22 மார்ச், 2010

கணினியை பராமரிக்க 7 வழிகள் பாகம்-02

வழிமுறை-03(பேக்கிரவுண்ட் புரோகிராம்கள்) 


கணினியில் நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் புரோகிராமை தவிர வேறு சில புரோகிராம்களும் பேக்கிரவுண்டில் ரன் ஆகிக் கொண்டிருக்கும்.இந்த புரோகிராம்கள் கணினியின் பெரும்பான்மையான ரிசோர்ஸ்களை பயன்படுத்துவதால் கணினியின் வேகம் குறைகிறது.எந்தெந்த புரோகிராம்கள் உங்கள் கணினி பின்புலத்தில் ரன் ஆகின்றன.என்பதனை தெரிந்து கொள்ள டெக்ஸ்டாப்பின் கீழே வலது மூலையில் டைம் ஐகானுக்கு அருகே உள்ள சிறு ஐகான்களை பார்த்தால் தெரியும்.இவ்வகையான புரோகிராம்கள் உங்களுக்கு வேண்டியவற்றை உடனே லோட் செய்ய உதவிடும்.ஆனால் இதில் எல்லா புரோகிராம்களும் உங்களுக்குத் தேவைப்படும் என்று சொல்ல முடியாது.எனவே பேக்கிரவுண்டில் உங்களுக்கு தேவையான புரோகிராம்களை ரன் செய்யும்படி செய்து வேண்டாத புரோம்கிராம்களை நீக்கிவிடுவது நல்லது.இதற்கு டெக்ஸ்டாப்பில் உள்ள Start ப்ட்டனை கிளிக் செய்து அதனுள் இருக்கும் ரன் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.Run விண்டோவில் msconfig என்று தட்டச்சு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.திரையில் தோன்றும் System configuration utility விண்டோவில் உள்ள Startup டேபை கிளிக் செய்யவும்.பேக்ரவுண்டில் ரன் ஆகும் புரொக்கிராம்களின் லிஸ்ட் திரையில் தோன்றும்.அவற்றில் உங்களுக்கு எந்தெந்த புரோகிராம்கள் ரன் ஆக வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்வு செய்து மற்றவைகளை தேர்வு செய்யாமல் விட்டுவிடவும்.கடைசியாக Apply பட்டனை கிளிக் செய்து பின்னர் ஓகே பட்டனை அழுத்தவும். 

 வழிமுறை-04(டெம்பரரி ஃபைல்கள்) 


பொதுவாக தற்காலிக ஃபைல்கள் உங்கள் ஹார்ட்டிஸக்கில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பவைகளாகும்.இவ்வகையான ஃபைல்கள் ஒரு சிலநேரங்களை தவிர பெரும்பாலான நேரங்களில் நமக்கு பயன்படுவதில்லை.நீங்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புரோகிராமை பயன்படுத்தும்போதோ அல்லது நிறுவும் போதோ தற்காலிக ஃபைல்கள் உருவாகின்றன.பயன்படுத்திய ஒரு புரோகிராமை மறுபடியும் பயன்படுத்தும் போது டெம்பெரரி ஃபைல்களின் உதவியால் உங்கள் கணினியின் வேகத்தை கூட்டுகின்றன. சான்றாக இணையத்தளத்தில் நீங்கள் ஏதாவது ஒரு இணையப்பக்கத்தை பயன்படுத்தும்போது அதைச்சார்நத ஃபைல்கள் தற்காலிக ஃபைல்களாக பதிவாகின்றன.மீண்டும் அதே இணையப்பக்கத்தை நீங்கள் திறக்கும் போது டெம்பரரி ஃபைல்களின் உதவியுடன் மிக வேகமாக இணையப்பக்கம் திறக்கும்.மேலோட்டமாக இது உண்மையாக தெரிந்தாலும் நடைமுறையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு இணையப்பக்கத்தை திறக்க முற்படும் போது அந்த இணையப்பக்கத்தை சார்ந்த ஃபைல்கள் டெம்பரரி இன்டர்நெட் ஃபைல்கள் ஃபோல்டரில் பதிந்துள்ளதா என்று ஒவ்வொரு ஃபைலாக தேடிப்பார்க்கும் இதனால் அதிக நேரம் வீணாகிறது.இதனால் கணினியின் வேகம் குறைகிறதே தவிர கூடுவதில்லை.எனவே தற்காலிக ஃபைல்களை அழித்துவிடுவது கணினியின் வேகத்தை கூட்டும் என்பதுதான் உண்மை. தற்காலிக இணையஃபைல்களை கணினியிலிருந்து நீக்குவதற்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விண்டோவை திறந்து Tools மெனுவை தேர்வு செய்து அதனுள் இருக்கும் Internet options ஐ கிளிக் செய்யவும்.Internet options விண்டோவில் உள்ள Delete files என்ற பட்டனை கிளிக் செய்யவும்.Delete all offline content என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஓகே பட்டனை அழுத்தவும். குறிப்பு:- இங்கு இன்டர்நெட் எக்ஸப்ளோரர் இல் டெம்பரரி ஃபைல்கள் அழிப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனாலும் இதே வேலைகளை Mozila firefox,Google chrome போன்றவற்றிலும் மேற்கொள்ளலாம்.அப்படிமுறைகளை விரைவில் எதிர்பாருங்கள்....... 

 Create By A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends