14 செப்டம்பர், 2010

கேள்வி கேட்போமா???







"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை" என்ற பாடலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.மனித வாழ்வில் கேள்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு.கேள்விகளால் கேள்வி செய்துதான் மனிதன் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினான்.சார்ல்ஸ் பபேஜ் கணினி கண்டுபிடித்ததும் தனது கேள்வி கேட்கும் மனப்பாங்கால்தான்.இயங்கையை கெள்வி கேட்டுகேட்டுதான் மனிதன் தனது அற்புத கண்டுபிடிப்புகளையெல்லாம் சாத்தியப்படுத்தினான்.நிலையற்ற 
கொள்கையின் தந்தை என அழைக்கப்படும் வெர்னர் ஹெய்சென்பேர்க் (Werner Heisenburg) இது பற்றி இவ்வாறு கூறுகிறார்."இயற்கை என்பது இன்று நாம் எம் முன் காண்பதல்ல,அதன் மீதான எமது கேள்வி கேட்கும் முறைமையிலேயே இயற்கை எமக்கு வெளிப்படுத்துகிறது" என்கிறார் அவர்.ஆம் கேள்விகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு.ஏதாவது ஒன்றைப்பற்றி நீங்கள் கடைசியாக எப்போது கேள்வி எழுப்பினீர்கள்?எந்த விடயத்தில் நீங்கள் கேள்வி எதனையும் 
எழுப்பியதில்லை..உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதில் நீங்கள் மகிழ்சி காண்கிறீர்களா?இதற்கெல்லாம் எங்கே நேரம் என்று கேட்காதீர்கள்.நீங்கள் என்ன சாட்டுப்போக்கு சொன்னாலும் உங்களுடைய அறிவை நீங்கள் விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இயற்கையையோ அல்லது வேறெந்த ஒரு விடயத்தையோ கேள்வி கேட்க பழக வேண்டும்.கேள்வி கேட்பதோடு நின்று விடாமல் அதற்கான விடை காணவும் முயல வேண்டும்...இது என்ன கணினி 
கட்டுரையில் இவன் ஏதாவெல்லாம் சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா?? விளக்கம் இரண்டாவது பந்தியில்..
கேள்வி கேட்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி கொள்ள ஆச்சரியப்படக்கூடிய வகையில் Yahoo Answers! உங்களுக்கு உதவுகிறது.இதில் நீங்கள் Sign In  செய்துகொண்டால் நீங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கேள்விகேட்க தொடங்கலாம்.இங்கே பலரும் பலவித கேள்விகளையும் முன்வைக்கிறார்கள்.அந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் நீங்கள் பதிலளிக்கலாம்.ஒரு வேளை உங்களுடைய பதில் சிறந்ததாக தரவரிசைப்படுத்தப்பட்டால் உங்களுக்கு 
போனஸ் புள்ளிகள் கிடைக்கும்.ஆம் இது ஒரு விளையாட்டுப் போல ஆர்வத்தை தாண்டும் விடயமாக மாறிவிடும்.இங்கு கேட்கப்படும் கெள்விகள் தத்துவம் தொடர்பானதாகவோ கம்ப்யூட்டர் தொடர்பாகவோ விளையாட்டு,சுகாதாரம்,ஏன் சினிமா தொடர்பானதாகவோ இருக்கலாம்.எந்த வகையான கேள்விகளையும் வீசி எறிந்துவிட்டு அதற்கான பதில்களை இரசித்து கொண்டிருக்கலாம்.சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் இங்கு கேட்கப்படும் கேள்வியொன்றுக்கு பதிலளிப்பதற்கு 
அவர் குறிப்பிட்ட துறையில் பாண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.இதனால் வெவ்வேறு பின்புலங்கள்,கலாசாரங்கள்,வயதினர் மத்தியிலிருந்தும் வித்தியாசம் வித்தியாசமான பதில்கள் ஒரு கேள்விக்கு கிடைக்கப்பெறும்.நீங்கள் வேண்டுமானால் கேள்விகள் எதனையும் தொடுக்காமல் வெறுமனெ நீங்கள் விரும்பும் துறையின் Keywordஐ கொடுத்து அந்தத் துறையில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு பலரும் அளித்த விதவிதமான 
பதில்களையும் தேடி வாசித்து இரசிக்கலாம்.இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.இதன் URL-http://answers.yahoo.com/

கருத்துகள் இல்லை:

Share With your friends