28 மார்ச், 2010

தமிழ் எழுத்துப்பிழைகளை திருத்தும் G-mail


இவ்வளவு நாளும் செய்நிரல்களில் ஆங்கில எழுத்துப்பிழைகளையே கணினியால் இனங்கண்டுகொள்ள முடிந்தது.பின்னாளில் தமிழ் மொழி எழுத்துப்பிழைகளை கண்டறியும் தமிழ் மொழிக்கே பிரத்தியேகமான மென்பொருள்களும் பாவனைக்கு வந்தன.ஆனால் இணைய மின்னஞ்சல் சேவையை வழங்கும் Yahoo,Google போன்ற நிறுவனங்கள் ஆங்கில எழுத்துப்பிழைகளை கண்டறியும் செய்நிரல்களை தமது இணைய மின்னஞ்சல் சேவையுடன் இணைத்துக் கொண்டன.இப்போது அதிகம் பிரபல்யமாகி வரும் Gmail மின்னஞ்சல் சேவை தமிழ் எழுத்துப்பிழைகளை திருத்தும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் கூகிள் தனது இச்சேவையை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகிறது.இதனால் நாம் அறியாத பல புதிய சொற்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பேற்படுகிறது.இனியென்ன கூகிள் ரெடி...நீங்க ரெடியா????

-A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends