10 டிசம்பர், 2011

இணையத்தால் வசமாகா கணினி எது? -இம்மாத மென்பொருள்


இந்த மாதத்தினுடைய மென்பொருள் பற்றிய பதிவினூடாக உங்களை சந்திக்கின்றேன். வழமை போலவே இந்த மாதமும் ஒரு புதிய (சிலருக்கு பழையதாய் இருக்கலாம்) மென்பொருள் பற்றி சொல்லப் போகின்றேன். இதனுடைய பெயர் Team Viewer என்பதாகும். அதாவது முற்றிலும் இலவசமான Freeware மென்பொருள். 

இணையம் சார்ந்து பயன்படுத்த வேண்டிய மென்பொருள். அதாவது நமக்கிடையே பொதுவாக தரவுகளை (அவை கோப்புகளாகவோ அல்லது அஞ்சல்களாகவோ இருக்கலாம்) இணையமூடாக பரிமாறிக் கொள்வது வழமை. இதிலும் சிலர் இணையத்தில் Screen sharing என்று பேசிக்கொள்வதும் உண்டு. அதாவது இணைய இணைப்பினூடாக எமது "கணினி திரையை" இன்னொருவருடன் பகிர்ந்து கொள்கின்ற நிலை என்று சொல்லலாம். இதனை செய்ய பிரத்தியேக மென்பொருள்கள் காணப்படுகின்றன. ஆனாலும் இதனை பிரபலமான Skype மென்பொருள் மூலமும் செய்யலாம் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆனால் இணையமூடாக எமது Internet Protocol (IP) ஐ மட்டும் வைத்து எமது கணினியையே இனுனொருவருடன் பகிரலாம். அது இந்த Team Viewer இன் மூலம் சாத்தியம். இம் மென்பொருளைப் பற்றி தொடர்ந்தும் பார்ப்பதற்கு முதல் இதனுடைய உத்தியோகபூர்வ தளத்திலிருந்து இதனை பதிவிறக்கி (Download) நிறுவிக் கொள்ளுங்கள். இதில் கூடுதல் வசதி இதனை Portable ஆகவும் பயன்படுத்தலாம். அதற்கு நிறுவும் போது Install என்பதற்கு பதிலாக Run என்பதை கொடுக்கவும்.

பின்னர் இம் மென்பொருளை திறக்கும் போது கீழ்வருமாறு தோன்றும். இதில் உங்களுக்கென்று ஒரு ID மற்றும் கடவுச்சொல் (Password) தரப்பட்டிருக்கும். இதன் அருகே நீங்கள் யாருடன் தொடர்பை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதற்கான விபரங்கள் தோன்றும்.


நீங்கள் இன்னொருவருடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்தவரின் கடவுச்சொல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பாதுகாப்புக்காக இது Dynamic ஆக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு முறை இந்த மென்பொருளை திறக்கும் போதும் இதற்க்கான கடவுச்சொல் மாற்றமடையும். அடுத்து Remote Support, Presentation, File transfer, VPN என்ற நான்கு தெரிவுகள் காணப்படுகின்றன். முதலில் உங்கள் நண்பரின் ID ஐ வழங்கி Remote support ஐ வழங்கி Connect partner பட்டனை அழுத்த உங்கள் நண்பரின் கடவுச்சொல்லை கேட்டும். பின் அதனை வழங்கினால் உங்கள் நண்பரின் கணினி இனி உங்கள் வசம். உங்கள் தேவையை பொறுத்து இணைப்பு முறையை (Connection method) மாற்றலாம். கோப்புகளை மட்டுமே பரிமாற்ற நினைத்தால் File transfer என்ற வசதியை பயன்படுத்தலாம். 

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்...

கருத்துகள் இல்லை:

Share With your friends