2 ஏப்ரல், 2010

குப்பைக் கூடைக்கு போனதை மீண்டும் பெற...

கணினிகளில் நமக்கு தேவைப்படாத ஃபைல்களை நாம் அழிக்கும் போது அவை நேராக ரீசைக்கிள் பின் எனப்படும் குப்பைக்கூடைக்கு சென்றுவிடும் என்பது யாவரும் அறிந்த செய்தி.குப்பைகூடையில் உள்ள ஃபைல்கள் ஏதாவது நமக்கு மீண்டும் தேவைப்பட்டால் Restore எனும் Option ஐ பயன்படுத்துவோம்.


நமக்கு எப்போதுமே தேவையில்லை என்று நினைக்கும் ஃபைல்களை Shift Keyயினை அழுத்தி கொண்டு அழிப்பதன் மூலம் ரீசைக்கிள் பின்னிற்கு செல்லாமல் அழிக்கமுடியும் என்பது நாமறிந்த செய்தி.ஆனால் இவ்வாறு நாம் தெரியாமல் அழித்த ஃபைல்களையோ அல்லது நமக்கு தெரியாமல் வேறு ஒருவர் அழித்த ஃபைலையோ எவ்வாறு மீளப்பெறுவது?இவ்வாறு ஃபைல்களை மீளப்பெற உதவும் டூல்கள் File recovery tools எனப்படுகின்றன.

பொதுவாகவே ரீசைக்கிள் பின்னிலுள்ள ஃபைலை அழிக்கும் போது அது வன்தட்டிலிருந்து (Harddisk) நிரந்தரமாக அழிக்கப்படுவதில்லை,மாறாக குறிப்பிட்ட பைல் உங்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்படும் ஒரு ஃபைலை அதன் மீது Overwrite செய்வதற்காக குறித்துவைக்கப்படும்.புதிதாக ஒரு ஃபைலை உருவாக்கி அதை ஹார்ட்டிஸ்க்கில் பதிக்கும் போது Overwrite செய்வதற்காக குறித்து வைக்கப்பட்ட ஃபைலின் மீது Overwrite செய்யப்படும்.ஆனால் Owerrite ஆகும் போது கடைசியாக ரீகைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட ஃபைலே முதலில் முதன்முதலில் Overwrite ஆகும்.அதாவது Overwriting ரிவர்ஸ் (Reverse) ஓடரில் நடைபெறும்.எனவே ரீசைக்கிள் பின்னிலிருந்து கடைசியாக அழிக்கப்பட்ட ஃபைல் உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த
ஃபைலை Recover செய்யும் முன்னர் வேறு எந்த ஃபைலையும் ஹார்ட்டிஸ்க்கில் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளவும்.

ஒரு நல்ல ரீசைக்கிள் பின் டேட்டா டூலை கொண்டு கடைசியாக அழித்த ஃபைலை ரெக்கவரி செய்து கொள்ளலாம்.ரீசைக்கிள் பின் ரெக்கவரி டூலை பயன்படுத்த விரும்பினால் மற்றொரு ஹார்ட்டிஸ்கிலோ,ஃளாப்பியிலோ,யுஎஸ்பி ட்ரைவிலோ அல்லது வேறு ஏதாவது ஸ்டோரேஜ் சாதனத்தில் இன்ஸ்டால் செய்து ஃபைலை ரெக்கவரி செய்யவும்.நேரிடையாக உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் நிறுவினால் ரீசைக்கிள் பின்னிலிருந்து கடைசியாக அழிக்கப்பட்ட ஃபைல் ஓவர்ரைட் ஆகிவிடும்.

அடுத்ததாக ரீசைக்கிள் பின் ரெக்கவரி டூலை தேடுவதற்கு உங்கள் கணினியை பயன்படுத்த வேண்டாம்.அவ்வாறு உங்கள் கணினியின் மூலம் இன்டநெட்டை பயன்படுத்துவதால் அதன் மூலம் உருவாகும் Cache,Cookies மற்றும் பிற தகவல்களால் நீங்கள் ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட ஃபைல்களில் எதை ரெக்கவரி செய்ய நினைக்கிறீர்களோ அந்த ஃபைல் சில நேரம் அழிந்துவிடக்கூடும்.

எந்த ரீசைககிள் பின் ரெக்கவரி டூலை பயன்படுத்தியும் ஃபைலை பெற முடியவில்லை என்றால் ஒரு நல்ல டேட்டா எடுத்துதரும் நிறுவனத்தை அணுகுவது நல்லது.டேட்டா ரெக்கவரி நிறுவனத்தை நாடுவது சிறிது கூடுதல் செலவாகும் என்பதால் நீங்கள் ரெக்கவர் செய்ய வேண்டிய டேட்டாவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு அவர்களை நாடலாம்.இணையம் மூலமாக ரீசைக்கிள் பின் ரெக்கவரி டூல்கள் கிடைக்ககூடிய சில தளங்களை உங்களுக்கு தருகிறேன்.அவற்றில் பொருத்தமானதை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்




தொகுத்து தந்தவர்
A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends