2 ஏப்ரல், 2010

சொற்களை வாசிக்கும் Speak&Mail



எழுத்துக்களை அதாவது சொற்களை ஒலி வடிவத்திற்கு மாற்றும் ஒரு மென்பொருள்தான் இந்த Speak&Mail ஆகும்.Notepad,Wordpad,Word,Excel,Powerpoint போன்றவற்றிலுள்ள எழுத்துக்கள் உட்பட அனைத்துவகையான எழுத்துக்களையும் இம்மென்பொருள் ஒலு வடிவத்திற்கு மாற்றி நமது காதுகளில் ஒலிக்கச் செய்யும்.குறிப்பாக நாம் அன்றாடம் பாவிக்கும் மின்னஞ்சல் மற்றும் இணையத்தளங்கள் போன்றவற்றிலுள்ள எழுத்துக்களையும் கூட இந்த மென்பொருள் வாசிக்கும்.நமக்கு தேவையான சொற்களை Textboxஇல் Type செய்து Sayit எனும் Buttonஐ அழுத்தியதும் Merlin எனும் உருவம் அதனை வாசிக்கும்.இதனை விருப்பம் போல் மாற்றவும் முடியும்.மேலும் இதில் ஒரு கூடுதல் சிறப்பாக நமது மின்னஞ்சல் கணக்கு விபரங்களை இதில் வழங்குவதன் மூலம் நாம் இணையத்தில் இருக்கும் போது நமக்கு வரும் மின்னஞ்சல்களையும் இது வாசித்து சொல்லும் தகவு கொண்டது. மேலும் Date,Time,Jokes,Songs போன்றவற்றையும் இது நமக்கு சொல்கிறது.மேலும் Notes&Reminders எனும் பகுதியில் நாம் வழங்கும் விபரங்களை குறித்த நாளில் எமக்கு ஞாபகப்படுத்தும் வசதியும் காணப்படுகிறது. மேலும் வாசிக்கும் வேகம்,ஆண்குரலா அல்லது பெண் குரலா போன்ற பல்வேறு விபரங்களையும் எமது விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.இவ்வாறு பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மென்பொருளை www.shadisoft.com எனும் வலைமுகவரியில் பெறலாம்.

தொகுத்தளித்தவர்
A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends