கணினி மற்றும் இணையம் ஆகியன
அத்தியாவசியமாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம். எங்களில் பலரும்
பல தேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்துகிறோம். அதில் தினமும் பல
நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் உலாவருகிறோம். ஒவ்வொரு தளங்களின் வடிவமைப்பும் வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தின் இடது,
வலது அல்லது இருபுறங்களிலும் நீங்கள் Sidebar இனை
அவதானித்திருப்பீர்கள். அந்த வலைப்பக்கங்களின் முக்கிய பகுதியாக
அவை இருக்கும். நீங்கள் வலைத்தள பராமரிப்பாளராக இருந்தால் நீங்கள்
உங்கள் வலைத்தளங்களின் உள்ளடக்கங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை
Sidebar இற்கும் கொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. எப்போதும் வலைத்தள பராமரிப்பாளர்களின் கவனம் எல்லாம் வாசகர்களை தங்கள் தளங்களில்
அதிக நேரம் தக்கவைத்திருப்பதுதான். இந்த வேலையில்
Sidebar களுக்கும் முக்கிய பங்குண்டு. எனவே நம்மில்
பலரும் ஏகப்பட்ட விட்ஜெட்களை Sidebar இல் இணைத்திருப்போம்.
சிலவேளை இது உங்கள் நோக்கத்திற்கு எதிராகவும் வேலை செய்யக்கூடும்.
எனவே இந்தப் பதிவில் உங்கள் வலைத்தளத்தின் Sidebar கொண்டிருக்க வேண்டிய சில முக்கிய விட்ஜெட்களையும் தெரிவு ரீதியான
(Optional) விட்ஜெட்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
#1 Search Box (தேடுதல் பெட்டி)
ஒரு வலைத்தளத்தின் மிக முக்கிய
பகுதிகளில் ஒன்று இது. உங்கள் தளத்துக்கு வருகின்ற வாசகர்கள்
பதிவுகளை குறிச்சொல் மூலம் தேடிப்படிக்க உதவுகின்ற பகுதி. உங்கள்
Sidebar இல் முதலாவதாக இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இலகுவாக அடையாளம் காண முடியும். அல்லது Navigation bar இலும் இணைக்கப்படலாம். பல வலைத்தள பராமரிப்பு
சேவை வழங்குனர்களிடம் இது Default Option ஆக வருகிறது.
#2 Subscription Widget (சந்தாதாரர் பகுதி)
உங்கள் வலைத்தளத்தில் இணைக்க வேண்டிய
அடுத்த மிக முக்கிய பகுதி இதுவாகும். அதாவது உங்கள் பதிவுகளையோ அல்லது செய்திகளையோ
வாசகர்கள் தங்கள் Inbox இலேயே பெற வழி செய்யும் சேவையே Subscription எனப்படுகிறது.
RSS Feed சேவையும் இதிலடங்கும். ஆனாலும் உங்கள் செய்திகள் முழுவதையும் அவர்கள்
Inbox இல் படிக்காமல் மேலும் படிக்க என்ற இணைப்பு மூலம் வலைத்தளத்திற்கு வரச்செய்வதே
சிறந்தது. இதுவும் உங்கள் பக்கத்தின் Visitors மற்றும் Page Views ஐ அதிகரிக்கும்.
#3 Recent Posts (அண்மைய பதிவுகள்)
உங்கள் வலைப்பதிவோ அல்லது இணையத்தளமோ
ஒரு பக்கத்தில் 10இற்கும் அதிகமான பதிவுகளை காட்டுவதாக இருந்தால் உங்கள் Sidebar இந்த
பகுதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக சில வாசகர்கள் பதிவுகளை தேடிப்படிக்க
கொஞ்சம் சோம்பல்படுவர். அத்தோடு அதிக பதிவுகள் ஒரு பக்கத்தில் வந்தால் பதிவுகளை வாசிப்பது
சிரமமாகும். எனவே உங்களின் அண்மைக்கால பதிவுகள் மற்றும் பிரபலமான பதிவுகள் கொண்ட பகுதியை
Sidebar இல் இணைத்தீர்களானால் பதிவுகளை தேடுவது இலகு. ஆனால் இது தன்னியக்கமாக
(Automatic) புதுப்பிக்கப்படகூடியவாறு (Dynamic) இருத்தல் நன்று.
#4 Categories/Archive (பதிவுகளின்
வகைகள்/தொகுப்பு)
இந்தப்பகுதியையும் உங்களில் பலர்
அறிந்திருப்பீர்கள். காரணம் Search போன்றே எல்லா வகை தளங்களிலும் Default ஆக வருகின்ற
பகுதி. அதாவது உங்கள் பதிவுகளை பதிவிட்ட மாத, வருட அடிப்படையில் காட்டுவதையே
Archive என்போம். அல்லது நீங்கள் செய்திகளை பல வகைகளாக பிரித்திருந்தால் அவற்றை காண்பிப்பதை
Categories எனலாம். இரண்டுமோ அல்லது ஏதாவது ஒன்றோ உங்கள் தளத்தில் இருப்பது போல பார்த்து
கொள்ளுங்கள்.
#5 Recent Comments (சமீபத்தைய
கருத்துக்கள்)
இது உங்கள் தளத்துக்கு வந்த வாசகர்கள்
உங்கள் பதிவுகளில் எழுதிச்சென்ற பின்னூட்டங்ளை தொகுத்து காட்டுகின்ற
பகுதியாகும். பின்னூட்டங்களே எப்போதும் உங்கள் தளத்திற்கு தொடர்ச்சியாக
வாசகர்களை வரச்செய்யும் எனவே இது உங்கள் Sidebar இல் மிக முக்கியமானது.
#6 Blog Stats (தளப்புள்ளி விபரம்)
இது ஒரு மூன்றாம் நபர் சேவை
(Third Party widget) மூலமாக இணைக்ககூடியது. உங்கள் இணையப்பக்கம் சம்பந்தமான புள்ளிவிபரங்களையும்
Alexa Rank, Online People போன்ற தகவல்களையும் காட்டும் படியாக அமைத்து கொள்ளுங்கள்.
Blogger பயனர்கள் இப்போது கூகிள் வழங்குகின்ற Blog Stats இணைக்க முடியும்.
இவை தவிர…
நான் மேலே சொன்ன ஆறு விட்ஜெட்களும்
கண்டிப்பாக ஒரு வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளத்திலோ இடம்பெற வேண்டியவை. இவற்றோடு மேலதிகமாக YouTube Subscription, Social Media Profiles, Calendar மற்றும் விளம்பரங்களும் இணைக்கப்படலாம்.
ஆனால் இணைய உலாவிகளில் உங்கள் பக்கம் தரவிறங்கும் வேகத்தில் விட்ஜெட்கள் முக்கிய பங்கு
வகிக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். சந்தேகங்களையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் பகிருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக