10 ஏப்ரல், 2010

Ctrl+Alt+Delete ஐக் கண்டுபிடித்தவர்



உங்களது கணினி இயங்க மறுக்கும் அல்லது Struk ஆகும் ஒவ்வொரு தடவையும் கணினியை Log off செய்து மீண்டும் இயங்க செய்யவோ அல்லது இயக்கமற்று உறைந்து போயிருக்கும் ஒரு புறோகிராமை மூடிவிடவோ என பல்வேறு பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வாக இருப்பது Ctrl+Alt+Del ஆகும்.இவ்வாறு உங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்யும் இந்த குறுக்கு வழியை கண்டுபிடித்தவர் டேவிட் பிரட்லி (David Bradly) என்பவர் ஆவார்.கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்க்கான ஒரே வழி இந்த Ctrl+Alt+Delஎன்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.IBM நிறுவனத்தில் 28 வருடங்கள் சேவைசெய்து ஓய்வு பெற்றவரான பிரட்லி தன்னுடைய இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை."இதைவிட பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன்.ஆனால் இதுதான் எனக்கு புகழை தந்துவிட்டது"
என்கிறார் அவர்.அவருடைய புகழ் கணினியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினை காரணமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

Share With your friends