22 மார்ச், 2010

கணினியை பராமரிக்க 7 வழிகள்


கணினியை பொறுத்த வரை ஒரு சிலர் மட்டுமே வாங்கி
பயன்படுத்திகொண்டிருந்த காலம் போய் இன்று பெரும்பாலான நடுத்தர மக்களும் வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்ட மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டு வருகிறது.மின்னணு சாதனங்களை பொறுத்தவரை நமக்குத் தேவையான
பொருளை தேடிப்பிடித்து வாங்குவது எளிதாக இருந்தாலும் அதனை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டியதும் நமது முதன்மையான கடமை
ஆகும்.நாம் புதிதாக கணினியை வாங்கும் போது நமது தேவைக்கேற்ப அதாவது நாம் பயன்னடுத்தவிருக்கும் மென்பொருட்களை மனதில் கொண்டு
அதற்குரிய வன்பொருள்கள் அடங்கிய கணினியை வாங்குகின்றோம்.தொடக்கத்தில் நல்ல வேகத்தில் செயல்படும் கணினி நாளாக நாளாக சிறிது
சிறிதாக செயலில் வேகம் குறைந்து கொண்டே வருவதை நம்மால் அறிய முடியும்.கணினியின் வேகம் கணினி வாங்கிய புதிதில் எப்படி இருந்ததோ
அதே வேகத்தை மீண்டும் கொண்டுவர கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏழு வழிகளை பின்னற்றலாம்.

வழிமுறை-01(Scan disk)

மாதத்திற்கு ஒரு முயையேனும் தவறாது ஸ்கேன்டிஸ்கை பயன்படுத்தவேண்டும்.ஸ்கேன்டிஸ்க் செயற்பாடு முழுமையாக நடந்து முடிந்து விட்டால் உங்கள்
ஹார்ட்டிஸ்க்கில் பதிந்து வைக்கப்பட்ட அனைத்து டேட்டாக்களையும் எந்த தடையும் இன்றி படிக்கலாம்.ஸ்கேன் டிஸக் ஸ்கேன் செய்வதால் கணினியின்
வேகம் எப்படி கூடுகிறது?சான்றாக ஹார்டிஸக்கில் பதிந்துள்ள ஒருஃபைலை படிக்க முயற்சி செய்யும் போது குறிப்பிட்ட அந்த ஃபைல் சரியான முறையில்
ஹார்ட்டிஸக்கில் பதிந்து இருக்காவிட்டால் கணினியினால் படிக்க இயலாது.மேலும் அதோடு நிற்காமல் குறிப்பிட்ட ஃபைலை படிப்பதற்கு தொடர்ந்து முயந்சி
செய்து கொண்டே இருக்கும்.இதன் விளைவாக கணினியின் வேகம் குறிப்பிட்ட ஃபைலை ஹார்ட்டிஸக்கிலிருந்து எடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
இதுபோன்ற ஸ்டோரேஐ் எரர்ஸ்(Storage errors) ஏற்படாமல் தடுப்பதற்கு ஸகேன் டிஸக் பெரிதும் உதவுகிறது.ஸ்கேன் டிஸக் ஆப்ஷனை அடிக்கடி
பயன்படுத்துவதனால் ஹார்ட்டிஸக்கில் பதிந்திருக்கும் அனைத்து டேட்டாக்களும் சீராக அமையப்பெற்று நாம் வேண்டிய ஃபைலை கேட்கும்போது உடனுக்குடன்
விரைவாக எடுத்துக் கொடுக்க உதவுகிறது.ஸ்கேன் டிஸக்கை ரன் செய்வதற்கு டெக்ஸ்டாப்பில் உள்ள மைகம்பியூட்டர் ஐகானை இரட்டை கிளிக் செய்து எந்த ட்ரைவ்
ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த ட்ரைவின் மீது கர்கரை வைத்து வலது கிளிக் செய்து Properties ஆப்ஷனை தேர்வு செய்யவும்.Properties விண்டோவில்
உள்ள Tools பட்டனை கிளிக் செய்து அதனுள் இருக்கும் Checknow என்ற பட்டனை கிளிக் செய்யவும்.ஸ்கேன் செய்ய தொடங்கும் முன்னர் Standard மற்றும்
Thorough ஆகிய மோட்களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.

வழிமுறை-02 டீஃப்ரேக் (Defrag) 

  










வாரத்தில் குறைந்த பட்சம் பதினான்கு மணிநேரம் உங்கள் கணினியை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் டீஃப்ரேகை
பயன்படுத்தவேண்டும்.கணினியில் நீங்கள் ஏதாவது ஒரு ஃபைலை பதித்து வைக்க முற்படும் போது ஃபைலானது சிறுசிறு பாகங்களாக ஹார்ட்டிஸக்கில் பரவலலாக
பதிந்துவிடும்.குறிப்பிட்ட ஃபைலை பயன்படுத்தும் போது ஆங்காங்கே பதிந்து இருக்கும் குறிப்பிட்ட ஃபைலின் பாகங்களை தேடிஎடுக்க கணினிக்கு அதிக நேரம் தேவை
படுகிறது.இதனால் உங்கள் கணினியின் வேகமும் குறைகிறது.டிஸ்க்டீஃப்ராக்மென்டர்(Disk defregmenter) என்றழைக்கப்படும் டீஃப்ரேகை பயன்படுத்துவதால்
ஆங்காங்கே பதிந்து இருக்கும் ஃபைல்களின் பாகங்கள் ஒரே சீராக ஹார்ட்டிஸக்கில் பதியப்பெறும்.இதனால் ஒரு ஃபைலை நாம் பயன்படுத்தும் போது உடனடியாக
கணினியினால் எடுத்துத்தர முடிகிறது.இதனால் கணினியின் வேகமும் கூடுகிறது.டிஸக்டீப்ரெக்மென்டை ரன் செய்ய டெக்ஸ்டாப்பில் உள்ள மைகம்பியூட்டர் ஐகானை
இரட்டை கிளிக் செய்து எந்த ட்ரைவ் டபிள் கிளிக் செய்து திறந்து எந்த ட்ரைவை டீப்ரக்மென்ட் செய்ய வேண்டுமோ அந்த ட்ரைவின் மீது கர்கரை வைத்து வலது கிளிக்
செய்து Properties ஆப்ஷனை தேர்வு செய்யவும்.Properties விண்டோவில் உள்ள Tools பட்டனை கிளிக் செய்து அதனுள் இருக்கும் Defrag என்ற பட்டனை
கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் உங்கள் கணினியின் வேகத்தை அதிகர்ப்பதற்கான 2 வழிமுறைகளை தெரிந்து பொண்டீர்கள்.ஏனைய 5 வழிமுறைகளை எனது அடுத்த இடுகையில்
எதிர்பாருங்கள்........
எனது இடுகைகளில் உங்களுக்கு போதிய விளக்கம் கிடைக்காவிட்டாலோ அல்லது உங்களுக்கு இந்த செயன்முறைகள் வெற்றியளிக்காவிட்டாலோ கருத்துக்கள் பகுதியில்
அவற்றை குறிப்பி்ட மறக்காதீர்கள்.மேலும் எனது இடுகைகளில் எவ்வாறானவற்றை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..மற்றும் நாளாந்த கணினி பாவனையின் போது நீங்கள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் இங்கு குறிப்பிடுங்கள்.அவை இவ் வலைப்பதிவை இற்றைப்படுத்த பெரிதும் உதவும்...
தொகுத்து தந்தவர்
A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends