வாரத்தின் முதல் நாளில் உங்களோடு இணைகின்றேன். இம்முறை நான் சொல்லப்போகின்ற இந்த மென்பொருள் நம்மில் பாதிப் பேருக்கு அறிமுகமானது. இணையத்தில் அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளை (Files) பகிர்ந்து கொள்ள/தரவிறக்கி கொள்ள பயன்படுத்துகின்ற Torrent தரவிறக்கத்தின் ஒரு பிரிவு (Client) என்று சொல்லக் கூடிய uTorrent மென்பொருளாகும். இதனை பொதுவாக பாரியளவிலான கொள்ளளவு (Capacity) கொண்ட தரவுகளை தரவிறக்கம் செய்ய பயன்படுத்துவோம்.
Torrent என்பது Peer 2 Peer வலையமைப்பு (Network Topology) அடிப்படையில் அமைந்த தரவிறக்கமாகும். இதனால் சாதாரண தரவிறக்க வேகத்தை விட அதிகளவான தரவிறக்கம் இதில் காணப்படும். ஆனால் குறிப்பிட்ட தரவிறக்க வீச்சினுள்ளே தான் (எமது இணைய இணைப்பு வேகமாக இருந்தாலும்) இதில் தரவிறக்க முடியும். இந்த பிரச்சினையை தீர்க்க வழிமுறை இதோ...
- முதலில் உங்கள் கணினியில் உள்ள இம் மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
- பின் Preference என்ற பகுதிக்கு செல்லுங்கள். (Option இனுள் காணப்படும்)
இதில் Connection என்பதில் மேலுள்ளது போன்று அமைப்புக்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
பின் Bandwidth என்பதை தேர்வு செய்ய மேலுள்ளது போல தோன்றும் அதில் Global maximum number of connected peers per torrent என்பதை 500000 எனவும் Maximum number of connected peers per torrent என்பதை 500000 எனவும் Number of upload slots per torrent என்பதை 50 எனவும் மாற்றுங்கள்.
பின்னர் வழமை போல Apply கொடுத்து Ok செய்யுங்கள். இனி உங்களின் Torrent தரவிறக்கங்கள் முன்னரை விட வேகமாக இருக்கும். ஆனால் Torrent சார்ந்த மென்பொருள்கள் ஒழுங்காக இயங்க உங்கள் இணைய இணைப்பு வேகம் குறைந்தது 350KB/s ற்க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..
பின் Bit Torrent என்பதை தேர்வு செய்ய மேலுள்ளதை போல தோன்றும். அதில் Protocol Encryption ஏன்ற பகுதியில் Outgoing என்பது Disabled ஆக இருந்தால் Enabled ஆக மாற்றுங்கள்.
இறுதியாக Advance என்ற பகுதியில் net.max_halfopen என்பதை கண்டுபிடித்து அதன் Value வை 50 ஆக மாற்றுங்கள்.
...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..
2 கருத்துகள்:
thanks
thanks for sharing
கருத்துரையிடுக