கேம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 டிசம்பர், 2011

போர்க்களம் (Battle Field 3) இம்மாத கணினி விளையாட்டு + Downlaod



இந்தப பதிவை தேடி வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் இனிமையான நத்தார் வாழ்த்துக்களும். இந்த மாதத்துக்கான கணினி விளையாட்டொன்றை நான் இப்போது உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகின்றேன். 

அதாவது தற்க்காலங்களில் நம்மில் எத்தனை போர் யுத்தகளத்தை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறோம். அது அரிதே..! ஆனால் ஒரு நிஜ யுத்த களத்தை நம் கண்முன்னே கொண்டு வருகிறது இந்த Battle field விளையாட்டு. இந்த பெயர் பலருக்கு பழகிப்போனது. ஏனெனில் இப்போது வந்திருப்பதுவோ இதனுடைய 3ம் பதிப்பு. அப்படியானால் இது எவ்வளவு பிரபலமானது என்பதை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. 

எனவே இதனுடைய சில சிறப்புக்களை சுருக்கமாக பார்க்கலாம்.

இதிலுள்ள முதலாவது முக்கிய அம்சம் மற்ற போர் முனை  விளையாட்டுக்களைப் போல அல்லாமல் Multiplayer வகையில் விளையாடக்கூடியதாகவும் அமைந்துள்ளது. வாகனங்களைக்கூட இதில் பயன்படுத்தலாம். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நிலையையும் (Levels) நீங்கள் அழகான ரம்மியமான சூழலில் விளையாடலாம்.  இவை எல்லாவற்றையும் விட கூடுதல் வசதி நீங்கள் ஒரு குழுவாக விளையாடலாம் என்று சொல்லுவதை விட அதுதான் கட்டாயம். உங்களுக்கு 4 வீரர்களின் குழு தரப்படும். 



என்னதான் கணினி விளையாட்டு நன்றாக அமைக்கப்பட்டாலும் இதனிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நான் சொல்லி விடுவது சுகம். 

குறைகள் என்றால் இதில் அமைக்கப்பட்டுள்ள நிலைகள், ஆழமாக இந்த விளையாட்டில் ஈடுபடுகிற ஒருவருக்கு திருப்தியை அளிக்காது. ஏனெனில் ஒரு மந்தமான நகர்வே அனைத்து நிலைகளிலும் இருக்கும். அடுத்தது பலர் எதிர்பர்க்கின்ற ஒரு விடயம் அதிக எண்ணிக்கையான நிலைகள். ஆனால் இந்த விளையாட்டில் மொத்தம் இருப்பது 6 நிலைகள்தான். 




இதை தவிர வழமையான அம்சங்களோடு ஒரு நல்ல பொழுது போக்கு விளையாட்டாகவே இது திகழ்கிறது. இதனுடைய System requirement கொடுத்துள்ளேன். அதை கவனமாக படித்து நான் தந்துள்ள இணைப்பில் இருந்து இதனுடைய Pirate பதிப்பை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்........

System requirements:
* Operating system: Windows Vista / Windows 7;
* CPU: 2 GHZ DUAL CORE (CORE 2 DUO 2.4 GHZ OR ALTHON X2 2.7 GHZ);
* RAM: 2 GB;
* Sound Card: DirectX compatible sound card;
* Video: DIRECTX 11 COMPATIBLE WITH 1024 MB RAM (NVIDIA GEFORCE GTX 560 OR ATI RADEON 6950);
* Free HDD: 14 gb of free space.

Torrent தரவிறக்கம்

தரவிறக்க சுட்டி 

...வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் ஓட்டளியுங்கள்... 

3 செப்டம்பர், 2011

மிரட்டும் கார் பந்தயம் - இம்மாத கணினி விளையாட்டு



விளையாட்டுக்கள் என்றாலே பொதுவாக அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் உண்டு. அவரவர் ரசனையை பொறுத்து அது வேறுபடுகிறது. நம்ம ஊர் கபடி தொடங்கி அமெரிக்கன் ஃபுட்பால் வரை நம்மவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள்....(இப்பொது லேட்டஸ்ட்டாக சிலருக்கு 'மங்காத்தாவும்' பிடிக்குதாம்) இப்படியாக விளையாட்டுக்களுக்கு தடைபோட்டு செல்வது தவிர்க்க முடியாதது. எனவேதான் சாதாரண PSP தொடங்கி கணினி வரை அனைத்திலும் Games என்ற பகுதி..(இது இல்லையென்றால் சிலர் அவற்றை வாங்குவதும் இல்லை..) தவிர்க்க முடியாதது. அதிலும் குறிப்பாக கணினி விளையாட்டுக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்துவிடும் சக்தி கொண்டது. குறைந்தது 1 கணினி விளையாட்டையாவது விளையாட ஒரு கணினி துறைசார்ந்தவரை காணவே முடியாது. இதனால்தான் மாதம் ஒரு புது விளையாட்டை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

பொதுவாக கணினி விளையாட்டுக்கள் அவற்றின் தன்மையை பொறுத்து Action, Racing, Puzzle, Adventure, Shootong, Sports, Kids, Arcade, Brain teaser, Space இப்படியாக இன்னும் பல வகையாக பிரிக்கப்படுகின்றன. எத்தனை வகையான கணினி விளையாட்டுக்கள் இருந்தாலும் பந்தயங்கள் (Racing) சார்ந்த கணினி விளையாட்டுக்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.

 நான் சொல்கின்ற இந்த கணினி விளையாட்டும் ஒரு பந்தயம் சார்ந்ததுதான்  அதிலும் கார் பந்தயம் சார்ந்தது. (Car racing) நம்மில் பலர் அறிந்த Need for Speed கணினி விளையாட்டின் மற்றுமொரு பதிப்பாகிய Need for Speed Most wanted என்பதாகும். வழமையான Car racing போலல்லாது மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


முக்கியமாக காரின் ஒவ்வொரு அசைவும் அதி உயர் 3டி தொழில்நுட்பம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப ட்ரெயிலர் கண்களை அகல வைவக்கிறது. வழமையாக கேம்களுக்கிடையில் வரக்கூடிய Movieகள் கிராஃபிக்ஸ் மூலமே ஆக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்த விளையாட்டில் அவை நிஜ மனிதர்களை வைத்த படமாக்கப்பட்டிருக்கிறது. Career mode, Challenge mode, Quick racing ஆகிய மோட்கள் கொடுக்கப்படுகின்றன. அதிலும் Career mode இல் பதினைந்து பேருடன் சவால் விட்டு ஜெயிக்க வேண்டும். இவற்றோடு LAN வலையமைப்பின் மூலம் கூட இதனை விளையாடலாம். உங்கள் கார் ஓட்டும் திறமையை பரிசோதிக்க Online play ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது உலகளவில் உள்ள போட்டியாளர்களுடன் மோதலாம்..

இன்னும் சொல்லி கொண்டு போகுமளவுக்கு இதன் சிறப்பியல்புகள் உள்ளன. EA நிறுவனத்தாரின் இந்த வடிவமைப்பு விளையாடுபவர்களுக்கு நிஜமாகவே ஒரு காரினை ஓட்டுகிற அனுபவத்தை அளிக்கிறது... சுருங்கச் சொன்னால் NFS Most wanted மிரட்டுகிறது...இதனை உங்கள் கணினியில் நிறுவ கணினி கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் கீழே தந்திருக்கிறேன். உங்கள் OS விண்டோஸ:7 64பிட் கொண்டதாக இருந்தால் சிலவேளை நிறுவுவதில் சிக்கல் வரலாம் அல்லது வேறு இயங்குதளங்களிலும் சிக்கல் வந்தால் பின்னுாட்டம் இடுங்கள்... தீர்வு கிடைக்கும். நான் தந்திருக்கிற தரவிறக்க சுட்டிகள் 11 பகுதிகள் காணப்படுகிறன. அனைத்தையும் தரவிறக்கி பின் Winrar கொண்டு Extract செய்து நிறுவுங்கள்...

Minimum System Requirements

OS: Windows XP or 2000
CPU: 1.4 GHz or faster
RAM: 256 MB or more
Disc Drive: 8x or faster CD/DVD drive
Hard Drive: 3 GB or more free space
Video: DirectX 9.0c compatible (see right)
Sound: DirectX 9.0c compatible
Input: Keyboard, mouse, or USB Steering Wheel/Gamepad
Video card with 32 MB or more memory and one of these chipsets is required: ATI Radeon 7500 or greater; ATI Radeon Xpress 200; NVIDIA GeForce2 MX/GTS or greater; Intel 950/i915g; S3 GammaChrome S18 Pro
Multiplayer requires 1 set of discs per PC and a broadband (Cable, DSL, or faster) connection.
Internet or LAN (2-4 players)

தரவிறக்க சுட்டிகள்
                                     

....திரட்டிகளில் ஓட்டளித்து பதிவை பிரபலமாகக்குங்கள்...


24 அக்டோபர், 2010

திகிலூட்டும் கணினி விளையாட்டு அனுபவம்-Battle Field 2


இது என்னடா புதிததாக IT CORNERஇல் கேம்களை பற்றி சொல்கிறோமே! என்று நினைக்கிறீர்களா.. ஒவ்வொரு முறையும் மென்பொருள்களை பற்றி எழுதி அலுத்துவிட்டது..அதனால்தான் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு கணினி விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற Plan...தொடர்ந்து நாம் பார்க்க போவது Battle Field2 எனும் பெயர் கொண்ட போர்களத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கணினி விளையாட்டை பற்றியாகும்.பொதுவாக இந்த விளையாட்டை அதிநவீன போர் ஆயுதங்களை கையாளுகை செய்வதற்கான வாய்பை வழங்கும்
கணினி விளையாட்டாக அறிமுகப்படுத்தலாம்.இந்த கணினி விளையாட்டு ஒரு தனிநபரோ அல்லது குழுவோ ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.Digital Illusions CE எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டை Trauma Studios எனும் நிறுவனம் அபிவிருத்தி செய்துள்ளது.இந்த கணினி விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமாயின் விளையாடும் நபர் மூன்று அத்தியாயங்களில் சித்திபெற வேண்டும்.இதனை விளையாடும் போது 15இராணுவ வீரர்களின் துணை விளையாட்டு வீரர்ரகளுக்கு வழங்கப்படும்.
இணையத்தின் மூலம் இவ்விளையாட்டில் ஈடுபடும் போது 64வீரர்களின் துணை வழங்கப்படும்.இதனால் Online நிலையிலும் கணினி விளையாட்டை விளையாடும் வாய்ப்பு கிட்டும்.இந்த கணினி விளையாட்டில் காட்சி அமைப்புக்கள் மற்றும் ஒலிக்கலவை வரைகலை போன்றவை மிகவும் உயர் பிரிதிறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாடும் நபர் நிஜமாகவே ஒரு போர்க்களத்தில் இருக்கும் அனுபவத்தை பெறுவார் என்று இதனை வெளியட்டுள்ள Electronic Arts கருத்து தெரிவிக்கிறது.



Share With your friends