30 அக்டோபர், 2013

உங்கள் கணினியின் மென்பொருள்களை இனி எளிதாக இடம் மாற்றலாம்


வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்ப உலகில் எமது அன்றாட வேலைகளில் ஒரு சிதை கூட கணினி இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலையில், கணினி என்ற சாதனம் இன்று அனைவராலும் தவிர்க்கப்பட முடியாத சாதனமாகவே மாறியிருக்கிறது. பொதுவாக எமது தேவைகளையும், வேலைகளையும் ஒரு கணினியை கொண்டு நிறைவேற்றி விடலாம் என்று சொன்னாலும், ஆழ்ந்து பார்த்தால் இது மாதிரியான வேலைகளை வெறுமனே கணினி என்ற சடப்பொருள் மட்டுமே செய்வதில்லை, அதனுள் உட்பொதியப்பட்டிருக்கும் (Install) ஒவ்வொரு வேலைகளுக்குமென உருவாக்கப்பட்ட மென்பொருள்களே அதற்க்கு மூலகாரணம். 

இதனால் ஒரு கணினியானது அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, பாவிக்கப்படும் வேலைகள் என ஒவ்வொன்றுக்குமான தனித்த மென்பொருள்களை தன் வன்தட்டில் (Hard disk) நிறுவி இயங்க வேண்டும். இவ்வாறான வன்தட்டுக்களை (Hard disk) இலகுவான பாவனைக்காக தர்க்கரீதியாக (Logically) துண்டுகளாக பிரித்து வகைப்படுத்துவது வழமை. இவற்றில் ஒரு பகுதி மென்பொருள்களுக்கு மற்றயைவை பாடல்கள், காணொளி (Videos), கோப்புக்கள் (Files) போன்றவற்றுக்கென்று ஒதுக்கியிருப்போம். பொதுவாக வீடுகளிலும் சரி அல்லது அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் சரி மென்பொருட்களை வன்தட்டின் C Drive இனுள்ளேயே பலரும் நிறுவுவது வழமை, அதுதான் முறையும் கூட. 

ஆனாலும் அதே C Drive இல்தான் உங்கள் கணினியை இயக்குகின்ற இயங்கு முறைமையும் (Operating System) குடிகொண்டிருக்கும். கணினியை பயன்படுத்தும் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றால் போல மென்பொருட்களையும் அதிகமாக நிறுவ (Install) வேண்டிய தேவையும் ஏற்படும். இதன்போது C Drive இற்க்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்க்கு மேலாக மென்பொருள்களை நிறுவ முடியாது. அல்லது மென்பொருள்கள் தனி Drive இலும் Utilities தனி Drive இலும் விளையாட்டுக்கள் தனியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தாங்கள் விரும்புகின்ற ஏற்கனவே தமது கணினியில் நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை இலகுவாக தமது வன்தட்டின் ஏனைய பிரிவுகளுக்கு மாற்றக்கூடிய வழிமுறைகளை இந்தப் பதிவிலே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  



நான் மேற்சொன்னது போலவே உங்களின் இந்த இடமாற்ற செயன்முறைகளுக்கு உதவக்கூடிய இலவசமான (Freeware) மென்பொருள் Steam Mover. இலவசமாக நிறுவக்கூடிய இந்த சிறிய மென்பொருளானது உங்கள் கணினியின் Registry Editor இல் சில மாற்றங்களை செய்வதனூடாக இரண்டு, மூன்று படிமுறைகளில் உங்களின் எந்தவொரு மென்பொருளையும் நீங்கள் சொல்கின்ற Drive இற்கு மாற்றிவிடும். முதலில் கீழுள்ள இணைப்பில் இருந்து இதனை இலவசமாக தரவிறக்கி (Download) கொள்ளுங்கள். பின்னர் வழமை போல நிறுவி இரட்டை கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். பின்னர் தோன்றும் மெனுவில் Steam Apps common folder என்பதற்க்கு நேரே உங்கள் மென்பொருள்கள் உள்ள இடத்தை தெரிவு செய்யுங்கள். பின்னர் Alternative folder என்பதற்ககு நேரே நீங்கள் எங்கு மென்பொருள்களை நகர்த்த வேண்டுமோ அவற்றை தெரிவு செய்து பின்னர் நீல நிற அம்புக்குறிகளை அழுத்துவதன் முலம் அவற்றை இடமாற்றலாம்.

கருத்துகள் இல்லை:

Share With your friends