23 மார்ச், 2010

இணையத்தில் குவிந்து கிடக்கும் இமேஜ் வியூவர்கள்








கணினியில் இமேஜ் ஃபைல்களை பார்வையிட இமேஜ் வியூவர் மென்பொருட்கள் உதவுகிறது.மைக்ராசாஃப்ட் தனது பயனர்களுக்கு விண்டோஸ் பிக்சர் அண்ட் ஃபேக்ஸ் வியூவர்(Windows picture and fax viewer) என்ற இமேஜ் வியூவரை விண்டோஸ் தொகுப்புடன் இணைத்து வழங்கியுள்ளது.இணையத்தில் பல இமேஜ வியூவர்கள் நமக்கு கிடைக்கின்றன.இவைகளின் சிறப்பு என்னவெனில் இவை விண்டோஸ் பிக்சர் அண்ட் ஃபேக்ஸ் வியூவரை விட கூடுதல் வசதிகளை நமக்கு தருகின்றன.இவற்றில் பல இமேஜ் எடிட்டிங் வசதிகளையும் தருகின்றன.இன்னும் பல பயன்பாடுகளுக்கு இவற்றை நம்மால் பயன்படுத்த இயலும்.எனினும் அத்தகைய மென்பொருட்களில் இருந்து 20 இமேஜ்வியூவர்களை தேர்ந்தெடுத்து அவை தரும் வசதிகளின் அடிப்படையில் அவற்றை தரவரிசைப்படுத்தி தந்துள்ளேன்.இவற்றில் உங்களுக்கு பொருத்தமானதை பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளுங்கள்..... 

 No 20 X Picture (எக்ஸ் பிக்சர்) 
இது விண்டோஸ் பிக்சர் அண்ட் ஃபேக்ஸ் வியூவர் போன்ற மிக எளிய இமேஜ் வியூவர்.இமேஜ்களை Thumbanil வடிவில் பார்க்க இயலும்.வேறு சிறப்பு வசதிகள் எதுவும் இல்லை.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும். கிடைக்கும் தளம்- www.goztun.com ஃபைல் அளவு 1.08 எம்பி

 No 19 Image eye (இமேஜ் ஐ)
எல்லா பொதுவான இமேஜ் ஃபார்மட்டுகளையும் ஆதரிக்கும். Rotate,Mirror,Zoom,Pan,Adjusting,Contrast,Brightness,Hue,Saturation,Sharp,Gamma என எல்லா அடிப்படை வசதிகளும் இந்த இமேஜ்வியூவரில் உள்ளது.இமேஜை ஒரு வகை ஃபார்மட்டிலிருந்து மற்றொரு வகை பார்மட்டுக்கு மாற்றும் ஃபைல் ஃபார்மட் கன்வட்டர் (File format converter)இதில் உள்ளது.இமேஜ்களை ஸ்லைட்ஷோவாக காட்டும் வசதி உள்ளது.திரையில் உள்ள காட்சியை படம் பிடிக்கும் கேப்ஷர் வசதியும் உண்டு.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும். கிடைக்கும் தளம்-www.fmjsoft.com ஃபைல் அளவு-596 கேபி 

No 18 A-Plus viewer (ஏ-ப்ளஸ் வியூவர்)
கன்வர்ஷன் வசதிகள்,குட்டிப்படங்கள் உருவாக்கம்,இமேஜ் அளவு மாற்றம்,சுழற்றுதல் போன்ற வசதிகள் உள்ளன.பல இமேஜ் எஃபெக்ட்களை உள்ளடக்கிய இமேஜ் எடிட்டர் இணைந்துள்ளது.16 வகையான இமேஜ் ஃபார்மட்களை ஆதரிக்கும்.ஸ்கேனர்,டிஜிட்டல் கேமரா ஆகியவற்றில் இருந்து நேரடியாக இமேஜ்களை கையாள இதில் வசதி உள்ளது.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும். கிடைக்கும் தளம்-www.aplusviewer.com ஃபைல் அளவு-2.52 எம்பி

 No 17 I-fun viewer(ஐ-ஃபன் வியூவர்) 
அனிமேட்டட் இமேஜ் ஃபார்மட்டுக்கள் உட்பட எல்லா பொதுவான இமேஜ் ஃபார்மட்டுக்களையும் கையாள இயலும்.Zoom,Shrink tofit,Fast display போன்ற வியூவிங் வசதிகள் உள்ளன.இமேஜ் எஃபெக்ட்கள் Crop,Rotate,Filter போன்ற எடிட்டிங் வசதிகளும் உள்ளன.குறிப்பிட்ட இமேஜ் ஃபார்மட்களுக்கு கன்வர்ஷன் வசதிகள் உள்ளன.கேமரா,ஸ்கேனரில் இருந்து அப்படியே இமேஜை பார்க்க இயலும்.ப்ளக் இன்கள் மூலம் மல்ட்டிமீடியா,போட்டோ டு டிவிடி கன்வர்ட்டர் ஆகவும் இந்த மென்பொருளை மாற்ற இயலும்.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும். கிடைக்கும் தளம்-www.xequte.com ஃபைல் அளவு-1.05 எம்பி

 No 16 WSQ Viewer(டபிள்யுஎக்ஸ்கியூ வியூவர்) 
இது மிக எளிமையான இமேஜ் வியூவர்.41 வகையான இமேஜ் ஃபார்மட்டுக்களை ஆதரிக்கும்.இமேஜ் கன்வட்டர் ஒன்றும் இணைந்துள்ளது.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும். கிடைக்கும் தளம்-www.cognaxon.com ஃபைல் அளவு-870 கேபி

 தொடரும்.......

கருத்துகள் இல்லை:

Share With your friends