கடந்த பதிவின் தெடர்ச்சி.......
பலர் ஆவலோடு எதிர்பார்த்த இந்த பதிவு இரண்டாம் பாகம். நான் ஏற்கனவே சொன்னது போல இன்று வெளியிடுகிறேன். அதாவது இணையத்தோடோ அல்லது வேறு ஏதும் வலையமைப்புகளோடோ இணையாத தொடரறா (Offline) நிலையில் உள்ள கணினிகளினை எவ்வாறு துருவல் (Hacking) செய்வது? என்பது பற்றிய பதிவுதான் இது. இதில் முதலாவது பகுதியில் தருவல் பற்றியும் அடிப்படைகள் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில் எவ்வாறு துருவல் (Hacking) செய்யப் போகிறோம். அதற்க்கு என்ன ஆயுதத்தை பயன்படுத்தப்போகிறோம் என்பது பற்றிய ஒரு அறிமுகம்.
பொதுவாக தொடரறா நிலையில் உள்ள கணினிகள் எனப்படுவது நாம் சாதாரணமாக எமது வீடுகளில் வைத்திருக்ககூடியவை அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களி்ல் உள்ளவையே ஆகும். இவை பொதுவாக விண்டோஸ் இயங்குமுறைமை (Operating System) கொண்டே இயக்கப்படுகிறன. (இந்த துருவலும் விண்டோஸ் அடிப்படை கணினிகளில் மாத்திரமே சாத்தியம்). விண்டோஸ் இயங்கு முறைமைகளில் எமது தரவுகள் User Account என்ற பயனர் கணக்குகள் மூலமே தனியாள் மயப்படுத்தப்படுகிறன (Personal). ஒருவருடைய தரவுகளை கையாள வேண்டுமெனில் அவருடைய User Accountsக்கான கடவுச் சொற்கள் எமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதிலும் Administrator கணக்கு மூலம் இன்னொருவருடைய உரிமைகளையும் கட்டுப்படுத்தலாம்.
ஆகவே இப்போது நாம் ஒரு கணினியின் வன்தட்டினுள் செல்ல அந்த கணினியின் பயனர் கணக்கை உடைக்க வேண்டும். எனவே இதனை செய்ய சில பிரத்தியேக மென்பொருள்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் Winternals_ERD_Commander_2007 இதனை பணம் கொடுத்து பெற வேண்டுமென்றாலும் நான் தருகிற இணைப்பில் இலவசமாக பதிவிறக்கலாம் (Download). இது ஒரு போலி இயங்கு முறைமை அதாவது Live CD என்று சொல்வோம். OEM அடிப்படையிலான மென்பொருள். சாதாரணமாக வெறும் குறுந்தட்டை (CD) வைத்தே கணினியின் வன்தட்டை (Hard Disk) இயக்கலாம். எனவே இது ISO Image கோப்பாக கிடைக்கும். இதனை என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உடனே ஒரு குறுந்தட்டில் பதிந்து எடுங்கள். ISO Image கோப்புககள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாவிட்டால் நான் எழுதிய இந்த பதிவை படியுங்கள்.
அவ்வாறு நீங்கள் பதிந்த குறுந்தட்டு ஒரு Bootable CD ஆக வரும். இதனை தான் நாம் கணினியின் கடவுச் சொல்களை திருட பயன்படுத்தப் போகிறோம்.
தொடர்ந்தும் மென்பொருளை தரவிக்கி குறுந்தட்டில் பதிந்து விட்டீர்கள். இதனை எவ்வாறு பயன்படுத்துவது? முடிந்தால் சுயமாக பயன்படுத்தி பாருங்கள். அல்லது செய்முறை விளக்கம் நான் முதலிலேயே சொன்னது போல 3ம் பகுதியில் எதிர்பாருங்கள்.
...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..
பகுதி 03
பகுதி 03
1 கருத்து:
நன்றாக புரியும் படியாக உள்ளது..
அடுத்த பகுதியை எதிர் பார்த்துள்ளேன்....
கருத்துரையிடுக