12 பிப்ரவரி, 2011

காவலன்-The bodyguard (It's not a movie)



என்ன..தலைப்பை கண்டு ஒரு மாதிரி ஆகிவிட்டீர்களா?நான் சொல்லப்போவதொன்றும் விஜய்,அசின் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் பற்றியில்லைஆனால் அதற்கு சற்று ஒத்த தன்மை கொண்ட ஒரு விடயம்தான்..(அது வேறு ஒன்றுமில்லை,காவலன் பார்த்தவுடன் எழுதுகின்ற பதிவு அதுதான்..)

இன்றைய நாட்களில் கணினியுகம் எல்லையின்ற நாளொருவண்ணமும் பொழுதுதொரு மேனியுமாக வளர்ந்து வருவது நாமறிந்ததே..இதனால் கணினி பாவனை கிராம,நகர வேறுபாடின்றி பரவி வருகிறது..எனினும் இன்று கணினிபாவனையாளர்கள் பெரிதும் Virus,Trojanhorse,Malware,Spyware பற்றி பெரிதும் கவலைப்டுவதும் கண்கூடு..ஏனெனில் தகவல் தொழில்நுட்பம் தீமைகளையும் தந்திருக்கிறதல்லவா..!அதனையும் ஏற்க வேண்டும்
எமது கணினிகளை இந்த Virus,Trojanhorse,Malware,Spyware இவற்றிடம் இருந்து எவ்வாறு தப்பிகொள்வது என்றால் அதற்கே ஒரு தனி பதிவெழுதலாம்.அது மட்டுமன்றி உங்களிடம் கேட்டால் ஒரு நல்ல Anti-virus பயன்படுத்தலாம் என்பீர்கள்..அதுவும் உண்மைதான் ஆனாலும் அது Pirate copyகளை நேசிக்கும் நம்மவர்களுக்கு சாத்தியமில்லை.

எனவே இலவசமாக பாதுகாப்பு பெற என்ன வழி என்று கேட்பவர்களுக்கு நான் சொல்ல போவது தீர்வாக அமையும்.Original Anti-virus CDகளுக்கு ஈடாக வேலை செய்யக்கூடிய பல Freewareகளும் சந்தையில் கிடைக்கின்றன..அதில் ஒன்றுதான் நான் சொல்லும் Malwarebytes-Anti malware.

இது ஒரு ஓப்பன்சோர்ஸ் அடிப்படை மென்பொருளாக அமைந்தாலும் வெறுமனே Antivirusஆக மட்டுமன்றி Antimalware,Firewall,Trojan remover ஆகவும் தொழிற்படகூடியது.இந்த லிங்ங் இல் பதிவிறக்கி உடன் இற்றைப்படுத்தி (Update) கொள்ளுங்கள்.இது பலரின் தேவையை பூர்த்தி செய்யும் என்பது ஐயமில்லை..உண்மையில் இலவசமாக இவ்வளவு வேலைசெய்கின்ற இது எமது கணினிக்கு உண்மையிலேயே ஒரு நல்ல காவலன் தானே....... தொடர்ந்தும் பேசலாம்,பல தலைப்புகளில் உலக கிண்ண
எதிர்பார்ப்புகளுடன் விடைபெறுகிறேன்...மீண்டும் சந்திப்போம்..Keep in Touch....   GOOD LUCK

Share With your friends