நீ....ண்...ட.. நாட்களுக்கு பிறகு நான் எழுதுகின்ற பதிவு இது..சில முக்கிய வேலைகளால் பதிவுகளும் முடங்கிவிட்டன.மீண்டும் பழைய வேகத்துக்கு திரும்பியிருக்கிறது.IT CORNER இதே போலவே Adobe Page maker,Tally போன்ற இடுகைகளும் புதுப்பிக்கப்படும்.என்பதையும் கூறிக் கொள்கிறேன்... இடுகையை பார்ப்போமா?
பொதுவாக பேஸ்ட் என்பது ஒரே விதமான சொற்களை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்யாமல் அவற்றை தேர்வு செய்து பின் Ctrl+C என்ற கீகளை ஒரு சேர அழுத்த பின் அந்த சொற்கள் காப்பி செய்யப்பட்டு விடும்.பின் Ctrl+V என்ற கீகளை அழுத்துவதன் மூலம் நாம் ஏற்கனவே காப்பு செய்த சொற்கள் பேஸ்ட் ஆகும்.ஆனால் நாம் காப்பி செய்த சொற்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அந்த மாற்றங்கள் நாம் பேஸ்ட் செய்த இடத்தில் இருக்காது.
இது சாதாரண பேஸட் முறையாகும்.ஆனால் பேஸ்ட் ஸ்பெஷல் என்பது நமக்கு எந்த சொற்கள் வேண்டுமோ அந்த சொற்களை தேர்வு செய்து பின் Ctrl+C என்ற கீயை அழுத்தி பின் Ctrl+V மூலம் செய்வதற்கு பதிலாக பேஸ்ட் ஸ்பெஷல் மூலம் லிங்க் செய்து விட்டால் நாம் Copy செய்துள்ள இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அந்த மாற்றங்கள் அனைத்தும் பேஸட் ஸ்பெஷல் லிங்க் முலம் லிங்க் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும்
மாறிவிடும்.
என்பதே இதன் தனிச் சிறப்பாகும்.
சான்றாக முதலில் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டை திறந்து கொள்ளவும்.பிறகு அதில் ஏதேனும் உங்களுக்கு தேவையான தகவல்களை ஒரு பக்கத்தில் அடித்து கொள்ளுஙகள்.அதன் பிறகு Ctrl+Enter கீகளை அழுத்தி இரண்டாவது பக்கத்துக்கு வந்து முதல் பக்கத்தில் டைப் செய்த அதே கடித்ததை Copy செய்து பேஸ்ட செய்யுங்கள்.பிறகு இரண்டாவது பக்கத்தில் மவுசை வைத்து கொண்டு Edit மெனுவில் பேஸ்ட் ஸ்பெஷல் என்பதை(2007Office பாவனையாளர்கள்
Home Tab இனுள் காணவும்.) கிளிக் செய்து தேன்றும் மெனுவில் Paste Link என்ற Option Buttonஜ கிளிக் செய்து ஒகே கொடுக்கவும்.இப்போது அந்த கடிதம் இரண்டாவது பக்கத்தில் வந்து விடும்.இப்போது நீங்கள் முதல் பக்கத்தில் உள்ள கடிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அந்த மாற்றங்கள் அனைத்தும் இரண்டாவது பக்கத்தில் மாறிவிடும்.இதுவே இதன் தனிசிறப்பாகும்.
Concepte By
A.Shanojan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக