புதுவருடம் பிறந்து 5 நாட்கள் கடந்திருக்கின்ற நிலையில் இந்த வருடத்தின் முதல் பதிவு ஒரு மீட்டலாக இருக்க வேண்டும் என்பதால் இந்தப் பதிவு. சென்ற 2011ம் வருடம் தொடக்கம் முதல் இறுதி வரை நான் இங்கே எழுதிய அனைத்து இடுகைகளையும் நீங்கள் வாசித்திருப்பீர்களா என்பது தெரியாது, ஆனால் அப்படிப்பட்டவர்களுக்காகவே இது. வாசகர்களால் அதிகம் தரிசிக்கப்பட்ட மற்றும் திரட்டிகளில் அதிகூடிய வாக்குகளை பெற்ற சிறந்த 20 பதிவுகளை தொகுத்து தந்திருக்கிறேன். இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப உலகம் எதிர் கொள்ளப் போகும் நிலைகளை எண்ணிப்பார்க்க இம் மீட்டல் நிச்சயம் உதவும்.
Number 20 CMOS - ஒரு பார்வை
கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் 12ம் திகதி இந்தப் பதிவை எழுதியிருந்தேன். கணினியின் நினைவக கூறுகளின் ஒரு பகுதியான CMOS Battery யின் அடிப்படை செயல்பாடுகளையும் அதன் வரலாறுகள் பற்றியும் தொடர்ந்து இரண்டு பகுதிகளாக வெளியிட்ட பதிவு. நிச்சயம் வன்பொருள் ஆர்வலர்களுக்கு பயனளித்திருக்கும். இப்பதிவை முழுதாய் காண இங்கே அழுத்துங்கள்.
Number 19 PDF ஃபைல்களை இலகுவாக Unlock செய்யலாம்!
மிகவும் பாதுகாப்பானதும் நேர்த்தியானதுமான ஆவணப் பரிமாற்றலுக்கு பெயர் பெற்ற பிடிஎஃப் கோப்பு வகைகள் பற்றி அறிந்திருப்போம். அவ்வாறான பிடிஎஃப் கோப்புக்கள் சில வேளைகளில் அதன் உள்ளடக்கங்களை பிரதி செய்ய முடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் ஒரு விசேடித்த மென்பொருள் கொண்டு அவ்வாறான
கோப்புகளை Unlock செய்வது பற்றி நான் சென்ற வருடம் February மாதம் 05ம் திகதி பகிர்ந்து கொண்ட பதிவு. பதிவு சிறிதாயிருந்தாலும் பிரசுரித்த அந்த நாட்களில் 300க்கும் மேற்ப்பட்ட வாசகர்கள் தரிசித்த பதிவாகவும் இது இருக்கிறது. பதிவை காண இங்கே கிளிக்குங்கள்.
Number 18 காவலன்-The bodyguard
இதுவும் சென்ற வருடத்தின் இரண்டாம் மாதம் வெளியிட்ட பதிவு. தலைப்பை பார்த்து யோசிக்காதீர்கள். காவலன் திரைப்படம் சூடு பிடித்திருந்த நேரம் அது ஒரு கணினிக்கான முழுமையான இலவச Anti malware பற்றிய பதிவென்பதால் தலைப்பு கச்சிதமாக பொருந்திவிட்டது. 100க்கும் மேற்ப்பட்ட வாசகர்கள் தரித்த பதிவு. முழுமையாக காண இங்கே
Number 17 உங்களுக்காக புதிதாய் ஒரு சமூக வலைப்பின்னல்
கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கே பகிர்ந்து கொண்ட பதிவு இது. பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்க்கு இணையான இலகுவான ஒரு பதிய சமூக வலைப்பின்னல் அறிமுகம் நீங்களும் சென்று பாருங்கள்.
Number 16 ஸ்கைப் நண்பர்களை தேட இலகு வழி
உலகெங்கும் உள்ள அனைவரோடும் இணையத்தை பயன்படுத்தி பேச உதவுகின்ற ஒரு மென்பொருள் Skype என அறிவோம். ஆனாலும் சமூக வலைத்தளங்கள் போல புதிய நண்பர்களை Skype மென்பொருளிலும் தேடிக் கொள்ள உதவுகின்ற மற்றுமொரு இணையத்தளம் பற்றிய அறிமுக பதிவு.
Number 15 Notepad-அறிந்ததும் அறியாததும்
எளிமையான Text editing வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு இலவச மென்பொருள் Notepad என்பது தெரியும். ஆனால் அந்த Notepad மென்பொருளைக் கொண்டு HTML வலைப்பக்கங்கள் மட்டுமல்ல கணினியையே கதிகலங்க வைக்கும் வைரஸ் செய்நிரல்கள் வரை உருவாக்கலாம். இத்தனை காலமும் நீங்கள் அறிந்திருந்த இம் மென்பொருளின் அறியாத பல விடயங்களை சொல்லித்தருவதற்கென்றே சென்ற வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பகுதி இது.
Number 15 மிரட்டும் கார் பந்தயம் - இம்மாத கணினி விளையாட்டு
கணினி விளையாட்டுப் பிரியர்களுக்காகவே ஒவ்வொரு மாதமும் நான் எழுதுகின்ற பதிவு இது. உலகப் புகழ் பெற்ற Need for Speed கார்ப் பந்தய விளையாட்டின் Most wanted பதிப்பைப் பற்றி ஒரு பார்வை. அதனோடு Bonus ஆக இலவச தரவிறக்க சுட்டிகளையும் கொடுத்திருந்தேன். அதனாலோ என்னமோ பிரசுரித்த அந்த நேரம் தரிசித்த மொத்த வாசகர்கள் 200க்கும் மேல். சில வேளை உங்களுக்கும் பயன்படலாம்.
Number 14 தரவிறக்கத்திற்கென தனியாக ஒரு மென்பொருள் FlashGet
இணையம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பெரும் ஆதிக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறதோ, அது போலவே அதனோடு இணைந்த தரவிறக்கமும் தவிர்க்க முடியாததுதான். அவ்வாறானவர்களுக்காக ஒரு இலவச தரவிக்க அமன்பொருளை அறிமுகப் படுத்தியிருந்தேன். சென்ற வருடத்தின் ஜூலை மாதம் இங்கு நான் பகிர்ந்து கொண்ட பதிவு. எமது
கணினியின் தரவிறக்கங்களை இலகுவாக ஆளுகை செய்ய வழி செய்யும் இம் மென்பொருள் மூலம் Torrent சார்ந்த கோப்புகளையும் தரவிறக்கலாம் என்பது கூடுதல் தகவல். இங்கே
Number 13 ISO Image File ஆதி முதல் அந்தம் வரை
ISO கோப்புகள் பற்றி ஒரு முழுமையான விளக்க பதிவாக எழுதியிருந்தேன். அதுமட்டுமன்றி ISO கோப்புகளை குறுவட்டுகளில் பதியாமலே அவற்றினுள் உள்ள கோப்புகளை பிரித்தெடுப்பது எவ்வாறு எனவும் அதற்கான ஒரு மென்பொருள் அறிமுகமும்.
Number 12 நீங்கள் விரும்பாத இணையப்பக்கங்களை எந்தவொரு மென்பொருளின் துணையுமின்றி தடுக்கலாம்..!
நீங்கள் விரும்பாத, தரிசிக்ககூடாது என நினைக்கிற இணையப்பக்கங்களை அல்லது உங்கள் பிள்ளைகள் உலாவரகூடாது என நீங்கள் நினைக்கிற பக்கங்களை தடுப்பது பற்றிதான் இந்தப் பதிவு. அதுவும் இந்த வேலையை விண்டோஸ் இயங்கு முறைமையில் உள்ள ஒரு குறுக்கு வழியை பயன்படுத்தி செய்து விடலாம். மேலும் படிக்க
Number 11 நீங்கள் விரும்பும் File ஐ PDF ஆக மாற்றலாம்
சென்ற வருடத்தில் அதிகமாக பிடிஎஃப் (PDF) கோப்புகளைப் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் இந்தப் பதிவு. அதாவது உங்களிடம் உள்ள ஒரு ஆவணத்தை இலகுவாக PDF வடிவத்திற்க்கு மாற்ற உதவ கூடிய இலவச மென்பொருள் பற்றிய பதிவு. பலருக்கு பயன் தரக்கூடிய மென்பொருள்.
தொடரும்...
...இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக