ஒரு நீண்ட பதிவின் இரண்டாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற அடிப்படைகளை அறிந்துகொண்டாயிற்று. இனி எங்கள் துருவுதலுக்கு (Hacking) தேவையான விடயங்களில் இருந்து இரண்டாம் பாகம்.
Step 03: தேவையான பொருட்கள்
------------------------------------
1. பொதுமைப்பாடான கம்பியில்லா தரவு உள்வாங்கி (A compatible wireless adapter)
இருப்பதிலேயே மிகப்பெரிய தேவைப்பாடு இதுதான். அதாவது உங்களிடம் ஒரு Wi-Fi Adapter இருப்பது அவசியம். அது நாங்கள் பயன்படுத்தப்போகின்ற CommView மென்பொருளை ஆதரிப்பதாக இருக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று உங்கள் Device CommView ஐ ஆதரிக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
2. CommView For Wi-Fi
நாங்கள் எந்த வலையமைப்பை துருவ போகிறோமோ அதிலிரந்து வருகின்ற சமிஞ்ஞைகளை சேமிக்க உதவுகின்ற மென்பொருள்.
3. Aircrack-ng GUI
நான் மேலே சொன்னது போன்று நீங்கள் சேமித்த சமிஞ்ஞைகளை Decryption செய்கின்ற மிக முக்கிய மென்பொருள் இதுதான். கையாள்வதற்கு MS-DOS அல்லது Command Prompt இனை பயன்படுத்திய அனுபவம் இருப்பது நல்லது.
4. இறுதியாக இவை எல்லாவற்றையும் விட இந்தப்படிமுறைகளை செய்து முடிக்க உங்களின் பொறுமை மிகமிக முக்கியமானது.
Step 04: கடவுச்சொல்லை துருவுவதற்க்கான மென்பொருள்களை நிறுவுதல்
--------------------------------------------------------------------------------------------------------
நான் தந்த இணைப்பில் இருந்து எல்லா மென்பொருட்களையும் நிறுவி தயாராக வைத்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனி அவற்றை நிறுவல் படிமுறைகளை பார்க்கலாம்..
முதலில் CommView மென்பொருளை நிறுவ வேண்டும். தரவிறக்கிய போது கிடைத்த Hack a Wi-Fi with IT CORNER என்ற RAR Fileஐ WinRAR கொண்டு Unrar செய்யுங்கள் நீங்கள் Unrar செய்கின்ற இடம் பாதுகாப்பான தனியான இடமாக (உ-ம்: LocalDisk C தவிர்ந்த ஏனைய partition, அல்லது வேறு USB Drive) இருந்தால் நல்லது.
* Unrar செய்ததும் கீழுள்ளது போல காண்பீர்கள். இதில் ca7என்ற Folderஐ திறங்கள்.
அதனுள் உள்ள Setup.exeஐ திறந்து வழமைபோன்று நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவும் போது Next கொடுத்து கொண்டு செல்லுங்கள். ஒரு இடத்தில் கீழுள்ளது போல தோன்றும் அதில் VoIP Mode என்பதை கொடுத்து நிறுவுங்கள்.
* நிறுவிய பிறகு crack என்ற folderஐ திறந்து cv என்ற Iconஐ திறங்கள். பின் Yes என்பதை அழுத்துங்கள். இப்போது Commview மென்பொருள் crack செய்யப்பட்டுவிட்டது.
* நிறுவியதும் Desktopஇல் உள்ள CommView for WiFi என்ற Iconஐ திறந்தகொள்ளுங்கள். பின் அதன் இடதுபக்க மூலையிலுள்ள ► வடிவ Iconஐ கிளிக் செய்யுங்கள்.
* கீழுள்ளது போல தோன்றும் மெனுவில் channel என்பதற்கு நேரே 14 ஐ தெரிவு செய்து start captureஐ அழுத்துங்கள்.
* இதன்போது உங்கள் கணினியின் WiFi On நிலையில் இருக்க வேண்டும். சில நிமிடங்களில் உங்களை சுற்றியுள்ள அனைத்து WiFi Netwokகளும் உங்கள் முன் பட்டியலிடப்படும். அதில் நீங்கள் இலக்கு வைத்த wifi தெரிவு செய்யுங்கள். முக்கியமாக அதனுடைய Security type "WEP" ஆக இருக்க வேண்டும். ("WPA2-PSK, WPA" போன்ற வலையமைப்புக்களை crack செய்வது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்)
* பின் capture என்பதை கிளிக் செய்யுங்கள்.
* நீங்கள் தெரிவு செய்த wifi இற்கான datapackets capture ஆவதை காண்பீர்கள். எங்களுக்கு datapackets மட்டுமே தேவை என்பதால் மேல் நிரையில் உள்ள management packets, control
packets என்பவற்றை deselect செய்யுங்கள்.
கொஞ்சம் பொறுத்திருங்கள்
------------------
இதுதான் மிகவும் சிக்கலான பகுதி. அதாவது நீங்கள் crack செய்ய விரும்புகின்ற network இல் இருந்து வருகின்ற datapackets இல் சுமார் 100000 வரை capture ஆகவேண்டும். இதன்போதுதான் உங்கள் முயற்சி
வெற்றிகரமாக அமையும். packets என்பதற்கு கீழே நான் சொன்ன தொகைக்கு அதிகமாக வரும் வரை பொறுத்திருங்கள். இந்த செயற்பாட்டிற்கு எடுக்கின்ற நேரம் signel strength ஐ பொறுத்து வேறுபடும். தொடர்ந்து
காத்திருங்கள்...
<< பகுதி 01
பின்குறிப்பு:
அனைத்து படிமுறைகளும் சிக்கலானவையும், ஆழமானவையும் என்பதால் சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் பின்னுாட்டங்களில் அல்லது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுங்கள்.
பின்குறிப்பு:
அனைத்து படிமுறைகளும் சிக்கலானவையும், ஆழமானவையும் என்பதால் சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் பின்னுாட்டங்களில் அல்லது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக