24 மார்ச், 2010

இணையத்தில் குவிந்து கிடக்கும் இமேஜ் வியூவர்கள் பாகம்-03

No 10 My view pad(மைவியூபேட்)
ஒரு இமேஜை பற்றிய தகவல்களை முற்றிலும் காட்ட பக்கவாட்டில் ஒரு தொகுதி இணைந்துள்ளது.72 வகையான இமேஜ் ஃபார்மட்டுகளை ஆதரிக்கும் வியூவரும் 28வகை இமேஜ்களுக்கு எடிட்டிங் வசதியும் இதில் உள்ளன.ஸ்லைடுஷோ,Bestfit போன்ற இமேஜ்
வியூவருக்கான எல்லா வசதிகளும் உள்ளன.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.

  • கிடைக்கும் தளம்-www.fcoder.com
  • ஃபைல் அளவு-2.88 எம்பி
No 09 Inzomia viewer(இன்சோமியா வியூவர்)

ஸ்லைடுஷோ வசதி பல வகை ட்ரான்சிஷன் எஃபெக்ட்களுடன் கிடைக்கிறது.Zip ஃபைல்களாக உள்ள இமேஜ்களையும் கையாள இயலும்.மீடியாப்ளர்களில் பாடல்களை ப்ளேலிஸ்டாக உருவாக்குவது போல இந்த மென்பொருளிலும் இமேஜ்களை ப்ளேலிஸட் ஆக
உருவாக்க இயலும்.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.

  • கிடைக்கும் தளம்-www.izview.com
  • ஃபைல் அளவு-1 எம்பி
No 08 One cat viewer(ஒன் கேட் வியூவர்)
50க்கும் மேற்பட்ட ட்ரான்சிஷன் எஃபெக்ட்களுடனான ஸ்லைட்ஷோ வசதி மற்றும் சில எளிய ஆப்ஷன்களுடன் கூடிய இமேஜ் எடிட்டிங் வசதி உள்ளது.இமேஜ் ஃபார்மட் கன்வெட்டர் வசதி உள்ளது.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
  • கிடைக்கும் தளம்-www.onecatweb.com
  • ஃபைல் அளவு-2.06 எம்பி
No 07 P3DO-Explorer(பி3டூ எக்ஸ்ப்ளோரர்)
50க்கும் மேற்ப்பட்ட இமேஜ் பார்மட்களை ஆதரிக்கும்.Zip ஃபைல்களை அப்படியே பார்க்க இயலும்.Slide show,Image rotating,Sorting,Bestfit போன்ற வசதிகள் உள்ளன.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
  • கிடைக்கும் தளம்-www.sensoft.com
  • ஃபைல் அளவு-1.73 எம்பி   
No 06 Jet photo studio(ஜெட் போட்டோ ஸ்டூடியோ)
போட்டோ ஆல்பம்கள் உருவாக்கி நேரடியாக இணையத்திற்கு பதிவேற்றம் செய்ய இயலும்.போட்டோ ஆல்பத்தை எச்டிஎம்எல் கோப்பாக மாற்ற இயலும்.இமேஜ்களை ப்ளாஷ் பைல்களாக மாற்ற இயலும்.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
  • கிடைக்கும் தளம்-www.jetphotosoft.com
  • ஃபைல் அளவு-8.26 எம்பி  
No 05 Photos control
இதல் இமேஜ் எடிட்டரும் இணைந்துள்ளது.இமேஜின் செய்திகளை மாற்ற Tag editor உள்ளது.அடிப்படை எடிட்டிங் டூல்களும் கன்வட்டரும் இணைந்துள்ளது.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
  • கிடைக்கும் தளம்-www.softartstudio.com அல்லது www.softartstudio.com/photos control
  • ஃபைல் அளவு-4.50 எம்பி  
No 04 Force vision(ஃபோர்ஸ் விஷன்)
50 வகை இமேஜ் பார்மட்களை ஆதரிக்கும்.அடிப்படை வசதிகளுடன் ஏனைய இணைப்பாக 30 வகை ட்ரான்சிஷன் மற்றும் பில்டர்கள் உள்ளன.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்
  • கிடைக்கும் தளம்-www.forcevision.net
  • ஃபைல் அளவு-1.33 எம்பி 
No 03 VMI-Periscopeimage viewer
மிக எளிய ஆப்ஷன்களுடைய இமேஜ் வியூவர் ஆகும்.பில்டர் வசதி உள்ளது.பைல் அனிமேஷன் வசதி இதில் சிறப்பம்சமாக உள்ளது.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
  • கிடைக்கும் தளம்-www.papyrussoftware.com
  • ஃபைல் அளவு-1.44 எம்பி 
No 02 Photozing Albums
Sorting,filtering,Slideshow போன்ற இமேஜ் வியூவரின் வசதிகளனைத்தும்இதில் உள்ளன.இமேஜ் எடிட்டிங் டூல்கள் உள்ளன.ஸ்கிரீன் சேவர் உருவாக்கும் வசதி உள்ளது.CD Burning வசதியும் உண்டு.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
  • கிடைக்கும் தளம்-www.my.photozig.net
  • ஃபைல் அளவு-8.37 எம்பி  
No 01 Media pureveyor
இது ஒரு இமேஜ் வியுவர் மட்டுமல்ல.இதில் ஒரு வலை உலாவி (Web browser), ஒரு எடிட்டர்,பப்ளிஷர்,மீடியா ப்ளயர்,ஸடலைடுஷோ மேனஜர்,ஸ்கிரீன் கேப்சரிங் மென்பொருள்,இமேஜ் கன்வட்டர்,போன்றவை உள்ளன.இமேஜ் எடிட்டரில் பல முன்னேற்றமான
வசதிகள் உள்ளன.போட்டோஷாப்பில் செய்யக்கூடிய பல பணிகளை இந்த மென்பொருளை கொண்டே செய்யலாம்.நமது கணினியில் உள்ள ஃபைல்களை தேடும் வசதி இதிலுள்ளது.வணிக நோக்கமற்ற பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
  • கிடைக்கும் தளம்-www.mediapurveyor.com
  • ஃபைல் அளவு-4.43எம்பி
                                                                         

கருத்துகள் இல்லை:

Share With your friends