பணிச்செயல் முறைமையை(Operating system) நிறுவி முதன்முதலாக செயற்படுத்தும் போது அது தொடங்குகையில் ஒரு இனிமையான இசை ஒலிக்கும்.அதனை சிலபேர் கேட்டிருக்கவும் கூடும்.ஆனால் சிலபேர் Motherboard driverෙகளை நிறுவாததன்படியால் அந்த வாய்ப்பை இழந்திருப்பீர்கள்.அப்படியானால் அந்த வாய்ப்பை பெற Windows XPஐ திரும்ப நிறுவ வேண்டுமா?என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்.அந்த வேலை தேவையில்லை.உங்கள் கணினியிலேயே
அந்த இசை சேமித்து வைக்கப்பட்டுள்ளது.அது எங்கு இருக்கின்றதென சொல்கிறேன்.
முதலில் Windows Explorerஐ திறந்து கொள்ளுங்கள்.அதில் C:\WINDOWS\system32\oobc\images எனும் நிலைவரை Browse செய்யுங்கள்.அங்கே Title.wma அல்லது Windows welcome music.wma என்ற பெயரில் ஒரு கோப்பு காணப்படும்.இதன் கொள்ளளவோ 2.56MB ஆக இருக்கும்.அந்தக் கோப்பை நீங்கள் இரட்டை கிளிக் செய்தால் நீங்கள் கேட்கத்தவறிய அந்த இனிமையான இசை ஒலிக்கத் தொடங்கும்.சுமார் 5நிமிடங்களும் 24 செக்கன்களும் நீடிக்கும் இதன் இனிமையை
கேட்டுப் பாருங்கள்
Concepte By
A.Shanojan
shanojan1993@yahoo.com
www.facebook.com/shanojan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக