிறோம்.ஆனாலும் இவற்றையெல்லாம் மொத்தமாக இணைய உலாவியில் (Internet browser) இல் திறந்து வேலைசெய்கின்ற போது இணைய இணைப்பு வேகம் குறைவதுடன் கணினியும் மெதுவாக இயங்கும். சில வேளைகளில் முக்கியமான வேலை ஒன்றை செய்து கொண்டிருக்கும் போது இவை Chatting சாத்தியமாவதில்லை..இவை நாளாந்த பாவனையின் போது நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளே..இவ்வாறான இணைய சேவைகளை ஒரு மென்பொருள் மூலம் ஒரே Username மற்றும் Password கொண்டு ஒரே நேரத்தில் இயக்க முடிந்தால் எப்படியிருக்கும்....
இதனை Nimbuzz சாத்தியமாக்குகிறது.

Nimbuzz என்பது அடிப்படையில் ஒரு மொபைல் போனுக்குரிய மென்பொருளாக இருந்தாலும் இதனை கணினியிலும் பயன்படுத்தலாம்.முதலில் http://www.nimbuzz.com/en/pc/ என்ற இதனுடைய உத்தியோகபூர்வ தளத்திலிருந்து இதனை இலவசமாக பதிவிறக்கி கொள்ளுங்கள்.பின் இணைய இணைப்பு உள்ள நிலையில் இந்த மென்பொருளை இரட்டை கிளிக் (Double click) செய்யும் போது இது Open ஆகும். (படம்-01)
பின்னர் நீங்கள் இம்மென்பொருளுக்கு புதிது என்பதால் இந்த மென்பொருளில் நீங்கள் கணக்கொன்றை திறக்க வேண்டும்.அதற்கு படம்-01 இல் காட்டப்பட்டுள்ள I don't have a Nimbuzz account என்ற இணைப்பை கிளிக் செய்க .இதன் போது படம்-02 தோன்றும்.








இதில் Choose uername என்பதற்கு நேரே நிம்பஸ் Username மற்றும் பாஸ்வேரட் செல்லுபடியான மின்னஞ்சல் முகவரி இவற்றோடு குழம்பியிருக்கும் சொற்களையும் சரியான டைப் செய்த பின் NEXT பொத்தானை அழுத்துங்கள்...இப்போது கணக்கு உருவாகிவிடும்.

பின்னர் வழமை போன்று உங்கள் புதிய USERname மற்றும் Password வழங்கி Login செய்து Add accounts பகுதியில் உங்கள் Facebook,yahoo,google,myspace இப்படியான அக்கவுண்ட்களை சேர்த்து விட்டால் Hurry ..just fun...... 

21 டிசம்பர், 2010

தொழில்நுட்ப உலகில் துருவிகளின் (Hackers) சாகசப் பயணங்கள்

   
துருவிகள் என்றாலே கணினித் தொகுதிகளுக்கு  நாசகார தாக்குதலை மேற்கொள்ளும் கணினி விற்பனர்கள் என அறிவீர்கள்.இன்றைய நாட்களிலும் எமக்கு தெரிந்தோ அல்லது தேரியாமலோ நாம் அனைவரும் ஒரு புகழ் பெற்ற துருவியை (Hacker) பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.ஆம்...ஜூலியன் அசாஞ்கே எனும் அந்த மனிதரைப்பற்றித்தான் சொல்கிறேன்.உலகின் வல்லரசுகள் கூட கதிகலங்கியிருக்கும் தருணம் அது.அந்தளவுக்கு இராணுவ பிரிவின் (Server) சேவையகங்களினுள் நாசுக்காக புகுந்து தரவுகளை துருவியிருகிறார்.உலகின் மிகவும் நுட்பம்வாய்ந்த துருவியாகவும் இவரே இப்போது காணப்படுகிறார்.(இவருடைய திறமையை பார்த்தால் ஒரு வேளை கணினி உலகம் ஒரு நல்ல மென்பொறிஞரை (Software engineer) தவறவிட்டுவிட்டதோ  என்று  எண்ணத்தோன்றுகிறது.)


அதாவது இப்படிப்பட்ட பல பாதுகாப்பு வளையங்களை கொண்ட சேர்வர்களை கூட தகர்க்கும் ஆற்றல்படைத்த கணினி உலகில் Hackers என்கின்ற பெயரால் அறியப்படுகிற நபர்களையும் அவர்களின் கடந்தகால சாகசங்களையும் இவர்கள் தொடர்பில் நாம் கைக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும்  கொஞ்சம் வித்தியாசமாகவும் வினோதமாகவும் தர விளைகிறது. IT CORNER



இப்படியான துருவிகளின் செயற்பாடு இணையப்பரப்பில் வெவ்வேறு பரிணாமம் எடுத்து காணப்படுவது இணையப்பாவனையாளர்களுக்கு மிகவும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.துருவிகளின் செயற்பாடுகள் சாதாரண இணையப்பாவனையாளர்களையும்  ஆபத்துக்குள் மாட்டிவிடும் அளவில் மிக தீவிரமடைந்துள்ளது வருந்ததக்கதே.துருவிகளின் இந்தச் செயற்பாடுகள் உச்சளவில் அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றன.இணைய உலகையே ஆச்சரியத்திற்குள் ஆழ்த்திய துருவிகளின் துணிகரமான சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து எம்மைப்பாதுகாத்துக் கொள்ள வழியமைக்கும்.   

துருவிகள் (Hackers) கணினித் தொகுதிகளை மட்டுந்தான் நாசகார தாக்குதல்களால் ஆட்டிப்படைக்கிறார்கள் என நினைக்க தமது நாசகார தாக்குதல் மூலம் கைப்பற்றும் கடனட்டை (Credit Card) போன்றவற்றின் தகவல்களை வைத்து மிகப் பெரியளவில் வியாபாரம் கூடச் செய்யத் துணிந்து விட்டார்கள்.போலிக் கடனட்டைகளை வெறும் ஒரு டொலருக்கு துருவிகள் விற்பனை செய்வதாக Symantec எனும் கணினித்தொகுதி பாதுகாப்பு தொடர்பில் கடமையாற்றும் நிறுவனம் அதன் அரையாண்டு அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

இணைய அளவில் நாசகார விடயங்களை செய்யும் துருவிகளின் நடவடிக்கை நாளுக்கு நாள் புதுப்புது கோணங்களில் பரிணாமம் பெறுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தரவுகளை களவாடும் பொருட்டு பிறழ் மென்பொருள்கள் என செந்தமிழில் அழைக்கப்படும் Malicious Software பலவற்றை துருவிகள் உருவாக்கி இணையமூடாக பயன்படுத்துவதாகவும்இதன் வாயிலாக கணினிப்பயனர்கள் பற்றிய தரவுகளை மிக எளிதாக பெறக்கூடிய வாய்ப்பை துருவிகள் பெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

துருவிகள் இவ்வாறு களவாகப் பெறும் பாதுகாப்பு இலக்கங்கள் (Security Codes),கடனட்டை இலக்கங்கள்,தனிப்பயனாளர் இலக்கங்கள் (Personal Identification Number-PIN) மற்றும் மின்னஞ்சல் முகவரி பட்டியல் போன்றவற்றை மூன்றாம் நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.தரவுகள் யாவும் உலகில் காணப்படும் சேவையகங்களில் இருந்து பெறப்படுகிறது.ஆதலால் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் மற்றும் ஏனைய விடயங்களில் ஆராயாமல் உங்கள் மின்னஞ்சலை கொடுக்கவேண்டாம்.எப்போதும் பிரபல்யம் பெற்ற அனைவராலும் பயன்படுத்ப்படுகின்ற சேவை வழங்குனர்களையே நம்புங்கள்.

உலகளவில் 51 சதவீதமான சேவையகங்கள் ஐக்கிய அமெரிக்காவிலேயே காணப்படுகின்றன.அமெரிக்காவை சார்ந்த வலைப்பின்னல்கள் ஊடாக 2006இன் கடைசி ஆறு மாதங்களில் 4443 வங்கி அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக Symantec நிறுவனம் கணக்கிட்டுள்ளது.இது இப்போ கொஞ்சம் குறைஞ்சு போச்சு.. Virus மற்றும் Malicious Code போன்றவற்றை கொண்ட Spam எனப்படும் எரிதங்களால் பாதிக்கப்படும் கணினிகளிற்குள் இலகுவில் நுழைந்து கொள்ளும் துருவிகள் கடனட்டை வங்கி விவரங்கள் என்பவற்றை நுணுக்கமாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்கின்றனர். 

அத்தோடு Phishing எனச் சொல்லப்படும் ஒரு உத்தியினால் கணினிப்பயனர்களை ஏமாற்றி தரவுகளை பெற்றுக்கொள்வதையும் துருவிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.கணினிப்பயனர்களின் தரவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் துருவிகளுக்கு சாத்தியங்களை வழங்கும் பிரதான மூலமாக எரிதங்களே (Spams) காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதுவே துருவிகளுக்கு கணினிகளை Zombie கணினிகளாக பாவிக்கப்படும் வகையில் துருவிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக Symantec நிறுவனம் கருத்து சொல்கிறது. Zombie கணனிகள் பற்றி விரைவில் IT CORNERஇல் ஆராய்வோம்.

ஒவ்வொரு நாளும் 63,912 கணினிகள் Zombie கணினிகளாக பாவிக்கப்படும் வகையில் துருவிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக Symantec நிறுவனம் தெரிவிக்கின்றது.இவ்வாறு பாதிக்கப்பட்ட கணினிகள் அதிகளவில் சீனாவில் காணப்படுவதோடு இது மொத்தக் கணினிகளில் 26சதவீதமாகும்.அமெரிக்காவில் 14சதவீதமும் பிரேஸிலில் 9% ம் இவ்வாறு பாதிக்கப்பட்ட கணினிகள் காணப்படுகின்றன.ஆனாலும் துருவிகளின் செயற்பாடு உச்சளவில் அமெரிக்காவிலேயே காணப்படுவதாகவும் இது மொத்தச் செயற்பாட்டில் 31சதவீதம் அமைவதாகவும் அளவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் செயற்படும் TJMax நிறுவனம் தமது நிறுவனத்தின் 45.6 மில்லியன் நுகர்வோரின் கடனட்டை இலக்கங்களை துருவிகள் 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் களவாடியுள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு களவாடப்பட்ட கடனட்டை இலக்கங்களில் அதிகமானவை சங்கேதமாக்கப்பட்டு (Encryption) காணப்பட்டதால் துருவிகள் அவற்றை பயன்படுத்த முடியாதென அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. 

குறித்த நிறுவனக் கணினிகளில் 'சந்தேகத்திற்கிடமான மென்பொருள்" நிறுவப்பட்டு காணப்படுவதை கண்டறிந்த பின்னரே தங்கள் நிறுவன நுகர்வோரின் கடனட்டை இலக்கங்கள் துருவிகளால் களவாடப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்ததாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது. கடந்த மார்ச் மாதம் TKMax இன் நுகர்வோரின் களவாடப்பட்ட கடனட்டை இலக்கங்களை பாவித்து ஒரு மில்லியன் டொலர்கள் பெறுமதியான கொள்வனவை மேற்கொண்ட 6 நபர்களை அமெரிக்ககாவல் துறையினர் கைது செய்ததும் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். இந்தக் கடனட்டை
இலக்கக் கொள்ளையடிப்பே மிகப் பெரிய தரவுக் கொள்ளையாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் Card systems Solutions எனும் நிறுவனத்தில் 2005ஆம் ஆண்டு 40மில்லியன் கடனட்டை இலக்கங்கள் களவாடப்பட்டதே மிகப் பெரிய தரவுக் கொள்ளையாக கருதப்பட்டது. தரவுக் கொள்ளைகள் வேகமாக அதிகரித்ததற்கு காரணம் அதிகரிக்கும் கணினிப்பாவனையென்றே சொல்லப்படுகிறது.

இப்படியானால் இணையத்தில் நமது ஆவணங்களின் பாதுகாப்பு என்னாவது.??? என்று அதிர்ச்சியில் இருக்கும் நண்பர்களுக்காக ஒரு சுவாரஸ்யம்..


அமெரிக்க இராணுவத் தகவல் மையங்களுக்குள் புகுந்து தரவுகளோடு கபடியாடிய பிரிட்டனை சேர்ந்த துருவியொருவர் உயர்நீதிமன்றத்தில் தான் செய்த மேன்முறையீட்டில் தோற்றுப்போயுள்ளார்.

(அருகில் படத்தில் எவ்வளவு சோகமாக காணப்படுகிறார் பாவம்..கரணம் தப்பினால் மரணம் என்பது இவர் விஷயத்தில் நன்றாக பொருந்துகிறது...)அமெரிக்காவின் 97 இராணுவ மற்றும் NASA கணினிகளை ஊடுருவி தரவுகளை கையாண்டதன் மூலம் மிகப்பெரிய இராணுவ கணினி ஊடுருவல் செய்த ஒருவராக Gary Mckinnon காணப்படுகின்றார். எனினும் தற்காலத்தில் ஜூலியன் அசாஞ்சே இந்த சாதனையை முறியடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.இவருக்கு பிணை மறுக்கப்பட்டதோடு உச்சபட்சமாக 45வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.McKinnon,2001ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2002 மார்ச் ஆகிய மாதங்களில் அமெரிக்க இராணுவ கணினி தொகுதிகளுக்குள் புகுந்துள்ளனர்.அத்தோடு 2002நவம்பரில் இவர் 
கைது செய்யப்பட்டார்.தகுந்த இணையவழிப்பாதுகாப்பு குறைவாக காணப்பட்டதாலேயே தனக்கு இராணுவ வலையமைப்புக்குள் செல்ல வாய்ப்பு ஏற்பட்டதாக McKinnon குறிப்பிடுகிறார்.


துருவிகளின் செயற்பாடு மட்டும் ஓய்வதாகவில்லை. மாறாக மிக மிக வேகமாக பெருகிவருகிறது. இதனால் இணையத்தோடிணைந்த எமது செயற்பாடுகளை நாம் கட்டாயமாக அவதானமாக கையாள வேண்டும். நாம் இணையத்தோடு இணையும் எத்தருணத்திலும் எமக்கு தொல்லைகளை தரும் நோக்கோடு துருவிகளின் செயற்பாடு அமையலாம். அதனால் துருவிகளின் செயற்பாடுகள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அறிவதோடு மட்டும் நின்றுவிடாது அவை பற்றி விழிப்பாக இருப்பதும் கட்டாயமானதொன்றாகும். இதன்போதே எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
 

11 டிசம்பர், 2010

கணினி வரலாற்று நூதனசாலை


1996 இல் ஸ்தாபிக்கப்பட்ட கணினி வரலாற்று நூதனசாலை (COMPUTER HISTORY MUSEUM) கணினி பற்றிய அனைத்து தகவல்களையும் ஒருங்கே கொண்டதொரு அமைப்பாக இன்று காணப்படுகிறது.நாளாந்தம் ஆயிரக்கணக்கான தொண்டர்களினால் தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்புடுகிறன.இந்நூதனசாலை 2002ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவின் California மாநிலத்திலுள்ள நிரந்தர கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.அத்தோடு 2003ஜூன் தொடக்கம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.இங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட 4000இற்கும் அதிகமான கணினி மாதிரிகள்,10000இற்கும் மேற்பட்ட படிமங்கள் (IMAGES) மற்றும் 4000
அடிக்கும் அதிகமான பிரிவுகளாக வகுக்கப்பட்ட ஆவணத்தொகுப்புகளும் காணப்படுகின்றன.அத்தோடு விஷேடமாக Cray-1Super Computer,1960இல் நீமென் மார்க்ஸினால் பாவிக்கப்பட்ட Kitchen Computer மற்றும் Apple-1 Computer என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.கணினி பிரமாண்டமான தோற்றத்தில் மாதிரியாக வடிவமைக்கப்பட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தலைமுறை தலைமுறையாக ஆயிரம்மாற'ற

ONE NEW MESSAGE FROM IT CORNER DEVELOPERS: PLEASE WATCH THIS ADDRESS IN GOOGLE CHROME


இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

10 டிசம்பர், 2010

Screen ஐ Capture செய்து கொள்ள இலகுவழி



பொதுவாக நாம் Screenஐ கேப்சர்செய்வதற்கு கீபோர்ட்டில் உள்ள Print Screen எனும் கீயை பயன்படுத்துவோம்.இவ்வாறு Capture செய்யும் போது முழு ஸ்க்ரீனும் கேப்சர் செய்யப்படும்.பின்பு நாம் அதனை Paint brush அல்லது ஏதாவது ஒரு Graphic Editing மென்பொருளில் பேஸ்ட் செய்து நமது தேவைக்கு ஏற்ப எடிட் செய்துகொள்ளுவோம்.இந்த செயல் முறையானது நேரத்தை விரயமாக்குவதுடன் சிரமத்தினையும் ஏற்படுத்துகிறது.எனவே இலகுவாகவும் விரைவாகவும் Screen இல் நமக்குத் தேவையான பகுதியினை மாத்திரம் Capture செய்து கொள்வதற்கு Gadwin Print Screen எனும் மென்பொருள் நமக்கு துணைபுரிகிறது.இப்பொழுது இந்த Gadwin Print Screen
மென்பொருளைப் பற்றி சற்று ஆராய்வோம்.......

இங்கு Capture செய்வதற்கு Print Screen எனும் கீயினை அழுத்த வேண்டும்.அல்லது நமக்குத் தேவையான ஒரு Key இனை விருப்பம் போல தெரிவுசெய்துகொள்வதற்கான தெரிவுகளும் உண்டு.Captured Area என்ற Optionஇல் உள்ள Rectangular Area எனும் Radio Button ஐ தெரிவு செய்து Capture செய்யும் போது Screen இல் நமக்கு வேண்டிய பகுதியினை மாத்திரம் தெரிவு செய்த Folder இனுள் Save செய்யும்.இங்கே காணப்படும் மற்றொரு option ஆகிய Current window னும் option ஐப் பயன்படுத்தி நாம் ஒரு விண்டோவினை Capture செய்து கொள்ள வேண்டுமானால் அதை தெரிவு செய்து Capture செய்யும் போது அந்த விண்டோ மாத்திரம் Capture செய்யப்படும்.
இதே போல "Menu"க்களையும் மிக இலகுவாக Capture செய்து கொள்ளலாம்.Automatic Naming என்ற Option மூலம் நாம் Capture செய்யும் ஃபைல்களுக்கு Autoஆக பெயர்களை இட்டுக்கொள்ளலாம். Capture செய்யப்பட்ட பகுதியினை .jpg,.gif,.bmp,.png வகை போன்ற File typeகளில் சேமித்துக் கொள்ளலாம்.இதுவும் இம்மென்பொருளில் மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும்.மேலும் அந்த Image File களுக்கு Autoஆக நிழல்களை(Shaadow) இட முடிவதுடன் அவற்றை Resize செய்து கொள்ளவும் முடியும்.இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த Gadwin Print Screen மென்பொருளை இலவசமாக Download செய்துகொள்வதற்கான இணைய முகவரி
http://www.gadwin.com/download/ps_setup.exe ஆகும்.கணினி திரையை படமாக்க நீங்க ரெடியா??

30 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன் (PART-03)


பேச்சு அறிக்கை (Speech recogonition) கொண்ட ரோபோக்களின் உருவாக்கம் மனித இயல்புள்ள ரோபோ உருவாக்கத்தின் ஆரம்ப நிலையான கட்டமாகும்.மொழிகளை உச்சரிக்கும் தன்மை நபருக்கு நபர் வேறுபடுவது மிகவும் பரவலாக அவதானிக்கப்படும் ஒரு விடயமாகும்.குறித்த மொழியில் உள்ள குறித்த ஒரு சொல்லையே வெவ்வேறு நபர்கள் வித்தியாசமான முறையிலே உச்சரிக்கின்றனர்.1952இல் பேச்சு அறிக்கை கொண்ட நிலையான முதல் மனிதப்போலி ரோபோ உருவாக்கப்பட்டது.இன்றளவில் நிமிடத்திற்கு 200 சொற்களை 95% துல்லிய தன்மையுடன் வேறுபிரித்து அறியும் திறனுள்ள மனிதப்போலிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது
கவனிக்கவேண்டி விடயம்தான்..

முகபாவங்களை ஆற்றும் ரோபோக்களும் இந்நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது ஆச்சரியமானதே! Kismet எனப்படும் ரோபோவானது பல முகபாவங்களை காட்டக்கூடிய திறன் கொண்டது.இதன் உருவப்படத்தையே கீழே காண்கிறீர்கள்..

இப்படியாக மனிதப்பண்புகளை செயற்கையாக கணினி செய்நிரல்கள் மூலம் தம்வசம் பெற்றுக்கொண்ட மனிதப்போலிகள் மனிதனுக்கு சவாலாக ஏன்?ஆபத்தாக கூட உருவெடுத்துள்ள பற்றியும் நாம் அறிந்து கொள்வது கட்டாயமானதே...மனிதப்போலிகளின் அதீத பெருக்கத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிப் பலநூல்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.பொதுவாக மனித இனத்தை அழிக்கும் வலிமையையும் மனப்பாங்கையும் மனிதனின் மூளையின் பலனால் பெற்றுக்கொண்ட நுண்ணறிவை கொண்ட மனிதப்போலிகள் பெற்றுக்கொள்வதையே சித்தரிக்கும் விதமாக இந்த நூல்களினதும் திரைப்படங்களினதும் கருப்பபொருள் அமைந்திருக்கும்.(நம்ம எந்திரனும்
இந்த வகைதான்)The Terminator,The Metrix,I Robot போன்ற திரைப்படங்கள் இந்த கூற்றை வலுப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.தொழிற்சாலையொன்றில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனிதப்போலி ரோபோவானது அதற்கு கணினி மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே மதன் அசைவுகள் காணப்படும்.இதன்போது அதற்கு குறுக்காக யார் சென்றாலும் அவர்களை கவனிக்காது அவர்களை தாக்கி தனது காரியத்தை கச்சிதமாக முடிக்கும்.இது மிகவும் அபாயகரமான நிலையாகும்.அனேகமான தொழிற்துறை ரோபோக்கள் பாதுகாப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றன.கணினியால் அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களில்
திடீர் மாற்றங்கள் அல்லது கோளாறுகள் என்பன ஏற்படும் நிலையில் ரோபோவொன்றின் செயற்பாடு பற்றி எதிர்வுகூறவே முடியாது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவே அமையலாம் என நம்பப்படுகிறது. 

ரோபோக்களையும் கணினிகளையும் பற்றி பேசும் போது செயற்கை அறிவின் வாயிலாக அவை என்னதான் ஆற்றல் பெற்றவையாக திகழ்ந்தாலும் மனித மூளையில் உறையும் அறிவிற்கு ஒப்பாக அவற்றை கருத முடியாது,எனவும் ஒப்பிடவும் கூடாது எனவும் அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.மனித மூளையின் வடிவமைப்பு,அதன் செயற்பாடு,அதிலுள்ள நுட்பம்,நுணுக்கம் இவை பற்றி இதுவரைகாலமும் அறிந்தவற்றை விட அறியாதவையே அதிகம்.மூளை அலைகள் ஏறத்தாள ஒரு மணியில் 6கிலோமீற்றர்/செக்கன் வேகத்தில் பயணம் செய்யக்கூடியவை என அண்மைக்கால ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன.இதனை கீழ்வரும் காணொளி தொகுப்பு விளக்குகிறது.


இந்த வீடியோ காட்சியில் நீங்கள் காண்பது உலகின் The Advanced Intellingent  என அழைக்கப்படுகின்ற ASIMO இன ரோபோவையே.இவ் ASIMO என்ற சொற்பதம் உங்களுக்கு ஒருவேளை புதிததாக இருக்கலாம்.அதாவது (எந்திரன் திரைப்படத்தில் Chittiயினுடைய A.I.R.D Approvalஇன் போது இது மனிதனை தாக்காத அசிமோ விதிகளுக்கு அமைய உருவாக்கபட்டதா என்று கேட்கப்படுவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்).அதாவது ஐசக் அசிமோ என்ற அறிஞர் ரோபோக்களுக்கான மூன்று விதிகளை வகுத்துள்ளார்.

  1.  ரோபோக்கள் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்க கூடாது.
  2. சட்டத்திற்கு புறம்பாக இல்லாமல் மனிதர்கள் விதிக்கின்ற எல்லா   ஆணைகளுக்கும் ரேபபோக்கள் கீழ்ப்படிய வேண்டும்.
  3. ரோபோக்கள் முதல் இரண்டு விதிகளுக்கும் முரண்படாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் 


இவையே அந்த மூன்று விதிகளுமாகும்.இந்த விதிகளை உருவாக்கவேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற வினா பலருக்கும் எழலாம்.உலகின் வல்லரசு நாடுகள் ரோபோக்களை யுத்த நடவடிக்கைகளுக்கு பழக்கி வருகின்றன.ஏவுகணைகளை ஏவவும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கவும் அணு உலைகளில் பணிகளில் ஈடுபடவும் ரோபோக்களே பயன்படுத்தப்படுகின்றன.இதனாலேயே இந்த விதிகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது.ஹிரோஷிமாவிலும்,நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டு அதனால் விளைந்த நாசத்தை பார்த்த பின்னரும் அதனைக் காட்டிலும் பன்மடங்கு கொடிய ஆயுதங்களையும் படைக்கலங்களையும் ஏவுகணைகளையும் 
வல்லரசு நாடுகள் தயாரித்த வண்ணமே உள்ளன.இப்பணிகளில் ரோபோக்களும் பயன்படுத்தப்படுகின்றன.மனித மூளையின் ஆற்றலைக் கொண்ட அல்லது ஆற்றலை மீறிய ரோபோக்கள் இயங்கத்தொடங்கி விட்டால் அதன் இயக்கத்தை யாராலும் நிறுத்த முடியாது.மனித குலத்தின் மீது வைக்கப்பட்ட அணுகுண்டாக அது அமைந்து விடும்.அதன் பின்னர் ரோபோக்களின் நெடிய பயணம் நிறுத்த முடியாத நீண்ட பயணமாக தொடர்ந்து கொண்டே இருக்கும் என மைக்கல் கார்னால்ஸ் என்ற அறிஞர் அறிவு நிலைக்கான போட்டி (The race to the intelligent state) என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார்.நாம் வாழும் உலகில் உமது அன்றாட கடமைகளில் நாம் துரிதமான சுறுசுறுப்பை கொண்டிருத்தலின் 
அவசியத்தை இந்த மனிதப்போலிகளின் வியாபிப்பு வேண்டிநிற்கிறது.அனிதனாலேயே உருவாக்கப்பட்டு பின்னர் மனிதனுக்கே அது கேடாக அமைந்து போதல் பொருத்தமில்லாத செயல்தான்.இருந்தும் தனிமனிதர்களின் செயற்பாடுகளில் மனிதப்போலிகளின் அவசியம் தேவைப்படாத அளவு சுறுசுறுப்பும் வினைத்திறனும் காணப்படவேண்டியது காலத்தின் தேவையாக மாறிவிட்டது.மனிதப்போலிகளின் தேவையை மட்டுப்படுத்தக்கூடிய நிலையில் எமது செயல்கள் மற்றும் மனப்பாங்குகள் காணப்படும் போதே எமக்குச் சவாலாக உருவெடுத்துள்ள மனிதப்போலிகளை நாம் விஞ்ச முடியும்,வெல்ல முடியும்,வெல்வோமா.....???? வருங்காலம் உங்கள் கைகளில்...   




15 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன் PART-02


இன்றைய காலகட்டங்களில் மனிதப்போலிகள் என அழைக்கப்படும் Humanoidகளின் அபரிமிதமான வளர்ச்சி மனிதஇனத்தையே அச்சுறுத்துவதாக அமைந்து கொண்டிருக்கிறது..இந்த நிலையை தற்போது வெளிவந்த தலைவரின் எந்திரன் உட்பட பல ஆங்கில திரைபடங்களும் படம்பிடித்து காட்டியிருக்கினறன..எனினும் தற்காலங்களில் இது சாத்தியமான நிலைதான. வேலைத்தளங்களில் கருமங்களை ஆற்றுவதற்காக உபயோகப்படுத்தப்படும் மனிதப்போலிகளின் மூலம் வேலையின் பெறுபேற்றில் துல்லியம் வினைத்திறன் மிக்க பலன்,நீடித்த பயன்பாட்டுத் தன்மை,என்பன அதிகரித்துள்ளன.ரோபோக்களை விட 
மனிதர்களால் காரியங்களை செய்ய முடியுமானாலும் சோம்பல்,களைப்பு போன்ற தன்மைகள் மனிதர்களால் செய்யப்படும் காரியத்தின் வினைத்திறனை பாதிக்கும்.ஆனால் இது ரோபோ தொடர்பில் இல்லவே இல்லை.
கைத்தொழிற்துறையில் சம்பந்தப்பட்ட பல தொழிற்சாலைகளில் ரோபோக்கள் பல காரியங்களை செய்வதற்காக அதிகளவில் பாவிக்கப்பட்டு வருகின்றது.உலகளவில் மிகவேகமாக மனிதப்போலிகளின் வியாபிப்பு பரவி வருகிறது.சுமார் 800,000 ரோபோக்கள் உலகளவில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 42சதவீதம் ஜப்பானிலும் 40சதவீதம் ஐரோப்பாவிலும் மற்றும் 18சதவீதம் ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்றன.கார் தயாரிப்பு,பொதி செய்தல்,இலத்திரனியல் கூறுகள் பொருத்துகை என பல நிலைகளில் பயன்படுத்த ரோபோக்கள் இப்போது ஆடம்பரமாக சில செல்வந்தர்களின் வீடுகளிலும் பயன்னடுத்தப்படுவது
கண்கூடு,

இதே போல மனிதனால் செய்யச் சிரமமான பல காரியங்களை செய்யும் தகவுடைய ரோபோக்களும் பாவனையுள்ளன.இது இவ்வாறிருக்க இராணுவ நடவடிக்கைகளிலும் மிகவும் நுணுக்கமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இராணுவ ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன.ஜப்பான் போன்ற நாடுகளில் முதியோர்களை கவனிக்கும் பணியில் கூட ரோபோக்கள் ஈடுபடுகின்றமை ஒரு மென்மையான செய்திதான்...

ரோபோ கண்டுபிடிப்பு உருவாகி பல தசாப்தங்களுக்கு பின்னர் ரோபோக்களுக்கு மனித உணர்வுகளை வழங்கும் நடவடிக்கை மீதான ஆர்வம் விஞ்ஞானிகளிடம் வலுப்பெற்றது.இதனால் பல உயிர்பான மனித உணர்வுள்ள மனிதப்போலி உருப்படிகள் அடிக்கடி தோன்றத்தொடங்கின.தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிலையங்களில் கடமையாற்றும் மனிதப்போலி ரோபோக்களின் தொழிற்பாடு மனிதனோடு இடைத்தாக்கம் கொண்டதாக காணப்பட்டது.இதனால் மனிதனோடு இடைத்தொடர்பாடும் வலிமை கொண்ட நிலையில் மனிதப்போலிகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உருவானது.

மனிதப் போலிகளின் உருவாக்கமா???  பகுதி-03 இல் காத்திருங்கள்..


10 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன்



இன்றைய நாட்களில் உலகத்தமிழர்கள் அனைவர் வாயிலும் அடிபடும் ஒரு சொல் "எந்திரன்" என்றால் அது மிகையாது..அந்தளவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து சக்கைபோடு பொட்டுகொண்டிருக்கிறது எந்திரன்.இது சாதாரண திரைப்படம் என்பதையும் கடந்து அனைவரின் கவனத்தையும் இயந்திரமனிதனின் பக்கம் திருப்பியிருக்கிறது..இந்த காலத்தில் ரோபோக்களை பற்றி பலரும் அறியத் துடிக்கின்றனர்.அதிலும் முக்கியமாக Chitti போன்று உணர்வுகள் Program செய்யப்பட்ட ரோபோக்கள் இருக்கினறனவா.. என்ற சந்தேகமும். கூட...அப்படியெனில் ஷங்கர் படத்தில் காட்டியிருப்பது
என்ன நம்மை ஏமாற்றுகிறாரா..இந்த ஆய்வு இத்தனையும் தாண்டி எனது கவனமும் சற்று எந்திரனின் பக்கம்.."புதிய மனிதா பூமிக்கு வா" என்று நானும் ரோபோக்கள் பற்றிய விவரங்களை திரட்டி ஒரு தொகுப்பாக தருகிறேன்.அன்றிலிருந்து இன்றுவரை ரோபோக்களின் வளர்ச்சி ...சாதனைகள்,எதிர்காலத்தில் ரோபோக்களின் நிலை போன்றவற்றை தொகுத்து இடையிடையே படங்கள் (Images),காணொளிகள் (Video) போன்றவற்றுடன் தர விளைகிறேன்.முற்றிலும் புதிய விடயங்கள் என்பதால் உங்களுக்கு இலகுவாக விளங்க இடையிடையே எந்திரன் திரைப்படத்தின் காட்சிகளையும் உதாரணமாக கூறுகிறேன்..எனினும் இக் கட்டுரை 3 பகுதிகளாகவே
வெளிவர உள்ளது வாசித்து பயனடையுங்கள்...




"மழை பெய்கிறது,..தரையில் கால் வழுக்கிவிடும் என சாட்டுபோக்கு ஏதும் சொல்லாமல் சொல்லும் அத்தனை வேலைகளையும் வேகமாக விரைவாக ஆசையுடன் செய்யும் மனிதப்போலிகளை உருவாக்குவதில் ஜப்பான் வெற்றிகண்டுள்ளது."இது 2007ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு செய்தியில் இருந்து கத்தரிக்கப்பட்ட பகுதி.160 சென்டிமீற்றர்கள் உயரமுடைய HRP-3 Promet MK-II என்ற இயந்திர மனிதனை Kawada தொழில் நிலையம் உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் மனிதனைப் போன்றே கருமங்களாற்றும் இந்த மனிதப்போலிகளின் வளர்ச்சி பற்றி நாம் அறிந்து கொள்ளல் அவசியமானதே!
Humanoid என்ற சொல்லை நீங்கள் அறிந்திருக்ககூடும்(அண்மையில் எந்திரன் திரைப்படத்தில் கூட இந்த சொல் பாவிக்கப்பட்டிருந்தது.)இதன் பொருத்தமான தமிழ் வடிவம் மனிதப்போலி என்பதாகும்.அதாவது மனிதனைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளவை இந்த வகைக்குள் அடங்கும்(இலகுவாக சொல்வதாயின் Chitti போன்ற ரோபோக்கள்) சாதாரணமாக விஞ்ஞான புனைக்கதைகள் அவற்றை தழுவி தயாரிக்கபடுகின்ற திரைப்படங்கள் போன்றவற்றில் மனிதப்போலிகளின்(Humanoid) வித்தியாசம் நிறைந்த ஆச்சரியப் படைப்புகளை சந்திக்கமுடியும். எடுத்துக்காட்டாக StarTrek: The next Generation இன் The Chase எனும் அங்கத்தை குறிப்பிடலாம். மனிதப் போலிகளின் அடிப்படையிலிருந்தே Robot எனும் ரோபோக்களும் எமது கவனத்திற்கு புலப்பட தொடங்கின..  

மனிதஉருவில் காணப்படும் மனிதப்போலிகளின் சலனம்,அசைவு,செயற்பாடு என்பன கணினியின் ஆளுகைக்குட்படுத்தப்படும் நிலையில் அது ரோபோ என வழங்கப்படுகிறது என பொதுவாக சொல்லலாம்.ரோபோக்களுக்கு ஒருவரும் ஒவ்வொரு வரைவிலக்கணம் சொல்கின்றனர்.பொதுமைப்பாடான வரைவிலக்கணம் ஏதும் இருப்பதாக தகவலில்லை.இருந்த போதும் சர்வதேச நியமக்குறியீடு ISO-8373 இன்படி தன்னியக்கமாக கட்டுப்படுத்தப்படும் மீள் செய்நிரலாக்கத்திற்கு உட்படக்கூடிய பல்நோக்குடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுக்களில் தொழிற்படும் தகவுள்ள,நிலையான இடத்தில் 
அல்லது நடமாடும் தகவுள்ள தொழில்துறை வடிவங்களே ரோபோ என வறையறுக்கப்படுகிறது.(அப்பாடா! என்ன பெரிய வரைவிலக்கணம் ...இதை ஒருவர் கேட்டால் எப்படிய்யா சொல்வது என நீங்கள் கேட்பது புரிகிறது...) தொழில்துறை ரோபோக்களின் முண்ணனி ஆளுமையான Joseph Engelberger,"ரோபோவை என்னால் வரைவிலக்கணபடுத்த முடியாது.ஆனால் ஒன்றைப்பார்த்தவுடன் அது ரொபோதானா.. என தீர்மானிக்க முடியும்" என ரோபோவைப் பற்றி குறிப்பிடுகிறார்.இதேவேளை "கணினியால் கட்டுப்படுத்தப்பட்டு காரியங்களை தன்னியக்கமாகச் செய்யக்கூடிய வகையில் காணப்படும் இயந்திரம்
" என ரோபோ என்பதற்கு The Cambridge Advanced Learner's Dictionary கருத்துச் சொல்கிறது.

இந்த எல்லா வரைவிலக்கணங்களிலிருந்தும் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.அதாவது மனிதனின் செயற்பாடுகளை கணினி மூலம் செய்நிரலாக்கம் செய்த நிலையில் ஆற்றக்கூடிய இயந்திரம் ரோபோ எனலாம்.

இனி சற்று ரோபோ பற்றிய வரலாற்று ஏடுகளை புரட்டுவோமானால் செயற்கை மனிதர்கள் அதாவது மனிதப்போலிகளின்(Humanoid) வரலாறு மிகவும் பழமையானதாக காணப்படுகிறது.ஆனாலும் 1206ஆம் ஆண்டு அரேபிய கண்டுபிடிப்பாளர் அல் ஜஸாரி (Al Jasary) என்பவர் உலகின் முதலாவது செய்நிரலாக்கம் மூலம் இயங்கும் மனிதப்போலி ரோபோவை உருவாக்கியதாக சான்றுகளுள்ளன.இதேவேளை 1495 இல் மனிதப்போலி ரோபோவின் வடிவமைப்பொன்று "மோனாலீசா" ஓவியத்தை வரைந்த ஆய்வாளர் லியோனாடா டாவின்சி அவர்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டுள்ளதுஇவ்வாறாக பரிணாமம் 
பெற்ற மனிதப்போலிகளின் உருவாக்கத்தின் போக்கு இன்றளவில் மனிதனுக்கே சவாலாக உருவெடுத்துள்ள தன்மை வெகுவாக உணரப்பட்டுள்ளது.......
மனித குலத்திற்கு சவாலான நிலையா அது என்ன???                                

பகுதி-02 இல் காணுங்கள்..
.




2 நவம்பர், 2010

புதிய அறிமுகம்

முதலாவது கணினி செய்நிரலாளர்

பேணூயின் எண்களை அக்காலத்தில் உருவாக்கப்பட்ட கணித்தல் பொறியினால் கணிப்பது தொடர்பாக விளக்கினார்.இதனால் இவரின் இந்த விளக்கம் தொடர்பான ஆவணமே உலகின் முதலாவது கனிணி செய்நிரல்(Computer programe) எனக் கணிக்கப்படுகிறது.இதனடிப்படையில் உலகின் முதலாவது கணினி செய்நிரலாளர் (Computer programer) ஆக Ada lovelace எனும் பெண்மணியே கணிக்கப்படுகிறார்.

பணிச்செயல் முறை உருவான கதை


கணினி மென்பொருள் கூறுகளால் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அதில் பணிகளை செய்து முடிப்பதற்கு செய்நிரல்கள் (Programs) அவசியப்பட்டன.இதன்போது தலைமுறைக்கு தலைமுறை பல கணினி மொழிகள் உபயோகிக்கபட்டன.இருந்த போதிலும் இவ்வாறு கணினி மொழிகளால் அறிவுறுத்தப்படும் நிலைகளின் போது கணினியில் பொதுவானதொரு தளமேடை காணப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.இதன் போதே கணினி இயக்கமுறைமைகள் (Operating Systems) உருவாக்கப்பட்டன.ஆரம்பகாலத்தில் DOS எனப்படும் Disk operating system மாத்திரமே
Operating systemஆக பாவிக்கப்பட்டது.பின்னாளில் கணினிகளின் சாரளத்தை (Windows) தமது கைகளில் பெற்றுக் கொண்ட Microsoft நிறுவனம் காலத்துக்கு காலம் நவீன உத்திகளை கொண்ட புதிய Operating systemகளை வெளியிடுவதில் இன்றுவரை ஊக்கமாக செயல்பட்டுவருகிறது.Microsoft மூலம் வெளியிடப்பட்ட OSகளாக Windows3.X,Windows95,Windows NT Workstation,Windows98,Windows2000Professional,Windows Me,Windows XP Home Edition,Windows XP Professional Edition,Windows Vista மற்றும் Windows 7 (வரும் ஆண்டு Windows 8) போன்றவற்றை
குறித்து காட்டலாம்.Apple கணினிகளுக்கு வேறாக MAc OSX எனும் முறைமையும் வெளிவந்தது.ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் Open Source பக்கம் அதிக கவனத்தை செலுத்தியிருப்பதனால் Linux வகையில் அமைந்த OSகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

24 அக்டோபர், 2010

Folder ஒன்றை Toolbarஆக மாற்றுதல்

உங்கள் கணினியிலுள்ள ஃபோல்டர் ஒன்றை டூல்பாராக மாற்றுவது பற்றி அறிந்திருக்கிறீர்களா?இதோ அதற்கான இலகுவழி..முதலில் நீங்கள் Toolbarஆக மாற்றவேண்டிய ஃபோல்டரை தெரிவு செய்து அதனை Desktop இன் விளிம்புவரை Drag செய்தால் ஃபோல்டர் ஆனது Toolbarஆக மாறிவிடும்.இவ்வாறு மாறிய Toolbarஐ டெக்ஸ்டொப்பின் மத்திய பகுதிக்கு Drag செய்தால் அது Floating Toolbarஆக மாற்றப்பட்டு காட்சியளிக்கும்.Toolbar தேவையில்லையென்றால் Close buttonஐ கிளிக் செய்து அதனை இல்லாமலாக்கலாம்.தேவையான ஃபைல்களை வேகமாக
திறப்பதற்கு மிகவும் பொருத்தமான Trick ஆக இதனை கருதமுடியும்.

திகிலூட்டும் கணினி விளையாட்டு அனுபவம்-Battle Field 2


இது என்னடா புதிததாக IT CORNERஇல் கேம்களை பற்றி சொல்கிறோமே! என்று நினைக்கிறீர்களா.. ஒவ்வொரு முறையும் மென்பொருள்களை பற்றி எழுதி அலுத்துவிட்டது..அதனால்தான் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு கணினி விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற Plan...தொடர்ந்து நாம் பார்க்க போவது Battle Field2 எனும் பெயர் கொண்ட போர்களத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கணினி விளையாட்டை பற்றியாகும்.பொதுவாக இந்த விளையாட்டை அதிநவீன போர் ஆயுதங்களை கையாளுகை செய்வதற்கான வாய்பை வழங்கும்
கணினி விளையாட்டாக அறிமுகப்படுத்தலாம்.இந்த கணினி விளையாட்டு ஒரு தனிநபரோ அல்லது குழுவோ ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.Digital Illusions CE எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டை Trauma Studios எனும் நிறுவனம் அபிவிருத்தி செய்துள்ளது.இந்த கணினி விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமாயின் விளையாடும் நபர் மூன்று அத்தியாயங்களில் சித்திபெற வேண்டும்.இதனை விளையாடும் போது 15இராணுவ வீரர்களின் துணை விளையாட்டு வீரர்ரகளுக்கு வழங்கப்படும்.
இணையத்தின் மூலம் இவ்விளையாட்டில் ஈடுபடும் போது 64வீரர்களின் துணை வழங்கப்படும்.இதனால் Online நிலையிலும் கணினி விளையாட்டை விளையாடும் வாய்ப்பு கிட்டும்.இந்த கணினி விளையாட்டில் காட்சி அமைப்புக்கள் மற்றும் ஒலிக்கலவை வரைகலை போன்றவை மிகவும் உயர் பிரிதிறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாடும் நபர் நிஜமாகவே ஒரு போர்க்களத்தில் இருக்கும் அனுபவத்தை பெறுவார் என்று இதனை வெளியட்டுள்ள Electronic Arts கருத்து தெரிவிக்கிறது.



23 அக்டோபர், 2010

பதிவிறக்கம் (DOWNLOAD) செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  இன்றைய காலத்தில் பெரும்பாலும் நாம் Broadband எனப்புடும் அகல்கற்றை தொழல்நுட்பம் (ப்ராட்பேன்ட்க்கு இதுதான் தமிழ் அர்த்தமாம்...) மூலமாகவே இணையத்தோடு இணைந்திருக்கிறோம்.இதன் போது இணைய வேகம் மிகவும் அதிகமாகும்.ஆகவே எமது டவுன்லோட்தேவைகளும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அதிகரிக்கின்றன.நாம் இவ்வாறு இணையத்தில் இருந்து ஃபைல்களை பதிவிறக்கும் போது அதனோடு சேர்ந்தால் போல் எம்மை அறியாமலேயே Spyware மற்றும் Virus இந்த சொற்கள் புதிதாயிருந்தால்
ஏப்ரல் மாதத்தில் 'கணிணியை பராமரிக்க 07 வழிகள் என்ற இடுகையை ஒருதடவை தட்டி பார்த்துகொள்ளுங்கள்) இவ்வாறு டவுன்லோட்டில் பல ஆபத்துக்கள் இருப்பதகால் இனிமேல் இணையத்திலிருந்து எந்தவொரு ஃபைலையும் டவுன்லோட் செய்யகூடாது என்ற முடிவுக்கு வரமுடியுமா?என்ன Download ஆகும் மென்பொருள்களோடு Spyware இணைந்து காணப்படுவது மிகவும் பொதுவான விடயதாக மாறியுள்ளது.இந்த ஸ்பைவேர்களின் மூலம் பயனர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து
மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கிறார்கள்.
இந்த வகையான ஸ்பைவேர்களை நீக்கிக் கொள்ள பல நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையிலுள்ளன.இவற்றை பயன்படுத்தி Spywareகளை எமது கணினியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம்.கணினியினை பாதிக்ககூடிய நாசகார மென்பொருள்களை நம்மை அநியாமலெயே எமது கணினியில் நிறுவுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும்.இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சில முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.அவற்றை இப்போது பார்ப்போம்.
டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் குறித்த மென்பொருளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மையை அறிந்து கொள்வது கட்டாயமானதாகும்.குறித்த மென்பொருள் பற்றி ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?இதனைப் பாவித்த ஏனையோர் என்ன கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்,என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரபலமான தேடற்பொறியொன்றை(Google,Yahoo,Ask) திறந்து அதில் பதிவிறக்கம் செய்யவேண்டிய கோப்பின் பெயர்,மென்பொருளின் பெயர்,மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை டைப் செய்து தேடுங்கள்.குறித்த மென்பொருளோடு அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால் அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி பட்டியற்படுத்தும்.
டவுன்லோட் செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்வதற்கு முன்னர் அதில் வைரஸ் தாக்கமேதும் உள்ளதா என கட்டாயம் பரிசோதித்து கொள்ளவேண்டும்.இல்லாவிடில் குறித்த மென்பொருளோடு சேர்த்து வைரசும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடலாம்.பின கணினியின் நிலை ஆபத்தாகிவிடும்.
எல்லாவற்றையும் விட உங்கள் கணினியை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும்.தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware,Virus என எமது கணினியில் இருந்து கொண்டு எம்மை கதிகலங்க வைத்தாலும் கவலைப்படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம்.இவற்றை கடைப்பிடித்தால் எமது கணினியை வைரஸ் மற்றும் Spywareகளிடமிருந்து பெருமளவு பாதுகாக்கலாம்...என்ன இப்போது வேறு ஏதும் டவுன்லொட் செய்கிறீர்களா///???? பரவாயில்லை..Don't worry be Happy.

19 அக்டோபர், 2010

அசையும் எழுத்துக்களுக்கு சிறப்பு தோற்றம்

நீங்கள் வலைப்பக்கத்தினை உருவாக்கி பராமரிப்பவரா?அப்படியானால் இந்த தொகுப்பு கொஞ்சம் பயனுள்ள விடயங்களை சொல்லித் தரும்.நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் நகஶம் எழுத்துக்களை உருவாக்க மார்க்யு டேக்(Markquee-Tag) இனை பயன்படுத்தியிருப்பீர்கள்.இந்த மார்க்யூ டேக்கினையே இணையப்பக்கங்களில் ஸ்க்ரோலிங் மெசேஜ்களுக்கும் பயன்படுத்தலாம்.பலர் ஸ்ரோலிங் மெசேஜ்க்காக ஜாவா ஸ்க்ரிப்ட்களை பயன்படுத்துவர்.ஆனால் மார்க்யூ டேக்கினை சில கூடுதல் ப்ராப்பட்டிகளை இணைத்து
பயன்படுத்தும் போது ஸ்கிரிப்ட்களுக்கு இணையான மாற்றங்களை எச்டிஎம்எல் டேக் மார்க்யூவிலிருந்தே பெறலாம்.இந்த மார்க்யூ டேக் பொதுவாக கிழ்கண்ட அமைப்பில் இருக்கும்.



 டேக்களுக்கிடையே கொடுக்கப்பட்ட செய்தி திரையில் வலது பக்கத்தில் இருந்து இடப்பக்கம் நோக்கி நகரும்.சான்றாக மேலுள்ள வரிகளை டைப் செய்தால் IT CORNER என்ற பெயர் திரையின் வலப்பக்க எல்லையிலிருந்து இடப்பக்க எல்லைக்கு நகரும்.இது தொடர்ச்சியாக நடந்து கொண்டேஇருக்கும்.

Markquee Tag உடன் இணைத்து பயன்படுத்த கூடிய பண்பியல்புகள்
எப்போதும் Default ஆக மார்க்யூ டேக்இல் எழுத்துக்கள் வலப்பக்கமிருந்து இடப்பக்கமாகவே நகரும்.ஆனால் Direction என்ற இயல்பை பயன்படுத்தி திசையை மாற்றலாம்.அதாவது டிரக்சன் பண்பில் நாம் எந்த திசையை காட்டுகிறோமோ அந்த திசை நோக்கி எழுத்துக்கள் நகரும். உதாரணமாக



 என்று கொடுத்தால் IT CORNER என்ற பெயர் திரையில் இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக நகரும்.அதே போல கிழிருந்து மேலாக நகர "up" என்றும்
மேலிருந்து கிழாக நகர "down" எனவும் கொடுக்கலாம்.  

ஸ்க்ரோலிங் தன்மையை மாற்றும் பண்பியல்பு
இயல்பாக மார்க்யு டேக் ஒரு செய்தியை ஸ்க்ரோல் செய்யும் இதற்கு மாறாக செய்தியை வேறு இரண்டு மாதிரிகளில் காட்டச்செய்யலாம்.அவை

* ஸ்லைடு(Slide)
* ஆல்டர்நெட் (Alternate)

இவற்றை பயன்படுத்த பிஹேவியர் (Behavior) என்ற பண்பியல்பு பயன்படுகிறது

மெசேஜை ஸ்லைடைப் போல காட்டச் செய்ய
ஸலைடு ஸடைல் என்றால் மெசேஜ் திரையின் ஒரு மூலையிலிருந்து நகர்ந்து மற்றொரு மூலைக்கு வந்து அமரும்.இது ஒரு முறைதான் நிகழும் தொடர்ச்சியாக நடக்காது. இதற்கான கோட்


இந்த கோடிங்கை ரன் செய்யும் போது IT CORNER என்ற சொல் திரையின் வலது ஓரத்திலிருந்து புறப்பட்டு இடது ஓரத்திற்கு நகர்த்து வந்து அமரும்.தொடர்ச்சியாக ஸ்க்ரொல் ஆகாது.


மெசேஜை ஆல்டர்நேட் மாதிரி காட்ட...

ஆல்டர்நேட் ஸ்டைல் என்றால் மெசேஜ் திரையின் இரு எல்லைகளிலும் மோதி மிதப்பது போன்ற ஒரு ஸ்டைல் ஆகும்.இது தொடர்ச்சியாக அசைவூட்டத்துடன் இருக்கும். இதற்கான கோட்


IT CORNER

இதன் வெளியீடானது IT CORNER என்ற பெயர் ஆல்டர்நேட் ஸ்டைலில் டிஸ்பிளே ஆகும்.
மெசேஜ் ஸ்க்ரோல் ஆகும் வேகத்தை மாற்ற...

மார்க்யூ டேகில் கொடுக்கும் வார்த்தை திரையில் ஸ்க்ரோல் ஆகும் வேகத்தினை நமக்கு ஏற்றாற் போல் அமைத்துக் கொள்ள ஸ்க்ரோல் டிலே(Scroll delay) என்ற பண்பு பயன்படுகிறது.உதாரணமாக

IT CORNER

என் கொடுத்தால் IT CORNER என்ற வார்த்தை மிக மெதுவாக ஸ்க்ரோல் ஆகும்.நமக்கு தேவையான வேகத்தை ஸ்க்ரோல் டிலே பண்பு முலம் நிர்ணயம் செய்யலாம்.
எத்தனைமுறை ஸ்க்ரோல் ஆக வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பண்பு   மார்க்யு டேகில் கொடுக்கப்பட்ட மெசேஜ் தொடர்ச்சியாக ஸ்க்ரோல் ஆகவேண்டும் என்பதை நிர்ணயிக்க லூப்(Loop) என்ற பண்பியல்பு உதவுகிறது. உதாரணமாக
  IT CORNER

ஏன்று கொடுத்தால் IT CORNER என்ற மெசேஜ் திரையில் இரண்டு முறை ஸ்க்ரோல் ஆகும்.
ஸ்க்ரோலிங் மெசேஜின் பிண்ணனி நிறம்  ஸ்க்ரோலிங் மெசேஜின் பிண்ணனி நிறத்தை மாற்ற bgcolor என்ற பண்பு உதவுகிறது. சான்றாக

IT CORNER 

 என்று கொடுத்தால் ஸ்க்ரோலிங் மெசேஜின் பிண்ணனி நிறம் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டிருக்கும்.

இந்த இயல்புகளை உங்கள் இணையப்பக்கங்களுக்கும் பயன்படுத்துங்கள்...உங்கள் இணையப்பக்கத்தினை MArquee டூலை பயன்படுத்தி மேலும் எவ்வாறு மெருகூட்டலாம் என்பதை அடுத்த மாதம் பார்ப்போம்....

30 செப்டம்பர், 2010

உங்களால் முடியுமா?

 CON என்ற பெயரில் ஒரு ஃபோல்டர்
CON என்பது முறையாக வேறுபிரித்தாளப்படும் "CONSOLE" என்ற I/O சாதனத்தின் பெயராகும்.இதனால் இந்த பெயரை கொண்ட ஃபோல்டரை விண்டோஸ் இல் உருவாக்க முடியாது.ஆனாலும் Command prompt இல் md\\.\\C:\con என டைப் செய்து Enter keyயை அழுத்த CON என்ற பெயரில் C வன்தட்டில் CON என்ற ஃபோல்டர் உருவாகும்.இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த ஃபொல்டரை சாதாரணமாக அழிக்கமுடியாது.இதனை அழிக்க அதே பொன்று Command prompt இனுள்
சென்று rd\\.\\C:\con என டைப் செய்து Enter keyயை அழுத்த ஃபொல்டர் அழிக்கப்படும்.இங்கு md என்பது Make directory என்பதையும் rd என்பது Remove directory என்பதையும் குறிக்கிறது.Con போலவே விண்டோஸ் எக்ஸ்பியில் PRN,AUX,CLOCK$,NUL,COM0,COM1,COM2,COM3,COM4,COM5,COM6,COM7,COM8,COM9,LPT0,LPT1,LPT2,LPT3,LPT4,LPT5,LPT6,LPT7,LPT8 மற்றும் LPT9 போன்ற பெயர்களிலும் ஃபோல்டர் உருவாக்க முடியாது....!

17 செப்டம்பர், 2010

பெயரில்லாமல் ஒரு ஃபோல்டர்(Folder)

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP) இயங்குதளத்தில் ஃபொல்டர்களை உருவாக்கும் போது அவற்றுக்கு பெயர் கொடுப்பது வழக்கம்.ஆனால் அவ்வாறு ஒரு ஃபோல்டரையோ அல்லது ஒரு ஃபைலையோ பெயரில்லாமல் உருவாக்க முடிந்தால்?? அதற்கும் வழி இருக்கிறது.அதை எவ்வாறு செய்வதென பார்ப்போம்.முதலில் நீங்கள் ஃபோல்டரை உருவாக்க வேண்டிய இடத்துக்கு செய்னு Right click செய்து தோன்றும் மெனுவில் New என்ற பகுதியில் ஃபோல்டர் என்பதை
தெரிவு செய்க.பின் புதிய ஃபோல்டருக்கான பெயர் கேட்கப்படும் அப்போது Alt கீயினை அழுத்தி கொண்டு 255 இலக்கத்தை அழுத்தி பின் Enter கீயை அழுத்துங்கள்.இப்போது நீங்கள் விரும்பியபடி பெயரில்லாமல் Folder உருவாகிவிடும்.  JUsT Fun........... TrY iT..

14 செப்டம்பர், 2010

கேள்வி கேட்போமா???







"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை" என்ற பாடலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.மனித வாழ்வில் கேள்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு.கேள்விகளால் கேள்வி செய்துதான் மனிதன் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினான்.சார்ல்ஸ் பபேஜ் கணினி கண்டுபிடித்ததும் தனது கேள்வி கேட்கும் மனப்பாங்கால்தான்.இயங்கையை கெள்வி கேட்டுகேட்டுதான் மனிதன் தனது அற்புத கண்டுபிடிப்புகளையெல்லாம் சாத்தியப்படுத்தினான்.நிலையற்ற 
கொள்கையின் தந்தை என அழைக்கப்படும் வெர்னர் ஹெய்சென்பேர்க் (Werner Heisenburg) இது பற்றி இவ்வாறு கூறுகிறார்."இயற்கை என்பது இன்று நாம் எம் முன் காண்பதல்ல,அதன் மீதான எமது கேள்வி கேட்கும் முறைமையிலேயே இயற்கை எமக்கு வெளிப்படுத்துகிறது" என்கிறார் அவர்.ஆம் கேள்விகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு.ஏதாவது ஒன்றைப்பற்றி நீங்கள் கடைசியாக எப்போது கேள்வி எழுப்பினீர்கள்?எந்த விடயத்தில் நீங்கள் கேள்வி எதனையும் 
எழுப்பியதில்லை..உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதில் நீங்கள் மகிழ்சி காண்கிறீர்களா?இதற்கெல்லாம் எங்கே நேரம் என்று கேட்காதீர்கள்.நீங்கள் என்ன சாட்டுப்போக்கு சொன்னாலும் உங்களுடைய அறிவை நீங்கள் விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இயற்கையையோ அல்லது வேறெந்த ஒரு விடயத்தையோ கேள்வி கேட்க பழக வேண்டும்.கேள்வி கேட்பதோடு நின்று விடாமல் அதற்கான விடை காணவும் முயல வேண்டும்...இது என்ன கணினி 
கட்டுரையில் இவன் ஏதாவெல்லாம் சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா?? விளக்கம் இரண்டாவது பந்தியில்..
கேள்வி கேட்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி கொள்ள ஆச்சரியப்படக்கூடிய வகையில் Yahoo Answers! உங்களுக்கு உதவுகிறது.இதில் நீங்கள் Sign In  செய்துகொண்டால் நீங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கேள்விகேட்க தொடங்கலாம்.இங்கே பலரும் பலவித கேள்விகளையும் முன்வைக்கிறார்கள்.அந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் நீங்கள் பதிலளிக்கலாம்.ஒரு வேளை உங்களுடைய பதில் சிறந்ததாக தரவரிசைப்படுத்தப்பட்டால் உங்களுக்கு 
போனஸ் புள்ளிகள் கிடைக்கும்.ஆம் இது ஒரு விளையாட்டுப் போல ஆர்வத்தை தாண்டும் விடயமாக மாறிவிடும்.இங்கு கேட்கப்படும் கெள்விகள் தத்துவம் தொடர்பானதாகவோ கம்ப்யூட்டர் தொடர்பாகவோ விளையாட்டு,சுகாதாரம்,ஏன் சினிமா தொடர்பானதாகவோ இருக்கலாம்.எந்த வகையான கேள்விகளையும் வீசி எறிந்துவிட்டு அதற்கான பதில்களை இரசித்து கொண்டிருக்கலாம்.சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் இங்கு கேட்கப்படும் கேள்வியொன்றுக்கு பதிலளிப்பதற்கு 
அவர் குறிப்பிட்ட துறையில் பாண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.இதனால் வெவ்வேறு பின்புலங்கள்,கலாசாரங்கள்,வயதினர் மத்தியிலிருந்தும் வித்தியாசம் வித்தியாசமான பதில்கள் ஒரு கேள்விக்கு கிடைக்கப்பெறும்.நீங்கள் வேண்டுமானால் கேள்விகள் எதனையும் தொடுக்காமல் வெறுமனெ நீங்கள் விரும்பும் துறையின் Keywordஐ கொடுத்து அந்தத் துறையில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு பலரும் அளித்த விதவிதமான 
பதில்களையும் தேடி வாசித்து இரசிக்கலாம்.இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.இதன் URL-http://answers.yahoo.com/

12 செப்டம்பர், 2010

கூகுளின் 'இன்ஸ்டன்ட் சேர்ச்'

 நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களைத் தொடர்ந்து தனது சேவைகளில் புகுத்திவருகிறது கூகுள். 

தனது தேடல் சேவையில் புதியதொரு தொழில்நுட்பத்தினை தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ளது. 

கூகுள் தேடல் பொறியின் மூலம் குறித்ததொரு விடயத்தினை தேடுவதற்காக, நாம் அவ்விடயத்தினை தேடல் பொறி பக்கத்தின் நடுவே தட்டச்சு செய்யும் போதே அதற்கான விடைகள் ( ரிசல்ட்ஸ்) திரையில் உடனடியாகத் தோன்றும். இதுவே அந்தச் சிறப்பம்சமாகும். 

இது 'இன்ஸ்டன்ட் சேர்ச்' என அழைக்கப்படுகின்றது. மேற்படி அம்சமானது பாவனையாளர் தேடும் விடயத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதினை அடிப்படையாகக் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வம்சமானது தனது சக போட்டியாளர்களான 'யாஹூ' மற்றும் 'மைக்ரோசொப்ட்' என்பவற்றுக்குப் பெரும் போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது


வீடியோ காட்சிக்கு...

மல்டிமீடியா(Multi media) மென்பொருள்கள் ஒரு தொகுப்பு

வீடியோ டூ எம்பி3 கன்வட்டர்(Video to MP3 Converter)
இந்த மென்பொருள் உங்கள் வீடியோ ஃபைலில் இருந்து ஒலியை மட்டும் தனியாகப் பிரித்து எடுப்பதற்கு பயன்படுகிறது.இதைக் கொண்டு .avi,.mpg,.wmv,.qt,.3gp,.3g2,.swf மற்றும் .flv போன்ற வீடியோக் கோப்புகளில் உள்ள ஒலியை மட்டும் தனியாக எடுத்து எம்பி3 கோப்பாக சேமிக்கலாம்.மேலும் இதில் வரும் எம்பி3 ஃபைலை MP3,256kbps,48000Hz Steres mp3,96 kbps,44100Hz Stereo போன்றவைகளாக சேமிக்க முடியும்.இம் மென்பொருளை பெற...

எம்பி4 கன்வட்டர்(Mp4 Converter)
எம்பி4 கன்வட்டர் எம்பி4 ஃபைலை WMV/Divx,Mp3,AVI,VOB,VCD,DV,MPEG,3GP,3G2,MOV,RM போன்றவைகளாக மாற்றுகிறது.அதே போல எம்பி4 ஃபைலை ஆடியோ ஃபார்மட்டுகளான AC3,MP2,MP3,AAC,WAV,APE,CVE போன்றவைகளாகவும் மாற்ற பயன்படுகிறது.இம் மென்பொருளை பெற..
 


ஃபோட்டோ டிவிடி கிரியேட்டர்(Photo DVD Creator)
ஃபோட்டோ டிவிடி கிரியேட்டர் எளிமையான ஃபோட்டோக்களிலிருந்து டிவிடியாக மாற்றும் மென்பொருள் உங்கள் டிஜிட்டல் கேமராவிலுள்ள புகைப்படங்களை இதில் கொடுத்தால் அவற்றை ஸ்லைடு ஷோவாக கொண்டுவந்து டிவிடியாக மாற்றித் தருகிறது.இவை அனைத்திற்கும் எளிமையான மூன்றே படிகள் பயன்படுகின்றன.இம் மென்பொருளை பெற...
 


ஜே-பெர்க்(J-Perk)
 ஜே-பெர்க் மென்பொருள் உங்கள் இணையப் பக்கத்திற்கு அனிமேஷன்கள் பட்டன்கள் ஸ்லைடுஷோ ஜாவாஸக்ரிப்ட் எஃபெக்டுகளை இணைத்து உருக்கொடுக்கிறது.இதில் உள்ளிணைக்கப்பட்ட 55 எஃபெக்டுகள் உள்ளன.மேலும் டைனமிக் பட்டன்கள் டைப் ரைட்டர் டெக்ஸட் இமேஜ் ஃபேடர்(Image fader) Drop down menu போன்றவை உள்ளன
.இம் மென்பொருளை பெற..

10 செப்டம்பர், 2010

வைரஸ் தாக்குதலில் இருந்து உங்கள் கணிணியைக் காப்பாற்ற...

REG Sweep
ரெஜ்ஸ்வீப் மென்பொருளானது உங்கள் கணினியில் உள்ள ஃபைல் சிஸ்டம் மற்றும் ரெஜிஸ்ட்ரியை இரண்டே நிமிடத்தில் ஸ்கேன் செய்து விடும்.மேலும் கரப்டான ஃபைல்கள் அவற்றின் Path மற்றும் ரெஜிஸ்ட்ரியை அறிந்து அவற்றை சரி செய்துவிடும்.இதனால் நிங்கள் புதிதாக கணினியை வாங்கியது போல எவ்வாறு செயல்பட்டதோ அதே வேகத்தில் இப்போதும் செயற்படும்.
இம் மென்பொருளைப் பெற இங்கே கிளிக் பண்ணுங்க.....

பேஸ்ட்டுக்கும் பேஸ்ட் ஸ்பெஷலுக்கும் என்ன வேறுபாடு..

நீ....ண்...ட.. நாட்களுக்கு பிறகு நான் எழுதுகின்ற பதிவு இது..சில முக்கிய வேலைகளால் பதிவுகளும் முடங்கிவிட்டன.மீண்டும் பழைய வேகத்துக்கு திரும்பியிருக்கிறது.IT CORNER இதே போலவே Adobe Page maker,Tally போன்ற இடுகைகளும் புதுப்பிக்கப்படும்.என்பதையும் கூறிக் கொள்கிறேன்... இடுகையை பார்ப்போமா?


பொதுவாக பேஸ்ட் என்பது ஒரே விதமான சொற்களை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்யாமல் அவற்றை தேர்வு செய்து பின் Ctrl+C என்ற கீகளை ஒரு சேர அழுத்த பின் அந்த சொற்கள் காப்பி செய்யப்பட்டு விடும்.பின் Ctrl+V என்ற கீகளை அழுத்துவதன் மூலம் நாம் ஏற்கனவே காப்பு செய்த சொற்கள் பேஸ்ட் ஆகும்.ஆனால் நாம் காப்பி செய்த சொற்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அந்த மாற்றங்கள் நாம் பேஸ்ட் செய்த  இடத்தில் இருக்காது.
இது சாதாரண பேஸட் முறையாகும்.ஆனால் பேஸ்ட் ஸ்பெஷல் என்பது நமக்கு எந்த சொற்கள் வேண்டுமோ அந்த சொற்களை தேர்வு செய்து பின் Ctrl+C என்ற கீயை அழுத்தி பின் Ctrl+V மூலம் செய்வதற்கு பதிலாக பேஸ்ட் ஸ்பெஷல் மூலம் லிங்க் செய்து விட்டால் நாம் Copy செய்துள்ள இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அந்த மாற்றங்கள் அனைத்தும் பேஸட் ஸ்பெஷல் லிங்க் முலம் லிங்க் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும்
மாறிவிடும்.



என்பதே இதன் தனிச் சிறப்பாகும்.
சான்றாக முதலில் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டை திறந்து கொள்ளவும்.பிறகு அதில் ஏதேனும் உங்களுக்கு தேவையான தகவல்களை ஒரு பக்கத்தில் அடித்து கொள்ளுஙகள்.அதன் பிறகு Ctrl+Enter கீகளை அழுத்தி இரண்டாவது பக்கத்துக்கு வந்து முதல் பக்கத்தில் டைப்  செய்த அதே கடித்ததை Copy செய்து பேஸ்ட செய்யுங்கள்.பிறகு இரண்டாவது பக்கத்தில் மவுசை வைத்து கொண்டு Edit மெனுவில் பேஸ்ட் ஸ்பெஷல் என்பதை(2007Office பாவனையாளர்கள்
Home Tab இனுள் காணவும்.) கிளிக் செய்து தேன்றும் மெனுவில் Paste Link என்ற Option Buttonஜ கிளிக் செய்து ஒகே கொடுக்கவும்.இப்போது அந்த கடிதம் இரண்டாவது பக்கத்தில் வந்து விடும்.இப்போது நீங்கள் முதல் பக்கத்தில் உள்ள கடிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அந்த மாற்றங்கள் அனைத்தும் இரண்டாவது பக்கத்தில் மாறிவிடும்.இதுவே இதன் தனிசிறப்பாகும்.
Concepte By
A.Shanojan

29 ஆகஸ்ட், 2010

கோப்புக்களை Zip செய்து பகிர்ந்து கொள்ளல்

உங்கள் நண்பருக்கு நீங்கள் டிஜிட்டல் கெமராவின் மூலம் எடுத்த நிழற்படங்கள் சிலவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய நிலை.மின்னஞ்சலில் ஒவ்வொரு நிழற்படமாக சேர்த்து அனுப்புவீர்களா?அல்லது விஷேட மென்பொருள்கள் எதனையும் பயன்படுத்துவீர்களா?கோப்புகளை வீசொலி பூட்டு முறை மூலம்(இது என்ன மொழி என்று கேட்கிறீர்களா?தேடிப்பார்ததில் Zip செய்தல் என்பதற்கு இதுதான் செந்தமிழ் அர்த்
தமாம்)கோப்புகளின் அளவானது செறிப்பு(அதாவது Compression) செய்யப்படும்.அவை அளவில் சிறியதாக்கப்படும்.அதே போல இவ்வாறாக உருவாக்கப்பட்ட செறி கோப்புகளை(Compressed files) சேமித்து வைப்பதுவும் பரிமாறிக் கொள்வதும் மிகவும் இலகுவான காரியமாகும்.ஆவணங்கள் Zip செய்யப்படுவதால் எம்மாற்றத்திற்கும் உட்படாது.ஆனால் குறித்த கோப்பை பெறுபவர் அதனை UnZip செய்வதன் மூலம் அத்தனை
கோப்புகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.Windows XP யில் கோப்புகளை Zip செய்யும் முறை இலகுவாகும்.Zip செய்யவேண்டிய கோப்புகளை செலக்ட் செய்த பின்னர் அதனில் Right click செய்ய வேண்டும்.இதன் போது தோன்றும் Context Menuவில் Send to எனும் தெரிவை சுட்ட விரியும் உபமெனுவில் Compressed(Zipper)Folder எனும் தெரிவில் கிளிக் செய்ய வேண்டும்.உருவாக்கப்பட்ட புதிய Zipஃபைலானது நீங்கள்
தெரிவு செய்த ஃபைல்களை கொண்ட இடத்திலேயே உருவாகியிருக்கும்.அத்தோடு உங்கள் Original fileகளும் எந்த மாற்றடுமின்றி அவ்வாறே காணப்படும்.இவ்வாறு உருவாக்கப்பட்ட Zip flieகளுக்கு Password வழங்க வேண்டுமென நினைத்தால் Zip fileஐ இரட்டை கிளிக் செய்தால் Zip folderஇனுள் காணப்படும் ஃபைல்கள் காட்சியாகும்.அதில் குறித்த ஃபைல்களுக்கு மட்டும் பாஸ்வேரட் வழங்கவேண்டுமென நினைத்தால்
குறித்த ஃபைல்களை தெரிவு(Select) செய்ய வேண்டும்.அவ்வாறில்லாமல் மொத்த Folderக்கும் பாஸ்வேர்ட் வழங்க விரும்பினால் எந்த ஃபைலையும் செலக்ட் செய்ய தேவையில்லை.பின்னர் File மெனுவில் Add a password என்பதை கிளிக் செய்ய வேண்டும்.பின் தோன்றும் மெனுவில் பாஸ்வேர்ட்டை இரு தரம் வழங்கி Ok செய்யலாம். உங்கள் கோப்புகள் இப்போது Passwordஆல் பாதுகாக்க பட்டுவிட்டது.
இவ்வாறு Zip செய்த ஃபைல்களை Unzip செய்து கொள்ள Folderஐ Extract செய்து கொள்ள வேண்டும்.இதற்கு குறித்த Zip folderஐ தெரிவு செய்து அதன் மீது Right click செய்ய தோன்றும் Context Menuவில் Extract All எனும் தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.இதன் போது ஒரு Wizard மூலம் மிக வேகமாக Fileகள் Extract ஆகும்.குறித்த ஃபைலானது பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டதாயின் Extract செய்ய முன்
உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.பாஸ்வேர்ட்டை சரியாக வழங்கிய பின்னர் Extract நடைபெறும்.
ஃபைல்களை Zip செய்ய விஷேடித்த மென்பொருள்கள் பல சந்தையில் காணப்படுகின்றன..Winzip,Zip master போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.ஆனாலும் Windows XPயில் உள்ள Compressed(Ziper) Folder எனும் தெரிவின் மூலம் ஃபைல்களை வினைத்திறனாக Zip செய்ய முடியும்.இவ்வாறு நீங்கள் உருவாகும் Zip folderகளை மின்னஞ்சல்கள் மூலமாக அனுப்பலாம்.அதிகமான ஃபைல்களை ஒரே தடவையில்
இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப மிகவும் இலகுவான முறையாகும்.Try it....
Concepte By
A.Shanojan (www.facebook.com/shanojan)

Windows XPயில் சில வித்தைகள்

உங்கள் கணினி பற்றிய சகல விபரங்களையும் அறிதல்
உங்கள் கணினி தொடர்பான சகல தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு Start-All programes-Accessories-Command prompt எனும் தெரிவினை மேற்கொண்டு தோன்றும் மெனுவில் systeminfo என டைப் செய்து Enter கீயை அழுத்த வேண்டும்.இதன் போது உங்கள் கணினி பற்றிய பல உபயோகமான தகவல்கள் காட்சிப்படுத்தப்படும்.இத் தகவல்களுள் கணினியை Boot செய்து இதுவரை இயங்கும் காலத்தையும்
குறிக்கும் தகவலும் காணப்படும்.

20 ஆகஸ்ட், 2010

கேட்கத் தவறிய அந்த இசை.......

பணிச்செயல் முறைமையை(Operating system) நிறுவி முதன்முதலாக செயற்படுத்தும் போது அது தொடங்குகையில் ஒரு இனிமையான இசை ஒலிக்கும்.அதனை சிலபேர் கேட்டிருக்கவும் கூடும்.ஆனால் சிலபேர் Motherboard driver‍ෙகளை நிறுவாததன்படியால் அந்த வாய்ப்பை இழந்திருப்பீர்கள்.அப்படியானால் அந்த வாய்ப்பை பெற Windows XPஐ திரும்ப நிறுவ வேண்டுமா?என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்.அந்த வேலை தேவையில்லை.உங்கள் கணினியிலேயே
அந்த இசை சேமித்து வைக்கப்பட்டுள்ளது.அது எங்கு இருக்கின்றதென சொல்கிறேன்.
முதலில் Windows Explorerஐ திறந்து கொள்ளுங்கள்.அதில் C:\WINDOWS\system32\oobc\images எனும் நிலைவரை Browse செய்யுங்கள்.அங்கே Title.wma அல்லது Windows welcome music.wma என்ற பெயரில் ஒரு கோப்பு காணப்படும்.இதன் கொள்ளளவோ 2.56MB ஆக இருக்கும்.அந்தக் கோப்பை நீங்கள் இரட்டை கிளிக் செய்தால் நீங்கள் கேட்கத்தவறிய அந்த இனிமையான இசை ஒலிக்கத் தொடங்கும்.சுமார் 5நிமிடங்களும் 24 செக்கன்களும் நீடிக்கும் இதன் இனிமையை
கேட்டுப் பாருங்கள்
Concepte By
A.Shanojan
shanojan1993@yahoo.com

www.facebook.com/shanojan

CPUவுக்கு ஆணையிடலாம்...


 கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு ஃபோல்டரில் இருந்து மற்ற ஃபோல்டரை Select செய்ய தெரிவு செய்யப்பட்ட ஃபோல்டரின் விண்டோ திரையில் தோன்ற அதிக நேரமெடுக்கும். சிலவேளை கணினியே ஸ்தம்பிதமடைந்து விடும்.இதற்கு ஒவ்வொரு ஃபோல்டருக்கும் ஒரேயளவான Memoryயை விண்டோஸ் ஆனது பகிர்ந்தளிக்கிறது.இதனால் ஃபோல்டர்களின் நிலையை அறியாமலேயே CPUவின் Memory அதிகளவில் பயன்படுத்
தப்படுகிறது.வேகமாக கணினி இயங்க இவ்வாறான முறை பொருத்தமானதன்று.இதனை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.ஆம்...ஃபோல்டர்களை கையாளும் விதத்தில் CPU மாற்றுவழியை கடைப்பிடிக்க ஆணையிடலாம்.உங்களால் முடியும்..மிகவும் இலகுவானது.
Control panelஐ திறந்து கொள்ளுங்கள்.அதில் Folder options என்ற ஐகனை Double click செய்யுங்கள்.இதன் போது தோன்றும் மெனுவில் View என்ற தலைப்புடைய Tabஐ தெரிவு செய்யுங்கள்.அதன் போது Advanced settings என்ற தலைப்பின் கீழ் நிறையத் தெரிவுகள் இருப்பதைக் காண்பீர்கள்.அதில் "Lunch folder windows in a seperate process" என்ற தெரிவின் எதிரே Tick செய்வதன் மூலம் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.அவ்வளவுதான் இனி எவ்
வளவு ஃபோல்டர்களை திறந்து கொண்டு கணினியில் வேலை செய்தாலும் கணினி கடுகதி வேகத்திலேயே கருமமாற்றும்'.. செய்து பாருங்களேன்...
Concepte By
A.Shanojan
Email-shanojan@yahoo.com

இம்மாத மென்பொருள்(நிழற்படங்களில் வித்தைகள் புரிய Photo Scape)



Photo editing என்றவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஃபோட்டோஷோப் என்றால் அது மிகையாகாது.தற்காலத்தில் பல துறைகளிலும் Photo editing  பாவிக்கப்பட்டு வருவதினால் போட்டோ எடிட்டிங் சம்பந்தப்பட்ட மென்பொருட்களின் மவுசும் அதிகரித்து வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.ஃபோட்டோஷோப் இல் செய்து கொள்ளக்கூடிய பல வேலைகளை மிக இலகுவாகவும்,விரைவாகவும் செய்து கொள்ளக்கூடிய வகையில்
அமைந்த ஒரு மென்பொருளை பற்றியே நாம் இம்மாத மென்பொருள் பகுதியில் ஆராயப்போகிறோம்.அம் மென்பொருளுக்கு Photo Scape என்று பெயர்
இந்த Photoscape ஆனது பல சிறப்பில்புகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது,அவற்றில் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளக் கூடியதாக காணப்படுவதுடன் PentiumI,PentiumII வகையினை சேர்ந்த செயற்திறன் குறைந்த கணினிகளிலும் இம்மென்பொருளை நிறுவிப் பாவிக்கலாம்.மிகக்குறைந்த அதாவது 10MB போன்ற கொள்ளளவை கொண்டிருப்பதால் இலகுவாக டவுன்லோட் செய்ய
கூடியதாகவும் உள்ளது.இலகுவாகவும் விரைவாகவும் நமக்கு விரும்பியவாறு Photo களை எடிட் செய்து கொள்ளக்கூடிய சிறப்பியல்பினை கொண்ட இம்மென்பொருளினை கணினி அறிவு குறைந்தவர்களினாலும் உபயோகிக்கப்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இம் மென்பொருளின் மற்றொரு சிறப்பியல்பாகும்.ஃபோட்டோகளை ஸ்லைடுஷோ மூலம் பார்க்கக்கூடிய வசதி இதில் காணப்படுவதுடன் ஒரே தடவையில் பல
ஃபோட்டோகளை Batch Editor இன் மூலம் இங்கு நாம் எடிட் செய்து கொள்ளலாம்.மேலும் Combine எனும் கட்டளையின் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட ஃபோட்டோக்களை ஒரு தனி Photoவாக மாற்றிக்கொள்ளக்கூடிய வசதியும் இதில் காணப்படுகிறது. Animate எனும் கட்டளையை கொண்டு photoகளை அனிமேட் செய்து கொள்ளக்கூடிய வசதியும் இதில் காணப்படுகிறது.மேலும் பல சிறப்பம்சங்களை கொண்ட இம் மென்பொருளை இலவசமாக
டவுன்லோட் செய்து நீங்களும் உபயோகித்து பார்க்கலாமே..
இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய இணையத்தளத்தின் இணைய முகவரி http://www.snapfiles.com/download/diphotoscape.html ஆகும்.



Concepte By
A.Shanojan

14 ஆகஸ்ட், 2010

ACRONYMS(கணினி தொடர்பான சில ஆங்கில சுருக்கெழுத்துகளும் அவற்றின் முழுவடிவங்களும்

SCII                         American Standard code for Information Interchange
AMD                        Adavance Micro Device
ALU                         Arithmetic Logic Unit
AI                             Artificial Intelligence
BIT                           Binary Degit
DRAM                     Dynamic Random Access Memory
DASD                      Direct Access Storage Device
DOS                         Disk Operating System
DPI                           Dot per Inch
FAT                          File Allocation Table
FDD                          Floppy Disk Drive
HTTP                        Hyper Text Markup  Language

ISDN                          Intergrated Service of Digital Network
JPEG                           Join Photographic Experts Group
LAN                           Local Area Network
MIPS                          Millions of Instructions Per Second
MPEG                        Motion Pictures Export Group
MAN                         Metro Area Network
NLQ                           Near Letter Quality
NOS                           Network Operating System
OOP                           Object Oriented Programming
PIXEL                       Picture Element
RGB                          Red Green Blue
RDBMS                   Relational Data Base Management System
SIMM                      Single Inline Memory Module
SQL                          Structured Query Languge
URL                          Uniform Resource Locator
WAN                       Wide Area Network
WOS                        Workstation Operating System]
WYSIWYG             What You See Is What You Get
XML                        Extenible Markup Languge

CoNCEptE bY
a.ShANOjan

Share With your friends