2 நவம்பர், 2013

Android இயங்குதள கைபேசிகளுக்கான சிறந்த 6 வைரஸ் தடுப்பு மென்பொருள்கள்


வெறுமனே தொலைவிலுள்ளவர்களுடன் குரல் வழிச் செய்திகளை மட்டுமே பரிமாறுவதற்கென்று தனது பயணத்தை ஆரம்பித்த கையடக்கத் தொலைபேசிகள் அன்றிலிருந்து இன்று வரை கண்ட ஒவ்வொரு வளர்ச்சியையும் புதிய பரிணாமத்தையும் நம்மில் பலர் அறிந்திருக்கின்றோம். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்கின்ற கையடக்க தொலைபேசிகளின் வளர்ச்சியின் தற்போதைய நிலை ஒட்டுமொத்த கணினியின் செயற்பாடுகளையும் தன்னுள் உட்பொதித்து கொண்ட Smart phone எனும் நிலை என்பது நாமறிந்ததே. இதனால் இன்று கைபேசிகளும் தங்களுக்கென்று உரிய மென்பொருள்கள் (Applications), தரவு சேமிப்பகம் (Data Storage) என பல புதிய கட்டமைப்புக்களுடன் வலம் வர கணினிகளைப் போன்றே அவற்றுக்கும் நச்சுநிரல் (virus) பீதி தொற்றியிருக்கிறது. இன்றளவில் பல பெறுமதியான இவ்வாறான வகை கைபேசிகளை பயன்படுத்துவோரும் இவ்வாறான அச்சநிலை தொடர்பில் கரிசனம் கொள்கிறார்களா என்பது சந்தேகமே. எனவே பெறுமதியான உங்களின் கைத்தொலைபேசிகளிலுள்ள உங்களின் தரவுகளையும், உங்களின் கைத்தொலைபேசிகளின் செயல்திறனையும் பாதுகாக்க பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் கணினிகளுக்கான பதிப்புக்கள் (Versions) போலவே Android மற்றும் iOS வகை கைபேசிகளுக்கான பதிப்புக்களை (Versions) தருகின்றன. இவற்றில் சில முற்றிலும் இலவசமானவை, சில பகுதி இலவசமானவை, மற்றும் சில முழுதாக பணம் செலுத்தி பயன்படுத்த வேண்டியவை. உங்களின் கைபேசியின் Android பதிபை பொறுத்து பொருத்தமானதை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்...

# Avast

Android இயங்குதளங்களை பொறுத்த வரையில் அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் அதிக நம்பிக்கையை தருகின்ற மென்பொருளாகும். இதனுடைய கணினிகளுக்கான பதிப்பை போன்றே கையடக்க தொலைபேசிக்கான இதனது பதிப்பும் உங்களின் கைபேசிக்கு தீங்கு தரும் மென்பொருட்கள், விளையாட்டுக்கள் மற்றும் Malware போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமன்றி Anti theft தொழிற்பாடு மூலம் இது உங்கள் தொலைபேசியின் System tray இல் இருந்து உங்கள் கையடக்க தொலைபேசியை 24மணி நேரமும் கண்காணிக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு இம் மென்பொருளை Avast தனது பயனர்களுக்காக முற்றிலும் இலவசமாகவே தருகிறது.




# Kaspersky Mobile Security

Kaspersky என்பது பல கணினி பாவனையாளர்களின் விருப்பத்துக்குரிய சொல், காரணம் கணினியின் தரவுப் பாதுகாப்பில் பல பலமான வசதிகளை தருவது இம் மென்பொருள்தான். அதே போலவே Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கும் தனது மென்பொருள்கள் மூலம் அதிஉயர் பாதுகாப்பை தருகிறது. பாவனையாளர்களின் இலகுக்காக Lite Version மற்றும் Paid Version என இருவகையான மென்பொருள் பதிப்புக்களை தருகிறது. Lite version ஆனது உங்களின் கைபேசிகளுக்கு நச்சுநிரல் (Virus) பாதுகாப்பு, Anti theft, மற்றும் உங்கள் தொலைபேசியின் Call managerஇற்கான பாதுகாப்பை தருவதோடு உங்கள் தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் (Instant messages) தொடர்பில் வடிகட்டும் சேவையையும் தருகிறது. இவற்றைவிட Paid Version சில மேலதிக நன்மைகளையும் தருகின்றன.

* தரவிறக்க Lite version
                         Paidversion  


# Norton Mobile Security

வெகு நாட்களாகவே கணினிகளின் வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் பெயர் பெற்ற ஒரு மென்பொருள் என்று சொல்லலாம். அதே போன்று தனது பாதுகாப்பினை உங்களின் Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கும் தனது பாதுகாப்பு வசதிகளை தருகிறது. வைரஸ் பாதுகாப்பு மற்றும் குறுஞ்செய்தி மூலம் பரவும் வைரஸ்கள் தொடர்பிலும் இது பாதுகாப்பை தருவதுடன் உங்களின் தொலைபேசியை முழுதாக கண்காணிக்கிறது.    


# NQ Mobile Security & Antivirus

கணினிகளை பொறுத்தமட்டில் புதிய பெயராயிருந்தாலும் கைத்தொலைபேசிகளை பொறுத்தவரையிலும் அதன் பாவனையாளர்களைப் பொறுத்த வரையிலும் மிகப் பிரபல்யமான பெயராகும். காரணம் Smart phoneகள் அறிமுகமாகுவதற்கு முன்பே Symbian வகை கைத்தொலைபேசிகளுக்கான பாதுகாப்பு மென்பொருள்கள் மூலம் தனது பெயரை பதித்து கொண்ட இம் மென்பொருள் தற்போது Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கும் தனது பாதுகாப்பு வசதிகளை தருகிறது. பல புதுமையான வசதிகளுடன் இலவமாக இம் மென்பொருளை நிறுவ முடியும்.

# Dr Web Antivirus

Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கென புதிதாக அறிமுகமாயிருந்தாலும் தனது பல புதிய வசதிகள் காரணமாக பல பாவனையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கின்ற புதிய மென்பொருள். வழமையாக ஏனைய மென்பொருள்கள் போன்றே இதுவும் தனது பயனர்களுக்கு பல வசதிகளைத் தருகின்றது. இதனுடைய செயற்பாடுகளையும், பாவனையாளர்கள் இதனுடைய செயல்பாடுகள் பற்றி Google Play இல் பதிந்திருக்கின்ற கருத்துக்கள் மற்றும் இதனுடைய Review மூலமுமாக பதிய மென்பொருள் என்றாலும் ஏனைய பல பிரபல்யமான மென்பொருள்களுக்கு நிகராக இயங்க கூடியது என நம்பலாம்.

* தரவிறக்க  Paid version    
                          LiteVersion  

# Lookout Security & Antivirus

Google Play இல் உள்ள மற்றுமொரு சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருள் இது என்று சொல்லலாம். காரணம் இது முற்றிலும் Android வகை இயங்குதளங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டதாகும். சாதாரண வைரஸ் பாதுகாப்புடன் சேர்த்து கூடுதல் வசதியாக உங்கள் தொலைபேசிக்கு Backup வசதியையும் தருவதுடன் உங்கள் தொலைபேசி தொலைகின்ற போது மீட்டுக் கொள்ளக்கூடிய Phone finder வசதியையும் தருகிறது.    


நான் மேற்சொன்ன இந்த மென்பொருட்கள் தவிர இன்னும் பல வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் Google Play இல் கிடைத்தாலும் சிறந்த 6 மென்பொருட்களை தொகுத்து தந்திருக்கினறேன். இவை தவிர இன்னும் பல வைரஸ் தடுப்பு மென்பொருட்களை Google Play இல் தேடி பெற்றுக் கொள்ளுங்கள். இதனூடாக உங்களின் கைடக்க தொலைபேசியின் தரவுப் பாதுகாப்பையும் செயற்திறனையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இம் மென்பொருட்கள் தொடர்பிலான உங்களின் கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள்.. 

         ✤ அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்  

கருத்துகள் இல்லை:

Share With your friends