24 நவம்பர், 2013

கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி01)



வருடத்தின் இறுதிப்பகுதிக்குள் மெதுவாக நுழைகின்ற தருணத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமான, சிக்கலான, பெரிய பதிவொன்றில் சந்திப்பது மகிழ்சி. எங்கள் மொழியில் இதுவரை இப்படி முயற்சி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனாலும் வழக்கம் போல புதுமை, வித்தியாசம் என்ற எனது வலைப்பதிவின் கொள்கைகளுக்காக இந்த பதிவு.. ஆர்வமுள்ளவர்கள் முயற்சியுங்கள் ஏனையவர்களுக்கு நிச்சயம் உங்கள் கணினி தொழில்நுட்பம் சம்பந்தமான ஏதேனும் பிற முயற்சிகளுக்கு பயன்படும் என்ற நம்பிக்கை. நீண்டகாலமாக தமிழ் மொழி சார்ந்து இடைமட்ட கணினி நுட்பவியலாளர்களிடம் இருக்கின்ற பெரிய சந்தேகம் இது. பலர் இதை செய்துமிருக்கலாம், சிலர் முழுமையாக அறிந்திருக்க மாட்டீர்கள் இன்னும் சிலரோ அறிய ஆர்வமாயிருப்பீர்கள்.. மூன்றாவது வகையினராக நீங்கள் இருந்தால் இங்கு உங்கள் நேரம் செலவழிவதில் தப்பில்லை.

இந்தப் பதிவின் உள்ளடக்கங்களாக அமைபவை...

* Wi-Fi சுருக்க அறிமுகம்
* கம்பியில்லா வலையமைப்புக்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
* தேவையான பொருட்கள்
* கடவுச்சொல்லை துருவுவதற்க்கான மென்பொருள்களை நிறுவுதல்
* துருவுவதற்கான இலக்கை தெரிவு செய்தல்
* கொஞ்சம் பொறுத்திருங்கள் 
* கடவுச்சொல்லை துருவுதல் (Hack the password)
* இறுதியில் எந்த Wi-Fi வலையமைப்பை தகர்ப்பதும் சாத்தியமே..!

Wi-Fi சுருக்க அறிமுகம்
-------------------------------------



குறிப்பிட்ட பௌதீக தளத்தில் உள்ள கணினியை அதே இடத்திலோ அல்லது வேறொரு இடத்திலோ உள்ள கணினியொன்றுடன் தர்க்கரீதியாக (Logically connect) இணைத்தல் கணினி வலையமைப்பு எனப்படுகிறது. இது பிரதானமாக கம்பி மூல (Wired) மற்றும் கம்பிகளற்ற (Wireless) வலையமைப்பு என பிரதானமாக இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. இரண்டாம் வகையே இங்கு நமக்கு தேவையானது. அதாவது டிஜிட்டல் சமிக்கைகளாக தரவுகள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளுக்கிடையில் பகிரப்படல் Wireless எனப்படுகிறது. நாங்கள் எவ்வாறு தரவுகள் மட்டுமன்றி இணைய இணைப்பையும் வடங்களுடாக Wired Network இல் பகிர்கிறோமோ அது போல Wireless இலும் செய்ய முடியும். அதாவது இணைய இணைப்பு உள்ள ஒரு சேவையக (Server) கணினி ஏனைய Client கணினிகளுக்கு அதனை வடங்களில்லாமல் டிஜிட்டல் சமிஞ்ஞைகளாக பகிரலாகும். இவ்வாறு பொதுவில் இணையம் பகிரப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த டிஜிட்டல் சமிஞ்ஞைகளை உள்வாங்க கூடிய தகைமை கொண்ட எந்த கணினியும் அந்த வலையமைப்பில் இணையமுடியும் என்பதால்  அது குறித்த ஒரு கடவுச்சொல் கொண்டு சங்கேதமாக்கப்பட்டு (Encrypt) பகிரப்படுகிறது. அந்த கடவுச்சொல்லை அறிந்தவர்கள் மட்டுமே அந்த சமிஞ்ஞைகளை Decryption செய்து பயன்படுத்த முடியும். ஆனால்  தொழில்நுட்பம் மூலமாக அந்த சமிஞ்ஞைகளை இடைமறித்து அந்த Passprase எனப்படுகின்ற கடவுச்சொல்லை தரிந்து கொள்கின்ற மிகச்சாதுரியமான அதே நேரம் மிகச்சிக்கலான செயற்பாடே Aircraking எனும் விஷேட பதம் கொண்டு அழைக்கப்படுகிறது. வெறுமனே Wi-Fi Signalகள் மட்டுமல்லாமல் ராணுவ உளவு நடவடிக்கைகள், Airship hijack போன்ற வேலைகளும் இப்படித்தான் நடந்தேறுகிறன.

கம்பியில்லா வலையமைப்புக்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
-------------------------------------------------------------------------------------------------------



மேலே அறிமுகத்தில் நான் Wi-Fi வலையமைப்புக்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று சொன்னேன். அவை அவ்வாறு பாதுகாக்கப்படுகின்ற வழிமுறைகள் இவ்வாறான Hacking தொல்லைகளால் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக பாதுகாப்பு கூடியவையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவை இரண்டு

1. WEP (Wired Equivalent Privacy)
முதன்முதலில் Wi-Fi வலையமைப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறை. ஆனால் பாதுகாப்பு மிகிமிக குறைவானது.எளிதில் தகர்க்ககூடிய வலையமைப்பு. நீங்கள் Wi-Fi Network இனை கொண்டிருந்தால் தயவுசெய்து இந்த முறையை தெரிவு செய்யாதீர்கள்.

2. WPA (Wi-Fi Protected Access)
முதலிலுள்ள பாதுகாப்பு முறைகளின் குறைகளை நீக்கி பின் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறை இது. துருவுவதற்கு மிகக்கடினமானதென ஆரம்பத்தில் கருதப்பட்டது. Aircracking இல் சாத்தியமாகவில்லை. ஆனால் Common phaseprase மூலம் இந்தவகை வலையமைப்பின் கடவுச்சொல் இலகுவாக இருந்தால் தகர்க்கலாம். எனவே உங்கள் Wi-Fi இற்க்கான கடவுச்சொல்லை அமைப்பதில் கவனம் கொள்ளுங்கள். இலகுவில் ஊகிக்க முடியாதவாறு அதிக Characters கொண்டு அமைத்தால் நல்லது.

ஒரு கம்பியில்லா இணைய வலையமைப்பை துருவுவதற்கான அடிப்படை அறிவை இப்போது பெற்றிருப்பீர்கள். இரண்டாவது பகுதியில் அடுத்த படிமுறைகளை பார்ப்போம். தொடர்ந்தும் வாசியுங்கள்...
கருத்துக்களை பின்னுாட்டங்களில் எழுதுங்கள். நண்பர்களோடும் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

Share With your friends