இந்த இனிய நாளில் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. இணையத்தைப் பொறுத்தவரை தரவிறக்கம் என்பது தவிர்க்க முடியாதது. அதிலும் Broadband தொழில்நுட்பம் அறிமுகமானதன் பின் இணையத்திலிருந்தான தரவிறக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எமது கோப்புக்களை இணைமூடாக மற்றவர்களின் தரவிறக்கத்திற்கென பகிர்வதற்காக பல இணையத்தளங்கள் உலாவருகின்றன, அவற்றை Online Storage என்று சொல்வோம். உதாரணமாக Megaupload, Rapidshare, Mediafire, WUpload, Filekeen இன்னும் பல. இணையத்தளங்களும் ஏதாவது மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்த இணைப்புகளையே (Links) தருகின்றன. நம்மைப் போன்றவர்களுக்கு இவற்றில் மிகப் பெரிய தலையிடியாக இருப்பது கால எல்லை (Time limit). அதாவது அவர்களின் இணையத தளங்களில் பதிவிறக்கம் செய்ய (இலவசமாக) அவர்கள் தரும் நேரம் வரை காத்திருக்க வேண்டும். அந்த கால எல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி. இதனை தவிர்க்க அவர்கள் தளத்தில் பணம் செலுத்தி Premium கணக்கு திறக்க வேண்டும். (நமக்குத்தான் அந்தப் பழக்கமேயில்லையே..) எனவே இத்தனை காலமும் இந்த தலையிடியால் நீங்கள் அவதிப்பட்டிருந்தீர்களானால் உங்களுக்கு மருந்தாக வருகிறது இந்தப் பதிவு.
இவ்வாறான இந்த தொடறரா தேக்ககங்களில் (Online Storage) காத்திருத்தலை தவிர்க்க ஃயர்ஃபாக்ஸ் (Firefox) மற்றும் குரோம் (Chrome) உலாவிகள் Skip screen என்ற ஒரு நீட்சியை வழங்குகின்றன. இதனை நிறுவிக் கொண்டால் உங்கள் கணினியிலும் இதனை தவிர்க்கலாம். இதனை நிறுவிய பின் (Firefox மற்றும் Chrome உலாவியிலும்) ஒரு முறை உலாவியை மீளியக்குங்கள் (Restart). பின் Toolbar இல் Skip screen இனுடைய Icon ஐ அவதானிக்கலாம். இனி நீங்கள் Megaupload, Rapidshare, Media fire, WUpload, Filekeen போன்ற ஏதாவதொரு தொடறரா தேக்ககங்களுக்கு (Online Storage) சென்றால் வழமையான தரவிறக்க இணைப்புக்கு கீழே Skip screen Download என்ற இணைப்பு தோன்றும் அதன் மூலம் இலகுவாக தரவிறக்கலாம். பயன்படுத்தி பாருங்கள், பின்னூட்டங்களை பகிருங்கள். மீண்டுமொரு முறை அனைவருக்கும் இனிமையான உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாள் இனிய நாள்.
தரவிறக்க இணைப்பு
....பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ்10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...