2 ஏப்ரல், 2010

ஃளாப்பி டிஸ்க்கின் கதை


ரிமூவபிள் ஸ்டோரேஜ்(Removable storage) இன் வரலாற்றில் முக்கிய சேமிப்பு கருவிகளின் வரிசையில் ஃளாப்பிடிஸ்க்குக்கு தனி இடம் உண்டு இப்போது மெமரி கார்ட்கள்.பென்ட்ரைவ்கள் போன்ற பல வசதிகளுடன் சேமிப்புகருவிகள் வந்துவிட்டாலும் ஃளாப்பியை பயன்படுத்துபவர்கள் பலர் உள்ளனர்.இதற்கு காரணம் ஃளாப்பி குறைந்த விலைக்கு கிடைக்கும்.,தகவல்களை
அழித்து விட்டுபதிந்து கொள்ளலாம்.மேலும் எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.இவைமிக குறைவான தகவல்களை மட்டுமே சேமிக்கவல்லன என்பதால் இதை பெரும்பாலும் பூட்டிஸ்க்குகளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.எளிதில் கரப்ட் ஆகிவிடுவதும் ஃளாப்பிகளின் முக்கிய குறைபாடு,இந்த ஃளாப்பி தன் வாழ்கைப் பயணத்தை தொடங்கிய ஆண்டு 1970.இது மேக்னடிக் ரெக்கார்டிங் கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது.தகவலை சேமிக்கவும் திருப்ப எடுக்கவும் காந்ததலைகள் (Magnetic head) இருக்கும்.ஃளாப்பி டிஸ்கின் வேகம் 300 சுற்றுக்கள் நிமிடத்துக்கு (300RPM) எனவும் கூறுவர்.RPM என்றால் Rotations per minute என்று பொருள்.ஃளாப்பியின் மேல் பகுதியில் ஒரு நகர்வி (Ceramic slider) உள்ளது.அதில் ஒரு ஹெட்டானது Flexible டிஸ்க் ஒன்றுடன் உராயும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த Flexibleடிஸக் இரு புறமும் Polyethylene terephth alate(PET) என்றொரு பொருளால் மூடப்பட்டுள்ளது.மேலும் இதனுடன் Magnetic iron oxide பொருட்களும் கலந்துள்ளன.ஃளாப்பியில் காட்ரிஜ் எனப்படும் பகுதி மிக முக்கியமானதாகும்.இது டிஸக்கின் சுழலும் வேகத்தை கட்டுப்படுத்துவதோடு டிஸ்க்கை சுத்தமாக்குவதிலும் உதவி புரிகிறது

Concepte By
A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends