ஆக்கியோனின் சிந்தனையிலிருந்து.....
இலவச Video Training
இலகுவாகவும் இலவசமாகவும் கற்பதற்கு நமக்கு உதவுகின்ற முதன்மை ஊடகமாக இணையத்தை குறிப்பி்ட்டால் அது மிகையாகாது.நமக்கு தேவையான பாடநெறிகளை பல முறைகளிலும் இணையத்தில் கற்றுக்கொள்ள முடிகின்ற போதிலும் அவற்றினுள்ளே Video training என்ற
முறையே தற்பொழுது பிரபல்யமடைந்து வருகிறது.ஆசிரியரற்ற ஆனால் ஆசிரியரால் கற்பிக்கப்படுவதை போன்ற ஒரு முறையை கொண்டதே இந்த Video training முறையாகும்.Photoshop,3D Max,Dreamweaver,Flash,Illustrator,MSOffice உட்பட மேலும்
பல பாடநெறிகளை Video training மூலம் இலகுவாக கற்றுக் கொள்ளக்கூடிய வசதியை vidro-tutes எனும் இணையத்தளம் இலவசமாக தருகிறது.இவ் தளத்திற்கான இணைய முகவரி www.video-tutes.com ஆகும்.
இணையத்திலிருந்தபடியே எல்லாம் செய்யலாம்...
நாம் இதுவரை MS Word,Powerpoint,Excel போன்றவற்றை நமது கணினியில் நிறுவி பாவித்து வந்தோம்.ஆனால் இனி அதற்கான அவசியமிருக்காது போலிருக்கிறது.ஏனென்று கேட்கிறீர்களா? ஏனெனில் இணையத்திலிருந்த படியே இதே வேலைகளை எந்த ஒரு சிரமமும்
இல்லாமல் விரைவாவும் துல்லியமாகவும் செய்து கொள்ளலாம்.அதற்கு zoho இணையத்தளம் உதவுகிறது.Word,Excel,Powerpoint,Access போன்றவற்றில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இத் தளத்திலிருந்தபடியே இலவசமாக செய்யலாம்.இதில்
நன்மை என்னவென்றால் நாம் MS Office இல் வேலைசெய்யும் போது வன்தட்டு கொள்ளளவு பிரச்சுனை,மென்பொருள் இயங்க கணினி Support செய்கிறதா? என்று பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்குவோம்.ஆனால் இத்தளத்தில் இப்பிரச்சினைகள் ஏற்படாது.
இவ் இணையத்தளத்திற்கான முகவரி www.zoho.com என்பதாகும்.
Windows ஐ அழகூட்ட...
இந்த தலைப்பை பார்த்து ஏதோ உங்கள் வீட்டு ஜன்னல்களுக்கான வழிமுறை என்று எண்ணிவிடாதீர்கள்,நான் குறிப்பிடுவது உங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தை.காலத்துக்கு காலம் இயங்கு தளங்களும் அவற்ற்ன் வடிவமைப்புக்களும் மாற்றமடைந்து
வருகின்றன.Windows95,98,2000,xp என உருவெடுத்த இயங்கு தளங்கள் தற்போது கண்ணைக்கவரும் விதத்தில் Windows vista வாக வெளிவந்துள்ளது.அதிலும் ஒரு படிமேலே போய் இவ்வருடம் Windows 7 ஐ மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.ஆனாலும் பலர்
இன்னும் Windows XP யையே பாவித்து வருகின்றனர்.அப்படியானவர்கள் தங்கள் கணினியை விண்டோஸ் விஸ்டாவின் வடிவத்திற்கு மாற்ற முடியுமா?ஆம் விண்டோஸ் விஸ்டாவின் தோற்றத்திற்கு மட்டுமல்ல பல புதுவகையான வடிவங்களுக்கும் உங்கள் கணினியை
மாற்றலாம்.அதுமட்டுமன்றி Menu,Icons,Desktop,Cursor,Bootskin போன்றவற்றையும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு விருப்பம்போல மாற்றிக் கொள்ளலாம்.இந்த தளத்தின் முகவரி www.stardock.com ஆகும்.
10 நிமிடம் மட்டும்.
இணையத்தில் பல சேவைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வங்காட்டும் போது அவற்றை பெறுவதற்கு Sign Up செய்கையில் எமது மின்னஞ்சல் முகவரியை வழங்குவது கட்டாயமாகிறது.இதனால் எமது மின்னஞ்சல் பெட்டிக்கு வகைதொகையின்றி Spamகள் வர வாய்ப்பேற்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக 10 நிமிடம் மட்டும் செயற்படும் தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியை தரும் இணையத்தளமொன்று உள்ளது.இதனை பெறுவதற்கு எந்தவித படிவமும் நிரப்பவேண்டியதில்லை.அத் தளத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்ததும் எமக்குரிய மின்னஞ்சல்
முகவரி தரப்படும்.10 நிமிடங்களுக்கு அந்த முகவரிக்கு எந்த மின்னஞ்சல் வந்தாலும் அவற்றையும் பார்க்க முடியும். பதில் அனுப்பவும் முடியும்.10 நிமிடம் போதாதென்றால் இன்னுமொரு 10 நிமிடம் அதிகமாக கேட்கலாம்.தற்காலிக முகவரியை உருவாக்கி மின்னஞ்சல் சேவையை
பெறுவதால் எமக்கு Spam தொல்லை இருக்காது.இவ் அனுபவத்தை நீங்களும் பெற செல்ல வேண்டிய தளம் www.10minutemail.com ஆகும்.
இணையத்தில் இலவசமாக இடம்..
இது நீங்கள் வீடு கட்டுவதற்கல்ல.கோப்புகளை பரிமாறி கொள்வதற்கு.பொதுவாக நாம் ஃபைல்களை பரிமாறுவதற்கு E-mail களை பயன்படுத்தி வருகின்றோம்.மின்னஞ்சல் மூலம் சிறிய கொள்ளளவை கொண்ட(20MB)ஃபைல்களையே இணைத்து அனுப்பலாம்.ஆனால் 100MB கொள்ளளவுடைய
ஃபைல்களை இலவசமாக பரிமாறக்கூடிய வகையில் இவ் இணையத்தளம் காணப்படுகிறது.இங்கே நமக்கு தேவையான Image,Video,exe,zip வகையை சார்ந்த எந்த ஃபைல்களையும் அப்லோட் செய்து கொள்ள முடியும்.இவ்வாறு அப்லோட் செய்ததும் அந்த ஃபைல்களுக்குரிய Download link நமக்கு
வழங்கப்படும்.இந்த லிங்கை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.தெற்கான முகவரி www.mediafire.com என்பதாகும்.
இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல்வேறு சாதனைகள் எட்டப்பட்டு வருகின்றன.அதற்கு சான்றாக இணையத்தை குறிப்பிட்டால் அது மிகையாகாது.ஆரம்ப காலங்களில் குறிப்பி்ட்டு சொல்லக்கூடிய அளவில் காணப்பட்ட இணையத்தளங்கள் இன்று கோடிக்கணக்கான எண்ணிக்கையில் பரந்துள்ளன.அதிலும் தற்காலங்களில் தமிழ் தளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது பெருமைப்பட வேண்டிய விடயம் தான்.எத்தனை கோடி இணையத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் நாங்கள் குறிப்பிட்ட சில் தளங்களுக்குள்ளேயே
சுற்றிக் கொண்டிருக்கிறோம்.ஆனாலும் நாமறியாத பல சவாரஸ்யமான தளங்களும் இணையப்பரப்பில் உலா வருகின்றன.அவ்வாறு நான் உலாவரும் (Browsing) போது அகப்பட்ட தளங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அனைத்தையும் ஒரே நேரத்தில் தருவது சிரமமாக இருப்பதால்
வாரத்திற்கு 5 தளங்கள் வீதம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இந்த இடுகை வாரந்தோறும் புதுப்பிக்கபடுவதால் தொடர்ந்தும் இணைப்பில் இருங்கள்....
A.Shanojan
இலவச Video Training
இலகுவாகவும் இலவசமாகவும் கற்பதற்கு நமக்கு உதவுகின்ற முதன்மை ஊடகமாக இணையத்தை குறிப்பி்ட்டால் அது மிகையாகாது.நமக்கு தேவையான பாடநெறிகளை பல முறைகளிலும் இணையத்தில் கற்றுக்கொள்ள முடிகின்ற போதிலும் அவற்றினுள்ளே Video training என்ற
முறையே தற்பொழுது பிரபல்யமடைந்து வருகிறது.ஆசிரியரற்ற ஆனால் ஆசிரியரால் கற்பிக்கப்படுவதை போன்ற ஒரு முறையை கொண்டதே இந்த Video training முறையாகும்.Photoshop,3D Max,Dreamweaver,Flash,Illustrator,MSOffice உட்பட மேலும்
பல பாடநெறிகளை Video training மூலம் இலகுவாக கற்றுக் கொள்ளக்கூடிய வசதியை vidro-tutes எனும் இணையத்தளம் இலவசமாக தருகிறது.இவ் தளத்திற்கான இணைய முகவரி www.video-tutes.com ஆகும்.
இணையத்திலிருந்தபடியே எல்லாம் செய்யலாம்...
நாம் இதுவரை MS Word,Powerpoint,Excel போன்றவற்றை நமது கணினியில் நிறுவி பாவித்து வந்தோம்.ஆனால் இனி அதற்கான அவசியமிருக்காது போலிருக்கிறது.ஏனென்று கேட்கிறீர்களா? ஏனெனில் இணையத்திலிருந்த படியே இதே வேலைகளை எந்த ஒரு சிரமமும்
இல்லாமல் விரைவாவும் துல்லியமாகவும் செய்து கொள்ளலாம்.அதற்கு zoho இணையத்தளம் உதவுகிறது.Word,Excel,Powerpoint,Access போன்றவற்றில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இத் தளத்திலிருந்தபடியே இலவசமாக செய்யலாம்.இதில்
நன்மை என்னவென்றால் நாம் MS Office இல் வேலைசெய்யும் போது வன்தட்டு கொள்ளளவு பிரச்சுனை,மென்பொருள் இயங்க கணினி Support செய்கிறதா? என்று பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்குவோம்.ஆனால் இத்தளத்தில் இப்பிரச்சினைகள் ஏற்படாது.
இவ் இணையத்தளத்திற்கான முகவரி www.zoho.com என்பதாகும்.
Windows ஐ அழகூட்ட...
இந்த தலைப்பை பார்த்து ஏதோ உங்கள் வீட்டு ஜன்னல்களுக்கான வழிமுறை என்று எண்ணிவிடாதீர்கள்,நான் குறிப்பிடுவது உங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தை.காலத்துக்கு காலம் இயங்கு தளங்களும் அவற்ற்ன் வடிவமைப்புக்களும் மாற்றமடைந்து
வருகின்றன.Windows95,98,2000,xp என உருவெடுத்த இயங்கு தளங்கள் தற்போது கண்ணைக்கவரும் விதத்தில் Windows vista வாக வெளிவந்துள்ளது.அதிலும் ஒரு படிமேலே போய் இவ்வருடம் Windows 7 ஐ மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.ஆனாலும் பலர்
இன்னும் Windows XP யையே பாவித்து வருகின்றனர்.அப்படியானவர்கள் தங்கள் கணினியை விண்டோஸ் விஸ்டாவின் வடிவத்திற்கு மாற்ற முடியுமா?ஆம் விண்டோஸ் விஸ்டாவின் தோற்றத்திற்கு மட்டுமல்ல பல புதுவகையான வடிவங்களுக்கும் உங்கள் கணினியை
மாற்றலாம்.அதுமட்டுமன்றி Menu,Icons,Desktop,Cursor,Bootskin போன்றவற்றையும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு விருப்பம்போல மாற்றிக் கொள்ளலாம்.இந்த தளத்தின் முகவரி www.stardock.com ஆகும்.
10 நிமிடம் மட்டும்.
இணையத்தில் பல சேவைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வங்காட்டும் போது அவற்றை பெறுவதற்கு Sign Up செய்கையில் எமது மின்னஞ்சல் முகவரியை வழங்குவது கட்டாயமாகிறது.இதனால் எமது மின்னஞ்சல் பெட்டிக்கு வகைதொகையின்றி Spamகள் வர வாய்ப்பேற்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக 10 நிமிடம் மட்டும் செயற்படும் தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியை தரும் இணையத்தளமொன்று உள்ளது.இதனை பெறுவதற்கு எந்தவித படிவமும் நிரப்பவேண்டியதில்லை.அத் தளத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்ததும் எமக்குரிய மின்னஞ்சல்
முகவரி தரப்படும்.10 நிமிடங்களுக்கு அந்த முகவரிக்கு எந்த மின்னஞ்சல் வந்தாலும் அவற்றையும் பார்க்க முடியும். பதில் அனுப்பவும் முடியும்.10 நிமிடம் போதாதென்றால் இன்னுமொரு 10 நிமிடம் அதிகமாக கேட்கலாம்.தற்காலிக முகவரியை உருவாக்கி மின்னஞ்சல் சேவையை
பெறுவதால் எமக்கு Spam தொல்லை இருக்காது.இவ் அனுபவத்தை நீங்களும் பெற செல்ல வேண்டிய தளம் www.10minutemail.com ஆகும்.
இணையத்தில் இலவசமாக இடம்..
இது நீங்கள் வீடு கட்டுவதற்கல்ல.கோப்புகளை பரிமாறி கொள்வதற்கு.பொதுவாக நாம் ஃபைல்களை பரிமாறுவதற்கு E-mail களை பயன்படுத்தி வருகின்றோம்.மின்னஞ்சல் மூலம் சிறிய கொள்ளளவை கொண்ட(20MB)ஃபைல்களையே இணைத்து அனுப்பலாம்.ஆனால் 100MB கொள்ளளவுடைய
ஃபைல்களை இலவசமாக பரிமாறக்கூடிய வகையில் இவ் இணையத்தளம் காணப்படுகிறது.இங்கே நமக்கு தேவையான Image,Video,exe,zip வகையை சார்ந்த எந்த ஃபைல்களையும் அப்லோட் செய்து கொள்ள முடியும்.இவ்வாறு அப்லோட் செய்ததும் அந்த ஃபைல்களுக்குரிய Download link நமக்கு
வழங்கப்படும்.இந்த லிங்கை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.தெற்கான முகவரி www.mediafire.com என்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக