வழிமுறை-05 Antivirus
வழிமுறை-06 Recycle bin
வழிமுறை-07 Adware and Spyware
உங்கள் கணினியில் ஒரு நல்ல Antivirus மென்பொருளை கண்டிப்பாக நிறுவியிருக்க வேண்டும்.சில வகையான Antivirusகள் இணையத்தளத்தில் இலவசமாக கிடைக்கின்றன.சில வகையான Antivirusகள் பணம் செலுத்தி வாங்க வேண்டியது இருக்கும்.பொதுவாகவே வைரஸ்கள் கணினியில் ஒளிந்தவாறு இருந்து கொண்டு கணினிக்கு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.கணினியில் ஆன்டிவைரஸ் இல்லையென்றால் வைரஸ் கணினியில் உள்ளதா இல்லையா என்பதை அறியாமலே போய்விடும்.எனவே Norton,Mcafee,Computer associates போன்ற ஏதாவது ஒரு நல்ல ஆன்டிவைரசை கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.இலவசமாக ஆன்டிலைரஸ் பெறுவவதற்கு Yahoo மற்றும் Google போன்ற தேடுபொறிகளில் free antivirus download என்று தேடி ஒரு நல்ல Antivirus மென்பொருளை நிறுவி கொள்ளுங்கள்.
பரிந்துரை--- தற்காலத்தில் இணையத்தில் இலவசமாக கிடைக்ககூடிய Avast5 Antivirus மென்பொருளை நிறுவுவது இலகுவானது.இதன் வலைத்தள முகவரி
வழிமுறை-06 Recycle bin
டெம்பரரி ஃபைல்களை போலவே ரீசைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்களும் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பவையாகும்.உங்களுக்கு வேண்டப்படாத ஃபைல்களை நீங்கள் அழிக்கும் போது அந்த ஃபைல்கள் ரீசைக்கிள் பின்னில் போய் பதியும்.இவ்வாறு பல நாட்களாக நீங்கள் அழித்த ஃபைல்கள் ரீசைக்கிள் பின்னில் சேர்வதால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் குறிப்பிட்ட அளவு இடம் வீணாக போகிறது.இதனால் கணினியின் வேகமும் குறைகிறது.எனவே எப்பொழுதும் ரீசைக்கிள் பின்னை காலியாக வைத்திருப்பது நல்லது.மேலும் உங்களுக்கு வேண்டாத ஃபைல்களை ரீசைக்கிள் பின்னிற்கு செல்லாமலேயே அழிப்பதற்கு அழிக்க வேண்டிய ஃபைலை தேர்வு செய்து கொண்டு Shift+del கீகளை அழுத்தவும்.
வழிமுறை-07 Adware and Spyware
இவ்விரு வகை புரோகிராம்களும் கணினிக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை கொடுக்கும்.இவ்விரு வகை புரோகிராம்களும் கணினிக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை கொடுக்கும்.இவ்விரு வகை புரோகிராம்களும் உங்கள் கணினியில் பதியப்பட்டு நீங்கள் கணினியில் என்னென்ன செய்கிறீர்கள்,எந்தெந்ந இணையத்தளங்களை பார்வையிடுகிறீர்கள், நீங்கள் எதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளீர்கள் போன்ற செய்திகளை செர்வருக்கு(Server) அனுப்பும்.இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் ஸ்பைவேர் உங்களது செயல்பாடுகளை செர்வருக்கு அனுப்பும்.அதே நேரத்தில் அட்வேரானது உங்களது செயல்பாடுகளை செர்வருக்கு அனுப்புவதோடு உங்களது கணினியில் ஒரு விளம்பரத்தையும் தோற்றுவிக்கும்.இணையத்தில் ஆன்டிஸ்பைவேர் மற்றும் ஆன்டிஅட்வேர் ஆகியன இலவசமாக கிடைக்கின்றன.தேடுபொநிகளில் தேடி ஒரு நல்ல ஆன்டிஸ்பைவேர் மற்றும் ஆன்டிஅட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்வதால் கணினியின் வெகத்தை அதிகரிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக