எனது வலைப்பதிவின் ஒக்டோபர் மாதத்திற்கான மற்றொரு
பதிவு மூலமாக உங்களை சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. மேலும் IT CORNER வலைப்பதிவுக்கான பிரத்தியேக பேஸ்புக்
பக்கம் தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே உங்கள் பலரின் ஆதரவு கிடைத்திருக்கிறது.
இங்கே நீங்கள் காண்கிறவற்றை தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப தகவல்கள்,
இலவச மென்பொருள் தரவிறக்கங்கள் இவற்றோடு தொழில்நுட்பம் சம்பந்தமான சந்தேகங்கள்
தீர்வுகள் என பலதரப்பட்ட விடயங்களோடு அந்தப்பக்கம் புதுப்பிக்கப்படுகிறது. உங்கள் தொழில்நுட்பம் சம்பந்தமான சந்தேகங்களை IT CORNER பக்கத்தின் Wall இல் அல்லது Private Message ஆக அனுப்பி வைக்கலாம். பொருத்தமான சரியான தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம்.
சென்ற வாரம் உங்களோடு தொடரறா
(Online) தரவு சேமிப்பு பற்றிய அடிப்படைகளை பகிர்ந்திருந்தேன்.
அந்த விபரங்களின் அடிப்படையில் இந்த வசதியை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தி
கொள்வது தொடரறா (Online) தரவு சேமிப்பு சேவையை வழங்குகின்ற மிகப்பிரபலமான
5 நிறுவனங்களையும் இந்தப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
1. 1. Drop
Box
இணையத்தில் தொடரறா தரவு தேக்கத்திற்கு மிகப் பிரபலமான
சேவை இதுதான். அதுமட்டுமன்றி இணையப்பரப்பில் இந்த நாகரீகத்தை
தொடக்கி வைத்த பெருமையும் இவர்களையே சாரும். இலவசமாகவே உங்களுக்கான
கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஆரம்பத்தில் 2GB கொள்ளளவு மட்டுமே வழங்கப்படும். மற்ற சேவை வழங்குனர்கள்
இந்த அளவை அதிகரிக்க பணம் கேட்பார்கள் ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசம். உங்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் மின்னஞ்சல் மூலமாக இவர்களை
நீங்கள் Share செய்தீர்களானால் அதற்கேற்றால் போல உங்கள் கொள்ளளவும்
அதிகரிக்கும். முயற்ச்சித்து பாருங்கள்.
2. Google Drive
நான் மேலே சொன்ன Drop Box இற்கு அடுத்தபடியாக மிகப்பிரபலமான சேவை. இணைய ஜாம்பவான்
கூகிள் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை. தற்காலங்களில் மிகப்பிரபலமாக
பேசப்படுகிறது. உங்களின் Gmail கணக்கு மூலமே
உளநுழையலாம். ஆரம்ப கொள்ளளவு 5GB. கூகிளோடு
இணைந்து செயல்படுவதால் அதன் ஏனைய சேவைகளோடும் இணைத்த பயன்படுத்தக்கூடிய வசதி.
பாதுகாப்பானது.
முகவரி: drive.google.com
இணையத்தில் காணப்படுகின்ற பிரபலமான தொடரறா தகவல் சேமிப்பு சேவைகளில்
இதுவும் ஒன்று. மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனம் தருகின்ற சேவைகளுள் இதுவும் ஒன்று.
நீங்கள் Hotmail கணக்கு பாவிப்பவராக இருந்தால் இந்த சேவையை பயன்படுத்த முடியும். தரவு
சேமிப்பு அளவு 25GB முதல் ஆரம்பிக்கிறது. MS Office சார்ந்த ஆவணங்களை Online மூலாக
பரிமாற உகந்தது.
முகவரி: www.skydrive.com
4. Box Drive
இணையத்தில் பாரியளவான கோப்புக்களை பகிர்ந்து கொள்ள இணையத்தளங்களை நடாத்துபவர்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சேவை. இலவச கணக்குகளுக்கு 10GB வரையான இடமே வழங்கப்பட்டாலும் Premium கணக்குகளுக்கு 100GB வரை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. பாதுகாப்பு முன்னையவற்றை விட சற்று குறைவு.
5. Sugar Sync
இணையப்பரப்பில் உள்ள சேவைகளிலேயே மிகவும் அதிகமான கொள்ளளவை தருகின்ற
சேவைகளுள் ஒன்று. நான் இதன் முந்தைய பதிவில் சொன்னது போன்று Data BackUp இற்கு மிகப்பொருத்தமான
தளம். 60GB முதல் 1000+GB வரை சேமிக்கலாம். ஆனால் இலவச சேவை இல்லை. எந்தப் Package
ஐயும் Trial ஆக 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இணையப்பரப்பில் நாளாந்தம் பல புதிய புதிய தொடரறா தரவு சேமிப்பு
சேவை வழங்குனர்கள் உருவாகி கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும் அதிக பயனர்களைக்
கொண்டதுமான 5 தளங்கள் இவை. பொருத்தமானதை பயன்படுத்துங்கள். கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக