விளையாட்டுக்கள் என்றாலே பொதுவாக அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் உண்டு. அவரவர் ரசனையை பொறுத்து அது வேறுபடுகிறது. நம்ம ஊர் கபடி தொடங்கி அமெரிக்கன் ஃபுட்பால் வரை நம்மவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள்....(இப்பொது லேட்டஸ்ட்டாக சிலருக்கு 'மங்காத்தாவும்' பிடிக்குதாம்) இப்படியாக விளையாட்டுக்களுக்கு தடைபோட்டு செல்வது தவிர்க்க முடியாதது. எனவேதான் சாதாரண PSP தொடங்கி கணினி வரை அனைத்திலும் Games என்ற பகுதி..(இது இல்லையென்றால் சிலர் அவற்றை வாங்குவதும் இல்லை..) தவிர்க்க முடியாதது. அதிலும் குறிப்பாக கணினி விளையாட்டுக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்துவிடும் சக்தி கொண்டது. குறைந்தது 1 கணினி விளையாட்டையாவது விளையாட ஒரு கணினி துறைசார்ந்தவரை காணவே முடியாது. இதனால்தான் மாதம் ஒரு புது விளையாட்டை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.
பொதுவாக கணினி விளையாட்டுக்கள் அவற்றின் தன்மையை பொறுத்து Action, Racing, Puzzle, Adventure, Shootong, Sports, Kids, Arcade, Brain teaser, Space இப்படியாக இன்னும் பல வகையாக பிரிக்கப்படுகின்றன. எத்தனை வகையான கணினி விளையாட்டுக்கள் இருந்தாலும் பந்தயங்கள் (Racing) சார்ந்த கணினி விளையாட்டுக்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.
நான் சொல்கின்ற இந்த கணினி விளையாட்டும் ஒரு பந்தயம் சார்ந்ததுதான் அதிலும் கார் பந்தயம் சார்ந்தது. (Car racing) நம்மில் பலர் அறிந்த Need for Speed கணினி விளையாட்டின் மற்றுமொரு பதிப்பாகிய Need for Speed Most wanted என்பதாகும். வழமையான Car racing போலல்லாது மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக காரின் ஒவ்வொரு அசைவும் அதி உயர் 3டி தொழில்நுட்பம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப ட்ரெயிலர் கண்களை அகல வைவக்கிறது. வழமையாக கேம்களுக்கிடையில் வரக்கூடிய Movieகள் கிராஃபிக்ஸ் மூலமே ஆக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்த விளையாட்டில் அவை நிஜ மனிதர்களை வைத்த படமாக்கப்பட்டிருக்கிறது. Career mode, Challenge mode, Quick racing ஆகிய மோட்கள் கொடுக்கப்படுகின்றன. அதிலும் Career mode இல் பதினைந்து பேருடன் சவால் விட்டு ஜெயிக்க வேண்டும். இவற்றோடு LAN வலையமைப்பின் மூலம் கூட இதனை விளையாடலாம். உங்கள் கார் ஓட்டும் திறமையை பரிசோதிக்க Online play ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது உலகளவில் உள்ள போட்டியாளர்களுடன் மோதலாம்..
இன்னும் சொல்லி கொண்டு போகுமளவுக்கு இதன் சிறப்பியல்புகள் உள்ளன. EA நிறுவனத்தாரின் இந்த வடிவமைப்பு விளையாடுபவர்களுக்கு நிஜமாகவே ஒரு காரினை ஓட்டுகிற அனுபவத்தை அளிக்கிறது... சுருங்கச் சொன்னால் NFS Most wanted மிரட்டுகிறது...இதனை உங்கள் கணினியில் நிறுவ கணினி கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் கீழே தந்திருக்கிறேன். உங்கள் OS விண்டோஸ:7 64பிட் கொண்டதாக இருந்தால் சிலவேளை நிறுவுவதில் சிக்கல் வரலாம் அல்லது வேறு இயங்குதளங்களிலும் சிக்கல் வந்தால் பின்னுாட்டம் இடுங்கள்... தீர்வு கிடைக்கும். நான் தந்திருக்கிற தரவிறக்க சுட்டிகள் 11 பகுதிகள் காணப்படுகிறன. அனைத்தையும் தரவிறக்கி பின் Winrar கொண்டு Extract செய்து நிறுவுங்கள்...
Minimum System Requirements
OS: Windows XP or 2000
CPU: 1.4 GHz or faster
RAM: 256 MB or more
Disc Drive: 8x or faster CD/DVD drive
Hard Drive: 3 GB or more free space
Video: DirectX 9.0c compatible (see right)
Sound: DirectX 9.0c compatible
Input: Keyboard, mouse, or USB Steering Wheel/Gamepad
Video card with 32 MB or more memory and one of these chipsets is required: ATI Radeon 7500 or greater; ATI Radeon Xpress 200; NVIDIA GeForce2 MX/GTS or greater; Intel 950/i915g; S3 GammaChrome S18 Pro
Multiplayer requires 1 set of discs per PC and a broadband (Cable, DSL, or faster) connection.
Internet or LAN (2-4 players)
தரவிறக்க சுட்டிகள்
....திரட்டிகளில் ஓட்டளித்து பதிவை பிரபலமாகக்குங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக