23 அக்டோபர், 2010

பதிவிறக்கம் (DOWNLOAD) செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  இன்றைய காலத்தில் பெரும்பாலும் நாம் Broadband எனப்புடும் அகல்கற்றை தொழல்நுட்பம் (ப்ராட்பேன்ட்க்கு இதுதான் தமிழ் அர்த்தமாம்...) மூலமாகவே இணையத்தோடு இணைந்திருக்கிறோம்.இதன் போது இணைய வேகம் மிகவும் அதிகமாகும்.ஆகவே எமது டவுன்லோட்தேவைகளும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அதிகரிக்கின்றன.நாம் இவ்வாறு இணையத்தில் இருந்து ஃபைல்களை பதிவிறக்கும் போது அதனோடு சேர்ந்தால் போல் எம்மை அறியாமலேயே Spyware மற்றும் Virus இந்த சொற்கள் புதிதாயிருந்தால்
ஏப்ரல் மாதத்தில் 'கணிணியை பராமரிக்க 07 வழிகள் என்ற இடுகையை ஒருதடவை தட்டி பார்த்துகொள்ளுங்கள்) இவ்வாறு டவுன்லோட்டில் பல ஆபத்துக்கள் இருப்பதகால் இனிமேல் இணையத்திலிருந்து எந்தவொரு ஃபைலையும் டவுன்லோட் செய்யகூடாது என்ற முடிவுக்கு வரமுடியுமா?என்ன Download ஆகும் மென்பொருள்களோடு Spyware இணைந்து காணப்படுவது மிகவும் பொதுவான விடயதாக மாறியுள்ளது.இந்த ஸ்பைவேர்களின் மூலம் பயனர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து
மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கிறார்கள்.
இந்த வகையான ஸ்பைவேர்களை நீக்கிக் கொள்ள பல நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையிலுள்ளன.இவற்றை பயன்படுத்தி Spywareகளை எமது கணினியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம்.கணினியினை பாதிக்ககூடிய நாசகார மென்பொருள்களை நம்மை அநியாமலெயே எமது கணினியில் நிறுவுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும்.இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சில முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.அவற்றை இப்போது பார்ப்போம்.
டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் குறித்த மென்பொருளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மையை அறிந்து கொள்வது கட்டாயமானதாகும்.குறித்த மென்பொருள் பற்றி ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?இதனைப் பாவித்த ஏனையோர் என்ன கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்,என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரபலமான தேடற்பொறியொன்றை(Google,Yahoo,Ask) திறந்து அதில் பதிவிறக்கம் செய்யவேண்டிய கோப்பின் பெயர்,மென்பொருளின் பெயர்,மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை டைப் செய்து தேடுங்கள்.குறித்த மென்பொருளோடு அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால் அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி பட்டியற்படுத்தும்.
டவுன்லோட் செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்வதற்கு முன்னர் அதில் வைரஸ் தாக்கமேதும் உள்ளதா என கட்டாயம் பரிசோதித்து கொள்ளவேண்டும்.இல்லாவிடில் குறித்த மென்பொருளோடு சேர்த்து வைரசும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடலாம்.பின கணினியின் நிலை ஆபத்தாகிவிடும்.
எல்லாவற்றையும் விட உங்கள் கணினியை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும்.தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware,Virus என எமது கணினியில் இருந்து கொண்டு எம்மை கதிகலங்க வைத்தாலும் கவலைப்படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம்.இவற்றை கடைப்பிடித்தால் எமது கணினியை வைரஸ் மற்றும் Spywareகளிடமிருந்து பெருமளவு பாதுகாக்கலாம்...என்ன இப்போது வேறு ஏதும் டவுன்லொட் செய்கிறீர்களா///???? பரவாயில்லை..Don't worry be Happy.

கருத்துகள் இல்லை:

Share With your friends