சென்ற மாதம் (http://itcornerlk.blogspot.com/2010/03/blog-post_27.html) இப்பகுதியில் புதிய 5 தளங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.அவை உங்களுக்கு பயன் அளித்திருக்கும் என நம்புகின்றேன். அதே போன்று இந்த மாதமும் வித்தியாசமான 5 இணையத்தளங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.வாசித்து பயனடையுங்கள்....
சலனப்படங்களின் சோலை..
இணையத்தில் இலவசமாக Videoக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை பல இணையத்தளங்கள் நமக்கு வழங்குகின்றன.அவ்வாறான சிறந்த இணையத்தளங்களில் ஒன்றாக Dailymotion ஐ குறிப்பிடலாம்.
இங்கே இணையப்பயனர்களால் நாள்தோறும் பல வகையான Video fileகள் Upload செய்யப்படுகின்றன.அவ்வாறு Upload செய்யப்பட்ட Videoகளை அவ் இணையத்திலிருந்தே பார்க்ககூடிய வசதி காணப்படுவதுடன்
நம்மிடமுள்ள Videoக்களை அப்லோட் செய்து கொள்ளவும் முடியும்.20 நிமிட அளவை கொண்டதும் 150 எம்பி வரை கொள்ளளவை கொண்ட Videoக்களை அப்லோட் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளத்தின் முகவரி www.dailymotion.com என்பதாகும்.
நீங்கள் பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கில் சொற்களுக்கும் மிகவும் விரைவாக பல மூலங்களிலிருந்தும் (Source) பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளமே Onelook ஆகும்.
மிகவும் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்தளத்திலிருந்து நாம் வழங்கும் சொல்லுக்கு பொருளை தருவதோடு மட்டுமல்லாது மேலதிக உசாத்துணைக்காக குறித்த இணையத்தளங்களுக்கான இணைப்பையும் தருகிறது.இத்தளத்தின் முகவரி www.onelook.com
எப்படி எருவாகியது???
இது எப்படி சாத்தியம் என கேட்கிறீர்களா??உங்கள் வீட்டினையும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல் உலகின் எந்ந பிரதேசத்திலுமுள்ள ஒருவராலும் பார்க்க முடியுமா? இந்த கேள்விக்கு
தீர்வு சொல்கிறது Wikimapia.இந்த வலைத்தளமானது உலகின் ஒரு சில பிரதேசங்களை தவிர உலகின் ஏனைய பிரதேசங்களை மிக அண்மிய கோணத்தில் உங்கள் கண்முன் கொண்டுவருவதுடன் எங்கள் வீட்டினை
நீங்களே இந்த இணையத்தளத்தில் குறிக்கவும் முடிகிறது.Search வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான பிரதேசங்களை மிக இலகுவில் கண்டுபிடிக்கலாம்.இத்தளத்தின் முகவரி www.wikimapia.org
தமிழ் Mp3 Download
பாடல்கள் என்றால் Mp3 என்று சொல்லுமளவுக்கு Mp3 இன் ஆதிக்கம் உலகெங்கும் பரந்து காணபபடுகிறது.Mp3 பாடல்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்த பல இணையத்தளங்கள் இணைய வலைப்பின்னலில் காணப்படுகின்றன. அதிலொன்றுதான் Tamilbeat ஆகும்.இங்கே பழைய,புதிய,இடைக்கால பாடல்கள் மட்டுமன்றி பக்தி பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. பாடல்களை டவுன்லோட் செய்வது மட்டுமன்றி அவற்றை இணையத்திலிருந்நே கேட்கவும் முடியும்.இதன முகவரி www.tamilbeat.com
...வழமை போலவே இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் விருப்பம் சொல்லி ஏனைய நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக