மீண்டும் கணினி சார் பதிவோடு உங்களோடு இணைந்திருக்கிறேன்.இன்று நாம் பார்க்கப் போவது நாம் அன்றாடம் கணினியை பயன்படுத்தும் போது பல வகையான ஃபைல் ஃபார்மட்களை (File format) பயன்படுத்துகிறோம். உதாரணமாக ,doc, .ppt, .pdf,.txt, .avi, .mkv, .mp3 இது போன்ற இன்னும் பல ஃபோர்மட்களையும் பயன்படுத்துகிறோம். ISO என்பதும் நான் மேற்சொன்னது போன்ற ஒரு வகையான File formatதான். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். எனினும் தெரியாதவர்களுக்காக சிறிய அறிமுகம். பொதுவாக
இதனை ISO Image file என்று சொல்லுவோம். இது CD/DVD போன்றவற்றை Write செய்ய பயன்படுகிறது. பெயருக்கேற்றால் போல் இது எங்கள் CD/DVD போன்றவற்றில் உள்ள தரவுகளை படம் பிடித்து ஒரு சுருக்க கோப்பாக வைத்திருக்கும். தேவையான நேரம் இதனை ஒரு CD/DVDயில் விரித்து பயன்படுத்தி கொள்ளலாம்.சுருக்கமாக சொன்னால் CD/DVD போன்ற இறுவட்டுக்களின் மென் வடிவமே இந்த ISO Image ஃபைல்கள் ஆகும். இதன் முலம் உலகின் எந்த மூலையிலுருந்தும் எங்கிருக்கும் ஒரு நபருக்கும் ஒரு இறுவட்டை அனுப்பிவிடலாம். அதனை அவர் CDயில் ரைட் செய்தால் போதும். ஆனால் இந்த வசதி Audio CDகளுக்கு பொருந்தாது.
இனி இந்த ஃபைல் ஃபோர்மட்டின் சில முக்கிய நன்மைகளை சுருக்கமாக பார்க்கலாம்.அதாவது இதன் மூலமாக எமது Harddiskஇனை Backup செய்து ஒரு DVDயாக மாற்றி கொள்ளலாம். ஒரு சீடியினை அதாவது Bootable CDகளை இலகுவாக நண்பர்களுக்கு அனுப்பலாம். இப்படியாக இதன் நன்மைகள் இன்னும் பல. இதை தவிரவும் இந்த File format பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினால்
http://en.wikipedia.org/wiki/ISO_image என்ற முகவரியை நாடுங்கள்.
எனவே இனி இந்த ISO Image ஃபைல்களை எவ்வாறு உருவாக்குவது? எவ்வாறு உருவாக்கப்பட்ட ஃபைல்களை சீடியில் பிரித்து எடுப்பது/ சீடி இல்லாமலே வெறும் கோப்புகளாக பிரித்து எடுப்பது? போன்ற நாம் அறிந்திராத
ISO Image ஃபைல் சார்ந்த அனைத்து செயற்பாடுகளையும் செய்வது பற்றி பார்ப்போம். நான் மேற்சொன்ன அத்தனை வேலைகளையும் இலகுவாக செய்ய Magic ISO என்ற மென்பொருள் உதவுகிறது. இதை தவிர பல மென்
பொருள்கள் இருந்தாலும் இது சிறய கொள்ளளவை கொண்டது, பாவிக்க இலகுவானது, இலவசமானது (Freeware) எனவே நான் இதனை தேர்வு செய்திருக்கிறேன் கீழே காணப்படுவதுதான் இதன் இடைமுகம் (Interface)
இதில் புதிய ISO ஃபைலை உருவாக்க File-->New-> Data CD/DVD Image என்பதை தெரிவு செய்து உங்கள் ஃபைல்களை தெரிவு செய்து Burn current compilation என்பதை தெரிவு செய்க இதை தவிர ஏனைய விளக்கங்கள் http://www.magiciso.com/tutorials/tutorials.htm என்ற இதன் உத்தியோகபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி
..பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் ஓட்டளித்து பதிவை பிரபலமாக்குங்கள்....