பெரிய அறையொன்றுக்குள் ஆரம்பித்த கணினிப்புரட்சி இப்போது உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.அதே போல் கணினியை அடிப்படையாக கொண்டு கம்பிவழித்தொடர்புகளூடாக ஆரம்பித்த இணையச் சேவைகள் இப்பொழுது கம்பியில்லாத் தொழில்நுட்பமாக மாறி,எங்கிருந்தும்,எப்போதும் எப்படியும் பயன்படுத்த கூடிய ஒன்றாக பரிணமித்திருக்கிறது. இந்த இரண்டு சாதனைகளையும் ஒன்றுசேர ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்தால் எப்படியிருக்கும்? என்ன குழப்பமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.
இப்போது கணினி மூலம் நாம் ஒரு செயற்பாட்டை செய்யவேண்டுமானால் எம்மிடம் ஒரு கணினி அதற்குரிய அனைத்து வன்பொருள்களுடனும் அதில் நாம் நினைத்த காரியங்களை செய்வதற்கான மென்பொருள்களுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லாமல் இணைய இணைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு கணினி இருந்து விட்டால் போதும் மீதம் இருக்கும் காரியங்கள் அனைத்தையும் இணையவழியாகவே நீங்கள் செய்து கொள்ளலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?
இணையத் தேடுபொறிச் செயற்பாட்டில் ஜாம்பவானான Google நிறுவனம் இந்த நவீன பொறிமுறைக்கு இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறது.கணினி சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களையும் தன்னுடைய இணைய சேவையினூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இப்போது அது இறங்கியிருக்கிறது. Writley எனப்படும் இணைய அடிப்படையிலான Word processing மென்பொருளையும் Spreadsheets எனப்படும் Excel வகை இணையவழி மென்பொருளையும் ஒன்றினைத்து Google Docs & spreadsheets எனும் சேவையை அது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் Msword,Excel மற்றும் Openoffice போன்ற மென்பொருள்களின் உதவியுடன் நீங்கள் கணினியில் செய்யும் வேலைகளை அந்த மென்பொருள்கள் இல்லாமலேயே இப்போது நீங்கள் இணையத்தில் Online இல் இருந்தபடியே செய்ய முடியும்.இச்சேவை மூலம் இன்னும் பல நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.எமது கணினியில் Word processing அல்லது Spreadsheet மென்பொருள் நிறுவப்படாமல் இருந்தாலும் கூட எமது Word,Excel fileகளை Google Docs & spreadsheets இற்கு மேலேற்றுவதன் மூலம் Open செய்து கொள்ள முடியும். வேண்டுமானால் அதில் எடிட்டிங் செய்யவும் இயலும்.
Onlineஇல் இருந்தபடியே குறித்த Google Docs & spreadsheets (http://docs.google.com) இணையத்தளத்திற்கு சென்று எமது கூகிள் கணக்கின் மூலம் Sign in ஆனதன் பின்னர் Google Docs & spreadsheets மூலம் Word,Excel போன்ற மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கும் ஃபைல்களை இணையத்தளத்திலிருந்தபடியே உருவாக்கி எமது கணினியிலோ அல்லது கூகிள் சேர்வர்களிலோ அதனை சேமித்து கொள்ளலாம். சேர்வரில் சேமித்து வைத்தால் உங்கள் ஆவணங்களை நீங்கள் எங்கு சென்றாலும் Open செய்து அதனைப் பயன்படுத்திக்கொள்ளகூடிய வாய்ப்பும் கிட்டுகிறது.
Google Docs & spreadsheets எனும் இணைய வழிமென்பொருளானது doc, .xls, .csv, .ods, .odf, .pdf, .rtf, .html போன்ற ஃபைல் ஃபார்மட்களுடன் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக நாம் உருவாக்கும்
வேர்ட் டாக்குமென்டுகளை பிடிஎஃப் ஆக மாற்றி டவுன்லோட் செய்துகொள்ளக்கூடிய வசதியும் கிடைக்கிறது.
நீங்கள் உருவாக்கியுள்ள ஒரு கட்டுரையை அல்லது வரவுசெலவுத் திட்டத்தை உலகின் வேறொரு மூலையிலிருக்கும் உங்கள் நண்பருடன் சேர்ந்து தொகுக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இதற்கும் Google Docs & spreadsheets தீர்வாய் வருகிறது. நீங்கள் உங்கள் நண்பரின் Gmail address இற்கு அழைப்பை ஏற்படுத்தி அவரையும் உங்கள் ஆவணத்தை தொகுக்க வழி செய்யலாம் நீங்கள் தொகுக்கும்/மாற்றும் விடயங்கள் குறித்த ஆவணப்பக்கத்திலேயே குறிப்பிட்டுக் காட்டப்படும். இதனால் மாற்றங்களைச் செய்தவர் செய்த நேரம்,செய்த மாற்றம் என அனைத்து தகவல்களையும் விபரமாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு ஒரு ஆவணத்தை ஒரு நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் இதற்கு எல்லையே கிடையாது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக Google Docs & spreadsheets உதவியுடன் உங்களால் உருவாக்கப்பட்ட ஆவணங்களை இணையப்பக்கத்திலோ அல்லது வலைப்பதிவிலோ பப்ளிஷ் செய்ய முடியும். இதற்கு எந்தவித HTML அறிவும் தேவையில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல் கணினியில் பல வன்பொருள்களுக்கும் மென்பொருள்களுக்கும் வேலைஇருக்காது போலிருக்கிறது.எல்லாவற்றையும் இணையத்தொடர்புகளுக்கூடாகவே செய்து கொள்ள முடியும்.
...வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் ஓட்டளியுங்கள்...