27 நவம்பர், 2013

கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி 03)

<< பகுதி 01
<< பகுதி 02

 

ஒரு நீண்ட பதிவின் மூன்றாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற அடிப்படைகளை அறிந்துகொண்டோம். பின் நாங்கள் துருவ வேண்டிய வலையமைப்பிலிருந்து வருகின்ற Data packetsஐ capture செய்வது பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்த்தோம். இனி அவற்றை சேமித்து எவ்வாறு decryption செய்வது என்பதிலிருந்து இருந்து மூன்றாம் பாகம்.

Step 05: கடவுச்சொல்லை துருவுதல் (Hack the password)
------------------------------------------------------------------------
* நான் சொன்னதுபடியே 100000 வரை அல்லது அதற்கு மேலாக (இந்த தொகையைவிட நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகம் capture செய்கிறீர்களோ அந்தளவு வேகமாக சுலபமாக cracking அமையும்.) data packets capture செய்திருப்பீர்கள். இனி அவற்றை save செய்ய வேண்டும். commview மென்பொருளின் packets tab இற்கு செல்லுங்கள். இதுவரை நீங்கள் capture செய்த data packets அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள அனைத்தையும் select (Ctrl+A)செய்யுங்கள்.

* பின்னர் right click செய்து பெறப்படும் menuவில் save packets as என்பதை click செய்யுங்கள். save as மெனு தோன்றும். நான் முன்னர் சொன்னது போல தனியான பாதுகாப்பான folder இல் packets என்ற file name இல் save செய்யுங்கள்.



* அடுத்து commview மென்பொருளை மூடாமல் நீங்கள் packetsஐ சேவ் செய்த இடத்திற்கு சென்றால் packets என்ற பெயரில் commviewஇன் iconஇல் ஒரு fileஐ காண்பீர்கள். அதனை திறந்து கொள்ளுங்கள். இதன் போது கீழுள்ளது போல window தோன்றும்.

* அதில் file -> Export -> Wire shark tcpdump format என்பதை தெரிவு செய்யுங்கள். expackets என்ற பெயரில் அதனையும் தனியான ஓரிடத்தில் save செய்யுங்கள். இது .cap வடிவில் save ஆகும்.

* பின் நீங்கள் தரவிறக்கிய folderஇனுள் உள்ள aircrack-ng-1.2-beta1-win என்ற folderஐ திறந்து அதனுள் உள்ள bin folderஐ திறங்கள். பின் அதிலுள்ள Aircrack-ng GUI.exe ஐ திறந்து கொள்ளுங்கள்.



* தோன்றும் மெனுவில் filename என்பதற்கு நேரே உள்ள choose என்பதில் நீங்கள் save செய்த expackets.cap ஐ தெரிவு செய்யுங்கள். பின் encryption என்பதில் WEP ஐ தெரிவு செய்து Launch கிளிக் செய்யுங்கள்.

* நீங்கள் 5000IV க்கு அதிகமாக capture செய்திருந்தால் நீங்கள் இவ்வளவு நேரமும் ஆவலோடு எதிர்பார்த்த நீங்கள் கண்டுபிடிக்க நினைத்த paswword தோன்றும். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றும். உதாரணமாக 
password 89281 என்பதாக இருந்தால் அங்கு (89:2:81:) என்று தோன்றும். அதிலுள்ள : () போன்றவற்றை நீக்கினால் password கிடைக்கும். 

* இனி வழமைபோல உங்கள் கைவரிசையை காட்ட வேண்டிய நேரம்... WPA, WPA2-PSk போன்ற wifi networkகளை துருவுதல் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.


26 நவம்பர், 2013

உங்களின் PowerPoint கோப்புக்களை YouTube இல் பகிர்வதற்க்கு உதவும் சிறப்பு மென்பொருள் - இம்மாத மென்பொருள்

  


பொதுவாகவே ஒரு விடயத்தை அதனைப் பற்றி அறிந்திராத புதியவர்களுக்கு முன்வைக்கின்ற செயற்பாடு Presentation என எளிமையாக கூறலாம். கணினி நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இவ்வாறவான ​செயல்பாடுகளை செய்வதில் பெரிதும் துணை புரிவது Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள்தான். பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடங்கி அலுவலகங்களில் புதிய செயல்திட்டங்களின் (Projects) அறிமுகப்படுத்தல் வரை ஒரு விடயத்தை மற்றவர்களுக்கு இலகுவாகவும், தெளிவாகவும், அழகாகவும் சொல்ல Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருளையே நாம் பயன்படுத்துகிறோம். 



இவ்வாறு இம் மென்பொருளில் ஒரு கோப்பினை தயாரிக்கும் போது அதனை இன்னுமொரு கணினியில் பார்ப்பதற்க்கு அதிலும்  Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள் நிறுவப்பட்டிருக்க (Install) வேண்டும். அதேவேளை  PowerPoint மென்பொருள் கோப்புக்களை (Files) ஒரு காணொளி (Video) போன்று தொடர்ச்சியாக பார்வையிடவோ அல்லது அவற்றை YouTube போன்ற இணையத்தளங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கோ உரிய தெரிவுகள் (Option) இயல்பாக (Default) அம்மென்பொருளில் இருப்பதில்லை. எனவே இவ்வாறான தேவைகளை நிறைவு செய்ய Moyea PPT to Video Converter என்ற மென்பொருள் உதவுகிறது.




முதலில் நான் இந்தப் பதிவின் இறுதியில் தந்திருக்கின்ற இணைப்பின் மூலம் இம் மென்பொருளை இலவசமாக தரவிறக்கி (Download) நிறுவி கொள்ளுங்கள். பின் அம் மென்பொருளை திறந்து அதிலுள்ள Add Button ஐ கிளிக் செய்யுங்கள். இதன்போது தோன்றுகின்ற Browse Menu இல் நீங்கள் காணொளியாக (Video) மாற்றவிரும்புகின்ற கோப்பினை தெரிவு செய்யுங்கள். இதில் நீங்கள் ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களையும் மாற்றலாம்.

பின்னர் Profile என்பதற்க்கு நேரேயுள்ள Settings என்பதை தெரிவு செய்ய தோன்றும் Output Setting Menuவில் உங்கள் காணொளி (Video) என்ன Format இல் வரவேண்டுமோ அதை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக YouTube தளத்தில் பதிவேற்றுவதற்கோ அல்லது பொது பாவனைக்காகவோ இருந்தால் Common Video பகுதியில் உள்ள MP4-MPEG-4 Video (*.mp4) என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் காணொளி (video) எங்கு சேமிக்கப்பட (save) வேண்டுமோ அந்த இடத்தைOutput என்பதில் தேர்வு செய்து இறுதியாக Start என்பதை அழுத்த உங்கள் PowerPoint மென்பொருள் தொகுப்பு காணொளியாக மாற்றப்பட்டு விடும். இனி, வழமையாக பதிவேற்றுவது போன்று Youtube தளத்திலோ அல்லது ஏனைய இணையத்தளங்களிலோ இதனை பதிவேற்றவும் முடியும். 


25 நவம்பர், 2013

கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி02)


ஒரு நீண்ட பதிவின் இரண்டாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற அடிப்படைகளை அறிந்துகொண்டாயிற்று. இனி எங்கள் துருவுதலுக்கு (Hacking) தேவையான விடயங்களில் இருந்து இரண்டாம் பாகம்.

Step 03: தேவையான பொருட்கள்
------------------------------------

1. பொதுமைப்பாடான கம்பியில்லா தரவு உள்வாங்கி (A compatible wireless adapter)
இருப்பதிலேயே மிகப்பெரிய தேவைப்பாடு இதுதான். அதாவது உங்களிடம் ஒரு Wi-Fi Adapter இருப்பது அவசியம். அது நாங்கள் பயன்படுத்தப்போகின்ற CommView மென்பொருளை ஆதரிப்பதாக இருக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று உங்கள் Device CommView ஐ ஆதரிக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். 

2. CommView For Wi-Fi
நாங்கள் எந்த வலையமைப்பை துருவ போகிறோமோ அதிலிரந்து வருகின்ற சமிஞ்ஞைகளை சேமிக்க உதவுகின்ற மென்பொருள். 

3. Aircrack-ng GUI
நான் மேலே சொன்னது போன்று நீங்கள் சேமித்த சமிஞ்ஞைகளை Decryption செய்கின்ற மிக முக்கிய மென்பொருள் இதுதான். கையாள்வதற்கு MS-DOS அல்லது Command Prompt இனை பயன்படுத்திய அனுபவம் இருப்பது நல்லது.

4. இறுதியாக இவை எல்லாவற்றையும் விட இந்தப்படிமுறைகளை செய்து முடிக்க உங்களின் பொறுமை மிகமிக முக்கியமானது.

Step 04: கடவுச்சொல்லை துருவுவதற்க்கான மென்பொருள்களை நிறுவுதல்
--------------------------------------------------------------------------------------------------------
நான் தந்த இணைப்பில் இருந்து எல்லா மென்பொருட்களையும் நிறுவி தயாராக வைத்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனி அவற்றை நிறுவல் படிமுறைகளை பார்க்கலாம்..

முதலில் CommView மென்பொருளை நிறுவ வேண்டும். தரவிறக்கிய போது கிடைத்த Hack a Wi-Fi with IT CORNER என்ற RAR Fileஐ WinRAR கொண்டு Unrar செய்யுங்கள் நீங்கள் Unrar செய்கின்ற இடம் பாதுகாப்பான தனியான இடமாக (உ-ம்: LocalDisk C தவிர்ந்த ஏனைய partition, அல்லது வேறு USB Drive) இருந்தால் நல்லது.

* Unrar செய்ததும் கீழுள்ளது போல காண்பீர்கள். இதில் ca7என்ற Folderஐ திறங்கள். 



அதனுள் உள்ள Setup.exeஐ திறந்து வழமைபோன்று நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவும் போது Next கொடுத்து கொண்டு செல்லுங்கள். ஒரு இடத்தில் கீழுள்ளது போல தோன்றும் அதில் VoIP Mode என்பதை கொடுத்து நிறுவுங்கள்.



* நிறுவிய பிறகு crack என்ற folderஐ திறந்து cv என்ற Iconஐ திறங்கள். பின் Yes என்பதை அழுத்துங்கள். இப்போது Commview மென்பொருள் crack செய்யப்பட்டுவிட்டது.

* நிறுவியதும் Desktopஇல் உள்ள CommView for WiFi என்ற Iconஐ திறந்தகொள்ளுங்கள். பின் அதன் இடதுபக்க மூலையிலுள்ள  வடிவ Iconஐ கிளிக் செய்யுங்கள். 
* கீழுள்ளது போல தோன்றும் மெனுவில் channel என்பதற்கு நேரே 14 ஐ தெரிவு செய்து start captureஐ அழுத்துங்கள்.



* இதன்போது உங்கள் கணினியின் WiFi On நிலையில் இருக்க வேண்டும். சில நிமிடங்களில் உங்களை சுற்றியுள்ள அனைத்து WiFi Netwokகளும் உங்கள் முன் பட்டியலிடப்படும். அதில்  நீங்கள் இலக்கு வைத்த wifi தெரிவு செய்யுங்கள். முக்கியமாக அதனுடைய Security type "WEP" ஆக இருக்க வேண்டும். ("WPA2-PSK, WPA" போன்ற வலையமைப்புக்களை crack செய்வது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்)
* பின் capture என்பதை கிளிக் செய்யுங்கள். 
* நீங்கள் தெரிவு செய்த wifi இற்கான datapackets capture ஆவதை காண்பீர்கள். எங்களுக்கு datapackets மட்டுமே தேவை என்பதால் மேல் நிரையில் உள்ள management packets, control
packets என்பவற்றை deselect செய்யுங்கள்.


கொஞ்சம் பொறுத்திருங்கள்
------------------
இதுதான் மிகவும் சிக்கலான பகுதி. அதாவது நீங்கள் crack செய்ய விரும்புகின்ற network இல் இருந்து வருகின்ற datapackets இல் சுமார் 100000 வரை capture ஆகவேண்டும். இதன்போதுதான் உங்கள் முயற்சி
வெற்றிகரமாக அமையும். packets என்பதற்கு கீழே நான் சொன்ன தொகைக்கு அதிகமாக வரும் வரை பொறுத்திருங்கள். இந்த செயற்பாட்டிற்கு எடுக்கின்ற நேரம் signel strength ஐ பொறுத்து வேறுபடும். தொடர்ந்து
காத்திருங்கள்...  
<< பகுதி 01

பின்குறிப்பு:
அனைத்து படிமுறைகளும் சிக்கலானவையும், ஆழமானவையும் என்பதால் சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் பின்னுாட்டங்களில் அல்லது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுங்கள்.



24 நவம்பர், 2013

கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி01)



வருடத்தின் இறுதிப்பகுதிக்குள் மெதுவாக நுழைகின்ற தருணத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமான, சிக்கலான, பெரிய பதிவொன்றில் சந்திப்பது மகிழ்சி. எங்கள் மொழியில் இதுவரை இப்படி முயற்சி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனாலும் வழக்கம் போல புதுமை, வித்தியாசம் என்ற எனது வலைப்பதிவின் கொள்கைகளுக்காக இந்த பதிவு.. ஆர்வமுள்ளவர்கள் முயற்சியுங்கள் ஏனையவர்களுக்கு நிச்சயம் உங்கள் கணினி தொழில்நுட்பம் சம்பந்தமான ஏதேனும் பிற முயற்சிகளுக்கு பயன்படும் என்ற நம்பிக்கை. நீண்டகாலமாக தமிழ் மொழி சார்ந்து இடைமட்ட கணினி நுட்பவியலாளர்களிடம் இருக்கின்ற பெரிய சந்தேகம் இது. பலர் இதை செய்துமிருக்கலாம், சிலர் முழுமையாக அறிந்திருக்க மாட்டீர்கள் இன்னும் சிலரோ அறிய ஆர்வமாயிருப்பீர்கள்.. மூன்றாவது வகையினராக நீங்கள் இருந்தால் இங்கு உங்கள் நேரம் செலவழிவதில் தப்பில்லை.

இந்தப் பதிவின் உள்ளடக்கங்களாக அமைபவை...

* Wi-Fi சுருக்க அறிமுகம்
* கம்பியில்லா வலையமைப்புக்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
* தேவையான பொருட்கள்
* கடவுச்சொல்லை துருவுவதற்க்கான மென்பொருள்களை நிறுவுதல்
* துருவுவதற்கான இலக்கை தெரிவு செய்தல்
* கொஞ்சம் பொறுத்திருங்கள் 
* கடவுச்சொல்லை துருவுதல் (Hack the password)
* இறுதியில் எந்த Wi-Fi வலையமைப்பை தகர்ப்பதும் சாத்தியமே..!

Wi-Fi சுருக்க அறிமுகம்
-------------------------------------



குறிப்பிட்ட பௌதீக தளத்தில் உள்ள கணினியை அதே இடத்திலோ அல்லது வேறொரு இடத்திலோ உள்ள கணினியொன்றுடன் தர்க்கரீதியாக (Logically connect) இணைத்தல் கணினி வலையமைப்பு எனப்படுகிறது. இது பிரதானமாக கம்பி மூல (Wired) மற்றும் கம்பிகளற்ற (Wireless) வலையமைப்பு என பிரதானமாக இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. இரண்டாம் வகையே இங்கு நமக்கு தேவையானது. அதாவது டிஜிட்டல் சமிக்கைகளாக தரவுகள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளுக்கிடையில் பகிரப்படல் Wireless எனப்படுகிறது. நாங்கள் எவ்வாறு தரவுகள் மட்டுமன்றி இணைய இணைப்பையும் வடங்களுடாக Wired Network இல் பகிர்கிறோமோ அது போல Wireless இலும் செய்ய முடியும். அதாவது இணைய இணைப்பு உள்ள ஒரு சேவையக (Server) கணினி ஏனைய Client கணினிகளுக்கு அதனை வடங்களில்லாமல் டிஜிட்டல் சமிஞ்ஞைகளாக பகிரலாகும். இவ்வாறு பொதுவில் இணையம் பகிரப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த டிஜிட்டல் சமிஞ்ஞைகளை உள்வாங்க கூடிய தகைமை கொண்ட எந்த கணினியும் அந்த வலையமைப்பில் இணையமுடியும் என்பதால்  அது குறித்த ஒரு கடவுச்சொல் கொண்டு சங்கேதமாக்கப்பட்டு (Encrypt) பகிரப்படுகிறது. அந்த கடவுச்சொல்லை அறிந்தவர்கள் மட்டுமே அந்த சமிஞ்ஞைகளை Decryption செய்து பயன்படுத்த முடியும். ஆனால்  தொழில்நுட்பம் மூலமாக அந்த சமிஞ்ஞைகளை இடைமறித்து அந்த Passprase எனப்படுகின்ற கடவுச்சொல்லை தரிந்து கொள்கின்ற மிகச்சாதுரியமான அதே நேரம் மிகச்சிக்கலான செயற்பாடே Aircraking எனும் விஷேட பதம் கொண்டு அழைக்கப்படுகிறது. வெறுமனே Wi-Fi Signalகள் மட்டுமல்லாமல் ராணுவ உளவு நடவடிக்கைகள், Airship hijack போன்ற வேலைகளும் இப்படித்தான் நடந்தேறுகிறன.

கம்பியில்லா வலையமைப்புக்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
-------------------------------------------------------------------------------------------------------



மேலே அறிமுகத்தில் நான் Wi-Fi வலையமைப்புக்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று சொன்னேன். அவை அவ்வாறு பாதுகாக்கப்படுகின்ற வழிமுறைகள் இவ்வாறான Hacking தொல்லைகளால் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக பாதுகாப்பு கூடியவையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவை இரண்டு

1. WEP (Wired Equivalent Privacy)
முதன்முதலில் Wi-Fi வலையமைப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறை. ஆனால் பாதுகாப்பு மிகிமிக குறைவானது.எளிதில் தகர்க்ககூடிய வலையமைப்பு. நீங்கள் Wi-Fi Network இனை கொண்டிருந்தால் தயவுசெய்து இந்த முறையை தெரிவு செய்யாதீர்கள்.

2. WPA (Wi-Fi Protected Access)
முதலிலுள்ள பாதுகாப்பு முறைகளின் குறைகளை நீக்கி பின் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறை இது. துருவுவதற்கு மிகக்கடினமானதென ஆரம்பத்தில் கருதப்பட்டது. Aircracking இல் சாத்தியமாகவில்லை. ஆனால் Common phaseprase மூலம் இந்தவகை வலையமைப்பின் கடவுச்சொல் இலகுவாக இருந்தால் தகர்க்கலாம். எனவே உங்கள் Wi-Fi இற்க்கான கடவுச்சொல்லை அமைப்பதில் கவனம் கொள்ளுங்கள். இலகுவில் ஊகிக்க முடியாதவாறு அதிக Characters கொண்டு அமைத்தால் நல்லது.

ஒரு கம்பியில்லா இணைய வலையமைப்பை துருவுவதற்கான அடிப்படை அறிவை இப்போது பெற்றிருப்பீர்கள். இரண்டாவது பகுதியில் அடுத்த படிமுறைகளை பார்ப்போம். தொடர்ந்தும் வாசியுங்கள்...
கருத்துக்களை பின்னுாட்டங்களில் எழுதுங்கள். நண்பர்களோடும் பகிருங்கள்.

2 நவம்பர், 2013

Android இயங்குதள கைபேசிகளுக்கான சிறந்த 6 வைரஸ் தடுப்பு மென்பொருள்கள்


வெறுமனே தொலைவிலுள்ளவர்களுடன் குரல் வழிச் செய்திகளை மட்டுமே பரிமாறுவதற்கென்று தனது பயணத்தை ஆரம்பித்த கையடக்கத் தொலைபேசிகள் அன்றிலிருந்து இன்று வரை கண்ட ஒவ்வொரு வளர்ச்சியையும் புதிய பரிணாமத்தையும் நம்மில் பலர் அறிந்திருக்கின்றோம். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்கின்ற கையடக்க தொலைபேசிகளின் வளர்ச்சியின் தற்போதைய நிலை ஒட்டுமொத்த கணினியின் செயற்பாடுகளையும் தன்னுள் உட்பொதித்து கொண்ட Smart phone எனும் நிலை என்பது நாமறிந்ததே. இதனால் இன்று கைபேசிகளும் தங்களுக்கென்று உரிய மென்பொருள்கள் (Applications), தரவு சேமிப்பகம் (Data Storage) என பல புதிய கட்டமைப்புக்களுடன் வலம் வர கணினிகளைப் போன்றே அவற்றுக்கும் நச்சுநிரல் (virus) பீதி தொற்றியிருக்கிறது. இன்றளவில் பல பெறுமதியான இவ்வாறான வகை கைபேசிகளை பயன்படுத்துவோரும் இவ்வாறான அச்சநிலை தொடர்பில் கரிசனம் கொள்கிறார்களா என்பது சந்தேகமே. எனவே பெறுமதியான உங்களின் கைத்தொலைபேசிகளிலுள்ள உங்களின் தரவுகளையும், உங்களின் கைத்தொலைபேசிகளின் செயல்திறனையும் பாதுகாக்க பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் கணினிகளுக்கான பதிப்புக்கள் (Versions) போலவே Android மற்றும் iOS வகை கைபேசிகளுக்கான பதிப்புக்களை (Versions) தருகின்றன. இவற்றில் சில முற்றிலும் இலவசமானவை, சில பகுதி இலவசமானவை, மற்றும் சில முழுதாக பணம் செலுத்தி பயன்படுத்த வேண்டியவை. உங்களின் கைபேசியின் Android பதிபை பொறுத்து பொருத்தமானதை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்...

# Avast

Android இயங்குதளங்களை பொறுத்த வரையில் அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் அதிக நம்பிக்கையை தருகின்ற மென்பொருளாகும். இதனுடைய கணினிகளுக்கான பதிப்பை போன்றே கையடக்க தொலைபேசிக்கான இதனது பதிப்பும் உங்களின் கைபேசிக்கு தீங்கு தரும் மென்பொருட்கள், விளையாட்டுக்கள் மற்றும் Malware போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமன்றி Anti theft தொழிற்பாடு மூலம் இது உங்கள் தொலைபேசியின் System tray இல் இருந்து உங்கள் கையடக்க தொலைபேசியை 24மணி நேரமும் கண்காணிக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு இம் மென்பொருளை Avast தனது பயனர்களுக்காக முற்றிலும் இலவசமாகவே தருகிறது.




# Kaspersky Mobile Security

Kaspersky என்பது பல கணினி பாவனையாளர்களின் விருப்பத்துக்குரிய சொல், காரணம் கணினியின் தரவுப் பாதுகாப்பில் பல பலமான வசதிகளை தருவது இம் மென்பொருள்தான். அதே போலவே Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கும் தனது மென்பொருள்கள் மூலம் அதிஉயர் பாதுகாப்பை தருகிறது. பாவனையாளர்களின் இலகுக்காக Lite Version மற்றும் Paid Version என இருவகையான மென்பொருள் பதிப்புக்களை தருகிறது. Lite version ஆனது உங்களின் கைபேசிகளுக்கு நச்சுநிரல் (Virus) பாதுகாப்பு, Anti theft, மற்றும் உங்கள் தொலைபேசியின் Call managerஇற்கான பாதுகாப்பை தருவதோடு உங்கள் தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் (Instant messages) தொடர்பில் வடிகட்டும் சேவையையும் தருகிறது. இவற்றைவிட Paid Version சில மேலதிக நன்மைகளையும் தருகின்றன.

* தரவிறக்க Lite version
                         Paidversion  


# Norton Mobile Security

வெகு நாட்களாகவே கணினிகளின் வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் பெயர் பெற்ற ஒரு மென்பொருள் என்று சொல்லலாம். அதே போன்று தனது பாதுகாப்பினை உங்களின் Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கும் தனது பாதுகாப்பு வசதிகளை தருகிறது. வைரஸ் பாதுகாப்பு மற்றும் குறுஞ்செய்தி மூலம் பரவும் வைரஸ்கள் தொடர்பிலும் இது பாதுகாப்பை தருவதுடன் உங்களின் தொலைபேசியை முழுதாக கண்காணிக்கிறது.    


# NQ Mobile Security & Antivirus

கணினிகளை பொறுத்தமட்டில் புதிய பெயராயிருந்தாலும் கைத்தொலைபேசிகளை பொறுத்தவரையிலும் அதன் பாவனையாளர்களைப் பொறுத்த வரையிலும் மிகப் பிரபல்யமான பெயராகும். காரணம் Smart phoneகள் அறிமுகமாகுவதற்கு முன்பே Symbian வகை கைத்தொலைபேசிகளுக்கான பாதுகாப்பு மென்பொருள்கள் மூலம் தனது பெயரை பதித்து கொண்ட இம் மென்பொருள் தற்போது Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கும் தனது பாதுகாப்பு வசதிகளை தருகிறது. பல புதுமையான வசதிகளுடன் இலவமாக இம் மென்பொருளை நிறுவ முடியும்.

# Dr Web Antivirus

Android இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கென புதிதாக அறிமுகமாயிருந்தாலும் தனது பல புதிய வசதிகள் காரணமாக பல பாவனையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கின்ற புதிய மென்பொருள். வழமையாக ஏனைய மென்பொருள்கள் போன்றே இதுவும் தனது பயனர்களுக்கு பல வசதிகளைத் தருகின்றது. இதனுடைய செயற்பாடுகளையும், பாவனையாளர்கள் இதனுடைய செயல்பாடுகள் பற்றி Google Play இல் பதிந்திருக்கின்ற கருத்துக்கள் மற்றும் இதனுடைய Review மூலமுமாக பதிய மென்பொருள் என்றாலும் ஏனைய பல பிரபல்யமான மென்பொருள்களுக்கு நிகராக இயங்க கூடியது என நம்பலாம்.

* தரவிறக்க  Paid version    
                          LiteVersion  

# Lookout Security & Antivirus

Google Play இல் உள்ள மற்றுமொரு சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருள் இது என்று சொல்லலாம். காரணம் இது முற்றிலும் Android வகை இயங்குதளங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டதாகும். சாதாரண வைரஸ் பாதுகாப்புடன் சேர்த்து கூடுதல் வசதியாக உங்கள் தொலைபேசிக்கு Backup வசதியையும் தருவதுடன் உங்கள் தொலைபேசி தொலைகின்ற போது மீட்டுக் கொள்ளக்கூடிய Phone finder வசதியையும் தருகிறது.    


நான் மேற்சொன்ன இந்த மென்பொருட்கள் தவிர இன்னும் பல வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் Google Play இல் கிடைத்தாலும் சிறந்த 6 மென்பொருட்களை தொகுத்து தந்திருக்கினறேன். இவை தவிர இன்னும் பல வைரஸ் தடுப்பு மென்பொருட்களை Google Play இல் தேடி பெற்றுக் கொள்ளுங்கள். இதனூடாக உங்களின் கைடக்க தொலைபேசியின் தரவுப் பாதுகாப்பையும் செயற்திறனையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இம் மென்பொருட்கள் தொடர்பிலான உங்களின் கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள்.. 

         ✤ அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்  

Share With your friends