17 டிசம்பர், 2011

ஒரு Shutdown Timer நீங்களே உருவாக்கலாம்..!


மீண்டும் டிசம்பர் மாதத்தின் மற்றுமொரு பதிவினூடாக உங்களோடு இணைகின்றேன். சென்ற முறை நான் எழுதிய தொடரறா துருவல் பற்றி பலர் உங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தீர்கள். மற்றும் அந்த பதிவினுடைய 3 பகுதிகளிலும் இணைந்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. 

அது போலவே இன்றும் உங்களோடு ஒரு வித்தியாசமான விடயம் பற்றி பேச போகிறேன். Shutdown என்பது என்ன? என்று திடீரென கேட்டால் கணினி துறையோடு ஒன்றித்தவர்கள் அனைவரும் இலகுவாக சொல்லிவிடுவோம். அதனை எப்படி செய்வது என்பதுவும் எமக்கு தெரியும்.ஆனால் அதையே ஒரு Timer மாதிரி அதாவது கணினி எப்போது Shutdown ஆக வேண்டும், என்பதை ஏனென்றால் கணினியில் சில நேரங்களில் நீண்ட நேரம் வேலை செய்கின்ற போது வேலை முடிந்ததும் அதனை அணைக்க சோம்பல் படுபவர்களுக்கு இது உதவும். நீங்கள் வேலை தொடங்கி எப்போதுவரை கணினி விழித்திருக்க வேணடும் என்பது பற்றி நாங்களே சுயமாக ஒரு Utility தயாரிக்கலாம். எவ்வாறு என பார்ப்போம்.

முதலில் உங்கள் விண்டோஸ் இயங்கு தளத்தில் (XP/7/Vista) Desktop இல் வலது கிளிக் செய்ய தோன்றும் Menu வில் New என்பதற்க்கு சென்று Shortcut என்பதை தேர்ந்தெடுங்கள். பின் கீழுள்ளது போல தோன்றும்.


இதில் Type the location of the item என்பதில் shutdown -s -t 120  என தட்டச்சு செய்யுங்கள். இங்கு 120 என்பது உங்கள் கணினி எவ்வளவு நேரத்தில் அணைய (Shutdown) வேண்டும். என்பதை குறிக்கும். எப்போதும் நேரத்தை செக்கன்களிலேயே குறிப்பிட வேண்டும். அதன்படி 120 என்பது 2 நிமிடங்களை குறிக்கும். 1 மணித்தியாலம் எனின் 3600 என குறிக்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அதை நிமிடத்திற்கு மாற்றி 60ஆல் பெருக்க பெறப்படும் பெறுமானத்தை வழங்க வேண்டும். நான் குறிப்பிட்ட Code இல் 120ற்க்கு பதிலாக பிரதியீடு செய்யுங்கள்.

பின் Next அழுத்த தோன்றும் மெனுவில் உங்கள் Utility இற்க்கான பெயரை வழங்கி Ok செய்ய Desktop இல் அது உருவாகிவிடும். பின் நீங்கள் வேலை செய்ய கணினியில் அமரும் போது உங்கள் வேலை முடிவடையும் நேரத்தை கணக்கெடுத்து இந்த Utility யை இயக்கவும். நீங்கள் கொடுத்த நேரத்திற்க்கு ஏற்ப கணினி அணைய வேண்டிய நேரத்தை கணக்கெடுத்து கணினி தானாக அணையும். என்ன..இது இலகு தானே..

...வழமை போல இன்ட்லி மற்றும் தமிழ்10 தளங்களில் ஓட்டளித்து இந்த பதிவை ஏனையவர்களோடும் பகிருங்கள்...

கருத்துகள் இல்லை:

Share With your friends