கொண்டாட்டங்கள், விடுமுறைகள்,
மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் எனது மற்றொரு தொழில்நுட்ப
பதிவு மூலமாக உங்களோடு இணைவது மகிழ்ச்சி தருகிறது. மனித குலத்தின்
நாகரீக வளர்ச்சியும் அதன் பயனாக விளைந்த கண்டுபிடிப்புகளும் தகவல் தொடர்பாடலில் ஏற்பட்ட
படிப்படியான வளர்ச்சிகளும் வியப்புக்குரியன. அந்தவகையில் நாங்கள்
இப்போது கணினி மற்றும் இணையம் என்ற இந்த இரண்டின் ஆளுகைக்குட்பட்ட யுகத்தில் இருப்பது
நீங்களறிந்ததே. குறிப்பாக இணையம் எங்கள் கைகளுக்கு வந்த பிறகு
இன்றைய தலைமுறையினரின் தொழில் தொடங்கி பொழுதுபோக்கு ஏன் சில சமயங்களில் திருமணம் வரை
அதில்தான் நடந்தேறுகிறது.
இவ்வாறு எல்லாமுமாக இருக்கின்ற
இணையத்தில் உலா வருகின்ற உங்களுக்கு இதுவரை உங்கள் இணைய உலாவல் (Web
Browsing) அனுபவத்தில் கிடைத்திருக்காத என்று நான் நம்புகின்ற சில இணையத்தின்
பக்கங்களை அறிமுகப்படுத்துகின்ற சுவாரஸ்யமான பதிவுதான் இணையவெளி. அதாவது பலகோடிக்கணக்கான இணையப்பக்கங்களின் பின்னலில் உருவானதே இணையம்.
இதில் எல்லா பக்கங்களும் ஒரே மாதிரியாக ஒரே வகையாக அமைவதில்லை.
இணையத்தில் சுவாரஸ்யம் தேடி உலவுகின்ற (Browsing) உங்களுக்கு அந்த இணையமே சுவாரஸ்யமானால்… தொடர்ந்து படியுங்கள்.
#1 உங்கள் சுட்டியை
(Mouse) சுட்டும் படங்கள்
இணையப்பரப்பில் உலாவருகின்ற
வினோத தளங்களில் உங்கள் கணினியின் சுட்டியோடு (Mouse) கொஞ்சம்
விளையாடிப்பார்க்கின்ற இணையத்தளம் இது. இந்த இணையத்தளத்தை திறக்கின்ற
போது உங்களுக்கு தெரிகின்ற கறுப்பான பகுதியில் Mouse Cursor இனை
சில செக்கன்களுக்கு நிறுத்தி வைத்தீர்களானால் உங்கள் Mouse Cursor எந்தப்பகுதியில் உள்ளதோ அதை காட்டுகின்றது போல Random ஆக Image தோன்றுகிறது. முயற்ச்சித்து
பாருங்கள்
#2 உங்கள் நண்பர் எத்தனை மணிநேரம் தூங்குகிறார்?
நீங்கள் ட்விட்டர் சமூக
வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இதை முயற்ச்சித்து பாருங்கள். அதாவது உங்கள் ட்விட்டர் நண்பர் துங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறார் என்பதை
கணக்கிட்டு சொல்லுகின்றது இந்த தளம். குறித்த நபரின் இறுதி
1000 பதிவுகளை கணிப்பிட்டு முடிவுகளை காட்சிப்படுத்துகிறது.
#3 திகில் திரைப்பட
இணையத்தளம்
Interactive Movie வகையை சேர்ந்த இணையத்தளம். அதாவது இங்கு சென்று
Begin என்பதை கிளிக் செய்தீர்களானால் உங்களை ஒரு காணொளி பக்கத்திற்கு
அழைத்து செல்லும். அந்த காணொளியானது திரைப்படம் போன்று ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனால் அந்த கதை எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க
வேண்டும். உதாரணமாக ஒரு கட்டத்தில் ஒருவன் கொலை செய்யப்படும்
போது உங்களிடம் ஆம் இல்லை என்று கேட்கப்படுகிறது. உங்கள் பதில்
ஆம் என்றால் குறித்த நபர் கொல்லப்பட்டு திரைக்கதை நகரும். இல்லையென்றால்
கொல்லப்படாமல் கதை தொடர்ந்து செல்லும். ஆனால் கொடுரம் திகில்
நிறைந்த காட்சிகளே அதிகம் என்பதால் அவதானம் கொள்க.
#4 ஸ்நெப் (Snap) குமிழிகள்
மேலுள்ள படத்தை பார்த்தவுடன் புரிந்து
கொண்டிருப்பீர்கள். நாங்கள் சாதாரணமாக உடையக்கூடிய பொருட்களை அனுப்புவதற்கு பயன்படுத்துகின்ற
காற்று குமிழிகள் கொண்ட சுற்றுறையை உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்கள் சிறுவயதுகளில்
இவ்வாறான குமிழிகளை உடைத்து விளையாடுவதில் அலாதி பிரியமுடையவராக இருந்திருந்தீர்களானால்
அதே வேலையை கொஞ்சம் மொடர்னாக (Modern) உங்கள் கணினியில் செய்யக்கூடிய வாய்ப்பை இந்த
தளம் தருகிறது. Bubble Wrap Simulator என்ற பெயரில் பொழுதுபோக்கு விளையாட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளையாடிப் பாருங்கள்.
முகவரி: http://www.snapbubbles.com/
#5 முப்பரிமாண (3D) தோற்றத்தை
உங்கள் சுட்டியோடு உருவாக்குங்கள்
ஊடாடு (Interactive) நிலையுடன்
கூடிய முப்பரிமான வரைதலை (Drawing) சாத்தியமாக்குகின்ற இணையத்தளம்தான் இது. உங்களின்
Mouse cursor இனை மட்டும் பயன்படுத்தி செய்யக்கூடியதாக இருப்பதுவே இதன் சிறப்பம்சம்.
முயற்சித்து பாருங்கள்.
என்னுடைய தேடல் அனுபவத்தில் கிடைத்த
வினோத தளங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இது போன்ற இன்னும் பல தளங்களை வருகின்ற
காலங்களில் பகிருகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக