இன்றைய நாட்களில் உலகத்தமிழர்கள் அனைவர் வாயிலும் அடிபடும் ஒரு சொல் "எந்திரன்" என்றால் அது மிகையாது..அந்தளவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து சக்கைபோடு பொட்டுகொண்டிருக்கிறது எந்திரன்.இது சாதாரண திரைப்படம் என்பதையும் கடந்து அனைவரின் கவனத்தையும் இயந்திரமனிதனின் பக்கம் திருப்பியிருக்கிறது..இந்த காலத்தில் ரோபோக்களை பற்றி பலரும் அறியத் துடிக்கின்றனர்.அதிலும் முக்கியமாக Chitti போன்று உணர்வுகள் Program செய்யப்பட்ட ரோபோக்கள் இருக்கினறனவா.. என்ற சந்தேகமும். கூட...அப்படியெனில் ஷங்கர் படத்தில் காட்டியிருப்பது
என்ன நம்மை ஏமாற்றுகிறாரா..இந்த ஆய்வு இத்தனையும் தாண்டி எனது கவனமும் சற்று எந்திரனின் பக்கம்.."புதிய மனிதா பூமிக்கு வா" என்று நானும் ரோபோக்கள் பற்றிய விவரங்களை திரட்டி ஒரு தொகுப்பாக தருகிறேன்.அன்றிலிருந்து இன்றுவரை ரோபோக்களின் வளர்ச்சி ...சாதனைகள்,எதிர்காலத்தில் ரோபோக்களின் நிலை போன்றவற்றை தொகுத்து இடையிடையே படங்கள் (Images),காணொளிகள் (Video) போன்றவற்றுடன் தர விளைகிறேன்.முற்றிலும் புதிய விடயங்கள் என்பதால் உங்களுக்கு இலகுவாக விளங்க இடையிடையே எந்திரன் திரைப்படத்தின் காட்சிகளையும் உதாரணமாக கூறுகிறேன்..எனினும் இக் கட்டுரை 3 பகுதிகளாகவே
வெளிவர உள்ளது வாசித்து பயனடையுங்கள்...
"மழை பெய்கிறது,..தரையில் கால் வழுக்கிவிடும் என சாட்டுபோக்கு ஏதும் சொல்லாமல் சொல்லும் அத்தனை வேலைகளையும் வேகமாக விரைவாக ஆசையுடன் செய்யும் மனிதப்போலிகளை உருவாக்குவதில் ஜப்பான் வெற்றிகண்டுள்ளது."இது 2007ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு செய்தியில் இருந்து கத்தரிக்கப்பட்ட பகுதி.160 சென்டிமீற்றர்கள் உயரமுடைய HRP-3 Promet MK-II என்ற இயந்திர மனிதனை Kawada தொழில் நிலையம் உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் மனிதனைப் போன்றே கருமங்களாற்றும் இந்த மனிதப்போலிகளின் வளர்ச்சி பற்றி நாம் அறிந்து கொள்ளல் அவசியமானதே!
Humanoid என்ற சொல்லை நீங்கள் அறிந்திருக்ககூடும்(அண்மையில் எந்திரன் திரைப்படத்தில் கூட இந்த சொல் பாவிக்கப்பட்டிருந்தது.)இதன் பொருத்தமான தமிழ் வடிவம் மனிதப்போலி என்பதாகும்.அதாவது மனிதனைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளவை இந்த வகைக்குள் அடங்கும்(இலகுவாக சொல்வதாயின் Chitti போன்ற ரோபோக்கள்) சாதாரணமாக விஞ்ஞான புனைக்கதைகள் அவற்றை தழுவி தயாரிக்கபடுகின்ற திரைப்படங்கள் போன்றவற்றில் மனிதப்போலிகளின்(Humanoid) வித்தியாசம் நிறைந்த ஆச்சரியப் படைப்புகளை சந்திக்கமுடியும். எடுத்துக்காட்டாக StarTrek: The next Generation இன் The Chase எனும் அங்கத்தை குறிப்பிடலாம். மனிதப் போலிகளின் அடிப்படையிலிருந்தே Robot எனும் ரோபோக்களும் எமது கவனத்திற்கு புலப்பட தொடங்கின..
மனிதஉருவில் காணப்படும் மனிதப்போலிகளின் சலனம்,அசைவு,செயற்பாடு என்பன கணினியின் ஆளுகைக்குட்படுத்தப்படும் நிலையில் அது ரோபோ என வழங்கப்படுகிறது என பொதுவாக சொல்லலாம்.ரோபோக்களுக்கு ஒருவரும் ஒவ்வொரு வரைவிலக்கணம் சொல்கின்றனர்.பொதுமைப்பாடான வரைவிலக்கணம் ஏதும் இருப்பதாக தகவலில்லை.இருந்த போதும் சர்வதேச நியமக்குறியீடு ISO-8373 இன்படி தன்னியக்கமாக கட்டுப்படுத்தப்படும் மீள் செய்நிரலாக்கத்திற்கு உட்படக்கூடிய பல்நோக்குடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுக்களில் தொழிற்படும் தகவுள்ள,நிலையான இடத்தில்
அல்லது நடமாடும் தகவுள்ள தொழில்துறை வடிவங்களே ரோபோ என வறையறுக்கப்படுகிறது.(அப்பாடா! என்ன பெரிய வரைவிலக்கணம் ...இதை ஒருவர் கேட்டால் எப்படிய்யா சொல்வது என நீங்கள் கேட்பது புரிகிறது...) தொழில்துறை ரோபோக்களின் முண்ணனி ஆளுமையான Joseph Engelberger,"ரோபோவை என்னால் வரைவிலக்கணபடுத்த முடியாது.ஆனால் ஒன்றைப்பார்த்தவுடன் அது ரொபோதானா.. என தீர்மானிக்க முடியும்" என ரோபோவைப் பற்றி குறிப்பிடுகிறார்.இதேவேளை "கணினியால் கட்டுப்படுத்தப்பட்டு காரியங்களை தன்னியக்கமாகச் செய்யக்கூடிய வகையில் காணப்படும் இயந்திரம்
" என ரோபோ என்பதற்கு The Cambridge Advanced Learner's Dictionary கருத்துச் சொல்கிறது.
இந்த எல்லா வரைவிலக்கணங்களிலிருந்தும் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.அதாவது மனிதனின் செயற்பாடுகளை கணினி மூலம் செய்நிரலாக்கம் செய்த நிலையில் ஆற்றக்கூடிய இயந்திரம் ரோபோ எனலாம்.
இனி சற்று ரோபோ பற்றிய வரலாற்று ஏடுகளை புரட்டுவோமானால் செயற்கை மனிதர்கள் அதாவது மனிதப்போலிகளின்(Humanoid) வரலாறு மிகவும் பழமையானதாக காணப்படுகிறது.ஆனாலும் 1206ஆம் ஆண்டு அரேபிய கண்டுபிடிப்பாளர் அல் ஜஸாரி (Al Jasary) என்பவர் உலகின் முதலாவது செய்நிரலாக்கம் மூலம் இயங்கும் மனிதப்போலி ரோபோவை உருவாக்கியதாக சான்றுகளுள்ளன.இதேவேளை 1495 இல் மனிதப்போலி ரோபோவின் வடிவமைப்பொன்று "மோனாலீசா" ஓவியத்தை வரைந்த ஆய்வாளர் லியோனாடா டாவின்சி அவர்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டுள்ளதுஇவ்வாறாக பரிணாமம்
பெற்ற மனிதப்போலிகளின் உருவாக்கத்தின் போக்கு இன்றளவில் மனிதனுக்கே சவாலாக உருவெடுத்துள்ள தன்மை வெகுவாக உணரப்பட்டுள்ளது.......
மனித குலத்திற்கு சவாலான நிலையா அது என்ன???
பகுதி-02 இல் காணுங்கள்..
.
1 கருத்து:
Online Works For All said :October 4, 2011 2:44 PM
பயனுள்ள அருமையான தகவல்
Without Investment Data Entry Jobs !
http://bestaffiliatejobs.blogspot.com
கருத்துரையிடுக