24 அக்டோபர், 2010

திகிலூட்டும் கணினி விளையாட்டு அனுபவம்-Battle Field 2


இது என்னடா புதிததாக IT CORNERஇல் கேம்களை பற்றி சொல்கிறோமே! என்று நினைக்கிறீர்களா.. ஒவ்வொரு முறையும் மென்பொருள்களை பற்றி எழுதி அலுத்துவிட்டது..அதனால்தான் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு கணினி விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற Plan...தொடர்ந்து நாம் பார்க்க போவது Battle Field2 எனும் பெயர் கொண்ட போர்களத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கணினி விளையாட்டை பற்றியாகும்.பொதுவாக இந்த விளையாட்டை அதிநவீன போர் ஆயுதங்களை கையாளுகை செய்வதற்கான வாய்பை வழங்கும்
கணினி விளையாட்டாக அறிமுகப்படுத்தலாம்.இந்த கணினி விளையாட்டு ஒரு தனிநபரோ அல்லது குழுவோ ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.Digital Illusions CE எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டை Trauma Studios எனும் நிறுவனம் அபிவிருத்தி செய்துள்ளது.இந்த கணினி விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமாயின் விளையாடும் நபர் மூன்று அத்தியாயங்களில் சித்திபெற வேண்டும்.இதனை விளையாடும் போது 15இராணுவ வீரர்களின் துணை விளையாட்டு வீரர்ரகளுக்கு வழங்கப்படும்.
இணையத்தின் மூலம் இவ்விளையாட்டில் ஈடுபடும் போது 64வீரர்களின் துணை வழங்கப்படும்.இதனால் Online நிலையிலும் கணினி விளையாட்டை விளையாடும் வாய்ப்பு கிட்டும்.இந்த கணினி விளையாட்டில் காட்சி அமைப்புக்கள் மற்றும் ஒலிக்கலவை வரைகலை போன்றவை மிகவும் உயர் பிரிதிறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாடும் நபர் நிஜமாகவே ஒரு போர்க்களத்தில் இருக்கும் அனுபவத்தை பெறுவார் என்று இதனை வெளியட்டுள்ள Electronic Arts கருத்து தெரிவிக்கிறது.



கருத்துகள் இல்லை:

Share With your friends