பேச்சு அறிக்கை (Speech recogonition) கொண்ட ரோபோக்களின் உருவாக்கம் மனித இயல்புள்ள ரோபோ உருவாக்கத்தின் ஆரம்ப நிலையான கட்டமாகும்.மொழிகளை உச்சரிக்கும் தன்மை நபருக்கு நபர் வேறுபடுவது மிகவும் பரவலாக அவதானிக்கப்படும் ஒரு விடயமாகும்.குறித்த மொழியில் உள்ள குறித்த ஒரு சொல்லையே வெவ்வேறு நபர்கள் வித்தியாசமான முறையிலே உச்சரிக்கின்றனர்.1952இல் பேச்சு அறிக்கை கொண்ட நிலையான முதல் மனிதப்போலி ரோபோ உருவாக்கப்பட்டது.இன்றளவில் நிமிடத்திற்கு 200 சொற்களை 95% துல்லிய தன்மையுடன் வேறுபிரித்து அறியும் திறனுள்ள மனிதப்போலிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது
கவனிக்கவேண்டி விடயம்தான்..
முகபாவங்களை ஆற்றும் ரோபோக்களும் இந்நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது ஆச்சரியமானதே! Kismet எனப்படும் ரோபோவானது பல முகபாவங்களை காட்டக்கூடிய திறன் கொண்டது.இதன் உருவப்படத்தையே கீழே காண்கிறீர்கள்..
இப்படியாக மனிதப்பண்புகளை செயற்கையாக கணினி செய்நிரல்கள் மூலம் தம்வசம் பெற்றுக்கொண்ட மனிதப்போலிகள் மனிதனுக்கு சவாலாக ஏன்?ஆபத்தாக கூட உருவெடுத்துள்ள பற்றியும் நாம் அறிந்து கொள்வது கட்டாயமானதே...மனிதப்போலிகளின் அதீத பெருக்கத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிப் பலநூல்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.பொதுவாக மனித இனத்தை அழிக்கும் வலிமையையும் மனப்பாங்கையும் மனிதனின் மூளையின் பலனால் பெற்றுக்கொண்ட நுண்ணறிவை கொண்ட மனிதப்போலிகள் பெற்றுக்கொள்வதையே சித்தரிக்கும் விதமாக இந்த நூல்களினதும் திரைப்படங்களினதும் கருப்பபொருள் அமைந்திருக்கும்.(நம்ம எந்திரனும்
இந்த வகைதான்)The Terminator,The Metrix,I Robot போன்ற திரைப்படங்கள் இந்த கூற்றை வலுப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.தொழிற்சாலையொன்றில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனிதப்போலி ரோபோவானது அதற்கு கணினி மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே மதன் அசைவுகள் காணப்படும்.இதன்போது அதற்கு குறுக்காக யார் சென்றாலும் அவர்களை கவனிக்காது அவர்களை தாக்கி தனது காரியத்தை கச்சிதமாக முடிக்கும்.இது மிகவும் அபாயகரமான நிலையாகும்.அனேகமான தொழிற்துறை ரோபோக்கள் பாதுகாப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றன.கணினியால் அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களில்
திடீர் மாற்றங்கள் அல்லது கோளாறுகள் என்பன ஏற்படும் நிலையில் ரோபோவொன்றின் செயற்பாடு பற்றி எதிர்வுகூறவே முடியாது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவே அமையலாம் என நம்பப்படுகிறது.
ரோபோக்களையும் கணினிகளையும் பற்றி பேசும் போது செயற்கை அறிவின் வாயிலாக அவை என்னதான் ஆற்றல் பெற்றவையாக திகழ்ந்தாலும் மனித மூளையில் உறையும் அறிவிற்கு ஒப்பாக அவற்றை கருத முடியாது,எனவும் ஒப்பிடவும் கூடாது எனவும் அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.மனித மூளையின் வடிவமைப்பு,அதன் செயற்பாடு,அதிலுள்ள நுட்பம்,நுணுக்கம் இவை பற்றி இதுவரைகாலமும் அறிந்தவற்றை விட அறியாதவையே அதிகம்.மூளை அலைகள் ஏறத்தாள ஒரு மணியில் 6கிலோமீற்றர்/செக்கன் வேகத்தில் பயணம் செய்யக்கூடியவை என அண்மைக்கால ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன.இதனை கீழ்வரும் காணொளி தொகுப்பு விளக்குகிறது.
இந்த வீடியோ காட்சியில் நீங்கள் காண்பது உலகின் The Advanced Intellingent என அழைக்கப்படுகின்ற ASIMO இன ரோபோவையே.இவ் ASIMO என்ற சொற்பதம் உங்களுக்கு ஒருவேளை புதிததாக இருக்கலாம்.அதாவது (எந்திரன் திரைப்படத்தில் Chittiயினுடைய A.I.R.D Approvalஇன் போது இது மனிதனை தாக்காத அசிமோ விதிகளுக்கு அமைய உருவாக்கபட்டதா என்று கேட்கப்படுவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்).அதாவது ஐசக் அசிமோ என்ற அறிஞர் ரோபோக்களுக்கான மூன்று விதிகளை வகுத்துள்ளார்.
- ரோபோக்கள் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்க கூடாது.
- சட்டத்திற்கு புறம்பாக இல்லாமல் மனிதர்கள் விதிக்கின்ற எல்லா ஆணைகளுக்கும் ரேபபோக்கள் கீழ்ப்படிய வேண்டும்.
- ரோபோக்கள் முதல் இரண்டு விதிகளுக்கும் முரண்படாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இவையே அந்த மூன்று விதிகளுமாகும்.இந்த விதிகளை உருவாக்கவேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற வினா பலருக்கும் எழலாம்.உலகின் வல்லரசு நாடுகள் ரோபோக்களை யுத்த நடவடிக்கைகளுக்கு பழக்கி வருகின்றன.ஏவுகணைகளை ஏவவும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கவும் அணு உலைகளில் பணிகளில் ஈடுபடவும் ரோபோக்களே பயன்படுத்தப்படுகின்றன.இதனாலேயே இந்த விதிகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது.ஹிரோஷிமாவிலும்,நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டு அதனால் விளைந்த நாசத்தை பார்த்த பின்னரும் அதனைக் காட்டிலும் பன்மடங்கு கொடிய ஆயுதங்களையும் படைக்கலங்களையும் ஏவுகணைகளையும்
வல்லரசு நாடுகள் தயாரித்த வண்ணமே உள்ளன.இப்பணிகளில் ரோபோக்களும் பயன்படுத்தப்படுகின்றன.மனித மூளையின் ஆற்றலைக் கொண்ட அல்லது ஆற்றலை மீறிய ரோபோக்கள் இயங்கத்தொடங்கி விட்டால் அதன் இயக்கத்தை யாராலும் நிறுத்த முடியாது.மனித குலத்தின் மீது வைக்கப்பட்ட அணுகுண்டாக அது அமைந்து விடும்.அதன் பின்னர் ரோபோக்களின் நெடிய பயணம் நிறுத்த முடியாத நீண்ட பயணமாக தொடர்ந்து கொண்டே இருக்கும் என மைக்கல் கார்னால்ஸ் என்ற அறிஞர் அறிவு நிலைக்கான போட்டி (The race to the intelligent state) என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார்.நாம் வாழும் உலகில் உமது அன்றாட கடமைகளில் நாம் துரிதமான சுறுசுறுப்பை கொண்டிருத்தலின்
அவசியத்தை இந்த மனிதப்போலிகளின் வியாபிப்பு வேண்டிநிற்கிறது.அனிதனாலேயே உருவாக்கப்பட்டு பின்னர் மனிதனுக்கே அது கேடாக அமைந்து போதல் பொருத்தமில்லாத செயல்தான்.இருந்தும் தனிமனிதர்களின் செயற்பாடுகளில் மனிதப்போலிகளின் அவசியம் தேவைப்படாத அளவு சுறுசுறுப்பும் வினைத்திறனும் காணப்படவேண்டியது காலத்தின் தேவையாக மாறிவிட்டது.மனிதப்போலிகளின் தேவையை மட்டுப்படுத்தக்கூடிய நிலையில் எமது செயல்கள் மற்றும் மனப்பாங்குகள் காணப்படும் போதே எமக்குச் சவாலாக உருவெடுத்துள்ள மனிதப்போலிகளை நாம் விஞ்ச முடியும்,வெல்ல முடியும்,வெல்வோமா.....???? வருங்காலம் உங்கள் கைகளில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக