4 டிசம்பர், 2011

இந்த தீம்கள் (Themes) உங்கள் கணினியிலும் ஒளிந்திருக்கும்..!


     மீண்டும் ஒரு முறை வருடத்தின் இறுதி மாதத்தின் முதல் பதிவினூடாக இணைகின்றேன். வித்தியாசமானதும் புதுமையானதுமான பதிவுகளுக்காகவே இருப்பது IT CORNER. அது போல இம்முறையும் நான் சொல்லப்போவது நீங்கள் கனவிலும் நினைக்காத விண்டோஸ் 7 இயங்கு முறைமையின் (Operating System) ஒளிந்திருக்கும் ஒரு வசதி/விடயம்/அதிசயம் பற்றித்தான். எனவே செய்து பார்க்க உங்களிடம் விண்டோஸ் 7 இயங்கு முறைமை அவசியம்..

                   அதாவது பொதுவாக அழகுக்கும் இலகு பாவனைக்கும் பெயர் போனது விண்டோஸ் 7 இயங்கு முறைமை. இதற்கு பெரிதும் துணை புரிவது விண்டோஸ் 7 பதிப்பில் விஷேடமாக மைக்ரோசாஃட் (Microsoft) அறிமுகப்படுத்திய தீம்கள். பல்வேறு விதமான வடிவமைப்பு அடிப்படைகளுடன் தன்னியக்கமாகவே 7 வார்ப்புருக்களை (Theme) உட்பொதிக்கப் பெற்று விண்டோஸ் 7 இனுடைய Ultimate தொகுப்பு கிடைக்கப் பெறுகிறது.(ஏனையவற்றில் எவ்வாறு வருகிறன என்பது தெரியவில்லை).

          இதற்க்கும் மேலாக சில வார்ப்புருக்களை மைக்ரோசாஃட் இணையத்தளமூடாக இலவசமாக வழங்கியும் வருகிறது. ஆனாலும் நம்மை அறியாமலே நம்முடைய இந்த விண்டோஸ் 7 இயங்கு முறைமையினுள் பல வார்ப்புருக்கள் (Themes) ஒளிந்திருக்கின்றன என்பதை அறிவீர்களா?.. அவை உங்கள் பதிப்பை பொறுத்தும் உங்கள் அமைவிடத்தை (Region) பொறுத்தும் வேறுபடுகின்றன. அவற்றை தோண்டி எடுக்க நீங்கள் தயாரா??

    முதலில் உங்கள் Windows Explore இல் சென்று Address Bar இல் பின்வருமாறு தட்டச்சு செய்து தேடுங்கள்..



பின் உங்கள் Explorer பின்வருமாறு தோன்றும்.



      அதாவது எல்லோருக்கும் ஒரே மாதிரி பெறுபேறு கிடைக்காது. ஏனெனில் நான் முன் சொன்னது போல பதிப்பை பொறுத்தும் உங்கள் அமைவிடத்தை பொறுத்தும் வார்ப்புருக்கள் (Themes) வேறுபடும். எனவே தோன்றுகின்ற 5 கோப்புறைகளினுள்ளும் (Folders) காணப்படுகின்ற Theme என்ற கோப்புறையை திறந்து உள்ளிருக்கும் வார்ப்புருவை நிறுவலாம். அல்லது நீங்கள் விரும்பினால் அவற்றை தனித்தனி படங்களாகவும் பெறலாம். ஒவ்வொரு நாடுகளினதும் பல வார்ப்புருக்கள் காணப்படுகின்றன. 

       இனியென்ன இப்போதே உங்கள் கணிணியையும் சல்லடை போடுங்கள்.. எத்தனை தீம்களை கண்டு பிடித்தீர்கள்.. பின்னுாட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 கருத்து:

pangusanthaieLearn சொன்னது…

நன்றி நண்பரே ,

payanulla pathivu

பங்குச்சந்தை இல் ஈடுபட என்ன என்ன தேவை மற்றும்
பங்குச்சந்தை பற்றிய அனைத்து விவரங்களையும் ,எளிய தமிழில் வீடியோ களாக கிழே உள்ள தளம் உதவுகின்றது
http://pangusanthaielearn.blogspot.com

Share With your friends