20 மார்ச், 2010

இந்த நிறுவனங்களுக்கு பெயர்வந்தது எப்படி???

ஆப்பிள் கம்ப்யூட்டர்

இன்றைய கம்யூட்டர் உலகத்தில் ஆப்பிள் கம்பியூட்டரை பற்றி கேள்விப்படாதவர்களே இல்லை.ஆனால் இவர்களில் யாராவது இந்த
நிறுவனத்திற்கு பெயர் எப்படு சூட்டப்பட்டது என நினைத்துப்பார்திருக்கிரீர்களா? இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ
(Steve Jobs) இவருக்கு மிகவும் பிடித்தமான பழம் ஆப்பிள்தான்.அவர் தன் நிறுவனத்திற்கு மூன்று மாதங்கள் தாமதித்துவிட்டார்.பிறகு
அவர் சக ஊழியர்களிடம் நீங்கள் ஒருவரும் இதைவிட சிறந்த பெயர் தெரிவிக்காவிட்டால் ஆப்பிள் என்ற பெயரையே நம் நிறுவனத்தின்
பெயராக வைத்து விடுவேன் என்று கூறினாராம்.பிறகு இந்தப் பெயரே நிலைத்து விட்டது.

கூகிள்





இது முதன் முதலாக கூகால்(Googol)என்று அழைக்கப்பட்டது.கூகால் என்றால் ஒன்றின் பின்னால் நூறுசைபர்கள் போட்டால் வரும்
எண் பெறுமானமாகும்.இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர்கள் செர்கீபிரின் மற்றும் லாரிபேஜ் (Sergeybrin and Larrypage) இவர்கள்
தங்கள் ப்ராஜெக்டைஒரு angel inrestor இடம் சமர்பித்தார்கள்.அவர்களுக்கு அனுப்பப்பட்ட காசோலையில் கூகிள்(Google) என்று
எழுதப்பட்டிருந்தது.இன்று இந்தப் பெயரே நிறிவனத்தின் பெயராகமாறி மிகவும் புகழ் பெற்றுவிட்டது.




மைக்ரோசாஃப்ட்






இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தவர் பில்கேட்ஸ்(Billgates) இந்த நிறுவனம் மைக்ரோ கம்பியூட்டர்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பதால்
இந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது.முதன் முதலில் Micro-soft என்று நடுவில் ஒரு கோடுடன் (Hyphen) எழுதப்பட்டது. பிறகு இந்தக்கோடு மறைந்துவிட்டது.

ஹாட்மெயில்

இதைத் தோற்றுவித்தவர் ஜாக் ஸ்மித்(Jacksmiith) உலகத்தில் கம்ப்யூட்டர் எங்கிருந்தாலும் வெப்மூலம் ஈ-மெயிலை அணுக ஒரு வழி வேண்டும் என்ற ஐடியா இவருக்கு தோன்றியது.இதனிடையே சபீர்பாடியா (Sabeer bhatia) என்பவர் தன் பிசினஸ் பிளானுக்கு அதாவது மெயில் சர்வீசுக்கு பெயர்தேடிக் கொண்டிருந்தார்.அந்தப் பெயர் மெயில் என்று முடிய வேண்டும் என்று விருப்பப்பட்டார். கடைசியில் ஹாட்மெயில் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.அந்தச் சொல்லில் எச்டிஎம்எல் என்ற எழுத்துக்கள் உள்ளன என்பதை கவனியுங்கள். முதன் முதலில் அது HoTMail அதாவது H,T,M,L என்பவை பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

Share With your friends