15 டிசம்பர், 2011

Offline Hacking -உத்தரவின்றி உள்ளே வா..! பகுதி 03


சென்ற பதிவின் தொடர்ச்சி...

பலர் எதிர்பார்த்திருந்த பதிவு.. வேலைகளின் காரணமாக கொஞ்சம் தாமதமாகிவிட்டது. தொடரறா கணினிகளினை துருவுவது (Hacking) எவ்வாறு என்பது பற்றிய பதிவின் மூன்றாவது பகுதி. எதிர்பார்த்து எதிர்பார்த்து வாசிக்கின்ற உங்களுக்கு நன்றிகள். நேரடியாகவே விடயத்துக்கு போகலாம். அதாவது சென்ற இரண்டு பதிவுகளிலும் துருவல் (Hacking) என்றால் என்ன? அதனுடைய அடிப்படை விடயங்கள், துருவுவது (Hacking) எவ்வாறு? போன்ற விடயங்களையும் அதற்க்காக நாம் பயன்படுத்தப் போகின்ற மிக ஆபத்தான ஒரு மென்பொருள் பற்றியும் சொல்லியிருந்தேன்.

முந்தைய பதிவில் நான் சொன்னபடியே அந்த மென்பொருளை குறுந்தட்டில் (CD) பதிந்து செய்முறை விளக்கங்களுக்காக காத்திருக்கிறீர்கள். எனவே எவ்வாறு செய்வது என பார்ப்போம். உங்களின் இலகுத் தன்மைக்காவும் பெரிய பதிவென்பதால் சுவாரஸ்யம் அவசியம் என்பதற்காகவும் இந்த படிமுறைகளை ஒரு படையெடுப்பு போல கற்பனை செய்து ஒவ்வொரு Mission களாக தந்துள்ளேன்.

Mission 01
முதலில் உங்களிடம் உள்ள அந்த குறுந்தட்டை பயன்படுத்த முதல் நீங்கள் எந்தக் கணினியின் கடவுச் சொல்லை திருடப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து பின் அதனுடைய Boot Menu வினுள் செல்ல முடிகிறதா என பாருங்கள். (அதென்ன Boot Menu என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முயன்றால் அதற்க்கு இன்னும் 3 தொடர்பதிவுகள் வேண்டும்.) Boot Menu வினுள் செல்ல பொதுவாக Intel Motherboard களாக இருந்தால் F2 கீயாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட கணினியின் ஆரம்பத்திலேயே அதற்க்கான விசை தோன்றும். அதனை பயன்படுத்தி உள்ளே செல்லுங்கள். அங்குதான் பிரச்சினை இருக்கிறது. இலகுவாக Boot Menu வந்து விட்டால் Level 1 சரி. இல்லாவிட்டால் குறித்த கணினியின் Boot menu விற்க்கான கடவுச்சொல்லை திருத்த வேண்டும். அதற்க்கு அந்த கணினியின் CMOS Battery கழற்றி சிறிது நேரத்தின் பின் போட்டு இயக்கினால் சரி. 

முன்னர் சொன்னது போல Boot Menu வினுள் சென்று First Boot device ஆக CD-ROM ஐ மாற்றுங்கள். ஆனால் புதிய ரக கணினிகள் என்றால் Winternals குறுந்தட்டை போட்டதும் கணினியை மீளியக்கும் போது Press Any Key to Boot from CD என்ற செய்தி வரும் அப்போது ஏதாவது ஒரு கீயை அழுத்தி Winternals குறுந்தட்டில் இருந்து கணினியை Boot செய்யுங்கள்.

இப்போது கீழுள்ளது போல திரையை அடைவீர்கள்.


Mission 02
படத்தில் காட்டப்பட்டிருப்பது போல Lock Smith என்பதுதான் கணினியின் கடவுச் சொல்லை திருடுவதற்க்கான கள்ளச் சாவி. இதனை தெரிவு செய்யுங்கள். பின் கீழுள்ளது போல விண்டோ தோன்றும்.


Mission 03
கள்ளச் சாவி கிடைத்துவிட்டது. இனியென்ன அடுத்த படிமுறை, நீங்கள் திருட வேண்டிய கணினி பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இதில் முக்கியம் என்னவென்றால், குறித்த கணினியில் எத்தனை User Account இருக்கின்றன. அதில் எவை Administrator மற்றும், எவை Limited போன்ற விவரங்கள் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும். ஏனெனில் குறித்த கணினியின் Administrator கணக்கை கீழுள்ள படிமுறையில் தெரிவு செய்ய வேண்டும்.


Mission 04
பின் அதன் கீழ் New Password என்பதில் குறித்த கணக்கிற்கான புதிய கடவுச்சொல்லை வழங்குங்கள். பின் Confirm Password என்பதில் அதே கடவுச் சொல்லை மீளவும் வழங்குங்கள். பின் Finish. 

இனியென்ன அந்த அப்பாவி கணினி இனி உங்கள் வசம்.. கணினியை மீள இயக்கி (Restart) குறுந்தட்டை வெளியே எடுங்கள். உங்களின் புதிய கடவுச்சொல்லை வழங்கி கணினியை திறக்கலாம்... இப்பொது நீங்களும் ஒரு Offline Hacker என்பதை ஒத்து கொள்கிறீர்களா... 

குறிப்பு: நான் சொன்ன இந்த மென்பொருளை உங்கள் தனிப்பட்ட கணினியின் கடவுச் சொல் மறந்து போகின்ற வேளைகளில் அதனை மீட்டெடுக்க பயனபடுத்தலாம். அதுபோல தொடர்ந்து இந்த பதிவின் 3 பகுதிகளுடனும் இணைந்திருந்த உங்களுக்கு நன்றிகள்... நான் சொன்னது போல செய்து விட்டேன. உங்கள் வேலை 

...வழமை போல Intli மற்றும் Tamil 10 ஓட்டளித்து உங்களைப் போலவே ஏனைய நண்பர்களையும் பயனடைய செய்யுங்கள்...



3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

thanks brother

LIMRA சொன்னது…

nandri ithai pola innum pala nunukkangalai tharumaru vendukiren.

பெயரில்லா சொன்னது…

Hi,

Thankyou

Share With your friends