27 மார்ச், 2010

You Tube வீடியோக்களை Download செய்தல்



You Tube என்றாலே அதன் அமைப்பு,வியாபிப்பு,உரிமையாளர் என அனைத்து விடயஙகளும் உங்கள் மனக்கண் முன்னே காட்சியாக தொடங்கும்.தொடரறா(Online)நிலையில் வீடியோக் கோப்புக்களை பகிர்ந்து கொள்வதை சாத்திய மாக்கிய ஓர் உன்னத முயற்சியாகும்.

You Tube இணையத்தளத்தில் காணப்படும் வீடியோ கோப்புக்களை Online நிலையில் இருந்தவாறு பார்க்கலாமே தவிர அதனை எமது கணினிக்கு பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியாது.பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான எந்த இணைப்பும் குறித்த
இணையத்தளத்தில் காணப்படாது.ஆனால் இன்றைய நிலையில் பல இணையத்தளங்கள் You Tube வீடியோக் கோப்புக்களை பதிவிறக்கம் செய்யும் சாத்தியங்களை உருவாக்கி பயனர்களுக்கு அச்சேவையை வழங்குகின்றன.இவ்வாறு சேவை வழங்கும் தளங்களில்
பரபல்யமானது Save tube எனப்படும் தளமாகும்.இத்தளம் மூலமாக யூ டியூப் தளத்தில் காணப்படும் வீடியோக்களை எமது கணினிக்கு தரவிற்க்கம் செய்யலாம்.

முதலில் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய வீடியோக் கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
பின்னர் அவ்வீடியோவிற்கான URL ஐ Copy செய்து Save tube தளத்தில் Video to save என்ற கூட்டுக்கு எதிரே உள்ள Text box இல் Paste செய்யுங்கள.
பின்னர் வலைப்பக்கத்தின் காணப்படும் Get download URL என்பதை கிளிக் செய்யவும்.குறித்த வீடியோவை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு திரையில் தோன்றும்.அந்த இணைப்பை கிளிக் செய்தால் You tube வீடியோ எமது கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும்.இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் வீடியோக்களை FLV பார்மட்களை ஆதரிக்கும் எந்தவொரு ப்ளயரிலும் காணமுடியும்.உங்களிடம் FLV பார்மட்டை ஆதரிக்கும் மீடியா பளயர் இல்லையெனில் இங.கே கிளிக் செய்தால் நீங்கள் அதனை இலவசமாக பெறலாம். இனியென்ன உங்களுக்கு பிடித்த வீடியோக்களை பதிவிறக்கி உங்கள் பொழுதுகளை இனிமையானதாக மாற்றுங்கள்.Simple but amazing....

Concepte By
A.Shanojan    

கருத்துகள் இல்லை:

Share With your friends