இன்றைய நாட்களில் இணைய பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்று வருகின்றவை சமூக வலைப்பின்னல்கள் (Social Networks) இணையத்தளங்களே.அதாவது இன்று மனித நட்புக்கள் கிராம,நகர,நாடு போன்ற எல்லைகளை தாண்டி இணையத்தினூடாக நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் இணைய அரட்டை எனப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிட்டது.இதற்கு உதாரணம் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.Facebook,Google Talk,Yahoo messenger,AIM,Myspace என விரியும் பல தளங்கள் மூலம் நாம் நண்பர்களுடன் Chatஇல் ஈடுபடுகிறோம்.ஆனாலும் இவற்றையெல்லாம் மொத்தமாக இணைய உலாவியில் (Internet browser) இல் திறந்து வேலைசெய்கின்ற போது இணைய இணைப்பு வேகம் குறைவதுடன் கணினியும் மெதுவாக இயங்கும். சில வேளைகளில் முக்கியமான வேலை ஒன்றை செய்து கொண்டிருக்கும் போது இவை Chatting சாத்தியமாவதில்லை..இவை நாளாந்த பாவனையின் போது நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளே..இவ்வாறான இணைய சேவைகளை ஒரு மென்பொருள் மூலம் ஒரே Username மற்றும் Password கொண்டு ஒரே நேரத்தில் இயக்க முடிந்தால் எப்படியிருக்கும்....
இதனை Nimbuzz சாத்தியமாக்குகிறது.
Nimbuzz என்பது அடிப்படையில் ஒரு மொபைல் போனுக்குரிய மென்பொருளாக இருந்தாலும் இதனை கணினியிலும் பயன்படுத்தலாம்.முதலில் http://www.nimbuzz.com/en/pc/ என்ற இதனுடைய உத்தியோகபூர்வ தளத்திலிருந்து இதனை இலவசமாக பதிவிறக்கி கொள்ளுங்கள்.பின் இணைய இணைப்பு உள்ள நிலையில் இந்த மென்பொருளை இரட்டை கிளிக் (Double click) செய்யும் போது இது Open ஆகும். (படம்-01)
பின்னர் நீங்கள் இம்மென்பொருளுக்கு புதிது என்பதால் இந்த மென்பொருளில் நீங்கள் கணக்கொன்றை திறக்க வேண்டும்.அதற்கு படம்-01 இல் காட்டப்பட்டுள்ள I don't have a Nimbuzz account என்ற இணைப்பை கிளிக் செய்க .இதன் போது படம்-02 தோன்றும்.
இதில் Choose uername என்பதற்கு நேரே நிம்பஸ் Username மற்றும் பாஸ்வேரட் செல்லுபடியான மின்னஞ்சல் முகவரி இவற்றோடு குழம்பியிருக்கும் சொற்களையும் சரியான டைப் செய்த பின் NEXT பொத்தானை அழுத்துங்கள்...இப்போது கணக்கு உருவாகிவிடும்.
பின்னர் வழமை போன்று உங்கள் புதிய USERname மற்றும் Password வழங்கி Login செய்து Add accounts பகுதியில் உங்கள் Facebook,yahoo,google,myspace இப்படியான அக்கவுண்ட்களை சேர்த்து விட்டால் Hurry ..just fun......