30 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன் (PART-03)


பேச்சு அறிக்கை (Speech recogonition) கொண்ட ரோபோக்களின் உருவாக்கம் மனித இயல்புள்ள ரோபோ உருவாக்கத்தின் ஆரம்ப நிலையான கட்டமாகும்.மொழிகளை உச்சரிக்கும் தன்மை நபருக்கு நபர் வேறுபடுவது மிகவும் பரவலாக அவதானிக்கப்படும் ஒரு விடயமாகும்.குறித்த மொழியில் உள்ள குறித்த ஒரு சொல்லையே வெவ்வேறு நபர்கள் வித்தியாசமான முறையிலே உச்சரிக்கின்றனர்.1952இல் பேச்சு அறிக்கை கொண்ட நிலையான முதல் மனிதப்போலி ரோபோ உருவாக்கப்பட்டது.இன்றளவில் நிமிடத்திற்கு 200 சொற்களை 95% துல்லிய தன்மையுடன் வேறுபிரித்து அறியும் திறனுள்ள மனிதப்போலிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது
கவனிக்கவேண்டி விடயம்தான்..

முகபாவங்களை ஆற்றும் ரோபோக்களும் இந்நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது ஆச்சரியமானதே! Kismet எனப்படும் ரோபோவானது பல முகபாவங்களை காட்டக்கூடிய திறன் கொண்டது.இதன் உருவப்படத்தையே கீழே காண்கிறீர்கள்..

இப்படியாக மனிதப்பண்புகளை செயற்கையாக கணினி செய்நிரல்கள் மூலம் தம்வசம் பெற்றுக்கொண்ட மனிதப்போலிகள் மனிதனுக்கு சவாலாக ஏன்?ஆபத்தாக கூட உருவெடுத்துள்ள பற்றியும் நாம் அறிந்து கொள்வது கட்டாயமானதே...மனிதப்போலிகளின் அதீத பெருக்கத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிப் பலநூல்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.பொதுவாக மனித இனத்தை அழிக்கும் வலிமையையும் மனப்பாங்கையும் மனிதனின் மூளையின் பலனால் பெற்றுக்கொண்ட நுண்ணறிவை கொண்ட மனிதப்போலிகள் பெற்றுக்கொள்வதையே சித்தரிக்கும் விதமாக இந்த நூல்களினதும் திரைப்படங்களினதும் கருப்பபொருள் அமைந்திருக்கும்.(நம்ம எந்திரனும்
இந்த வகைதான்)The Terminator,The Metrix,I Robot போன்ற திரைப்படங்கள் இந்த கூற்றை வலுப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.தொழிற்சாலையொன்றில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனிதப்போலி ரோபோவானது அதற்கு கணினி மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே மதன் அசைவுகள் காணப்படும்.இதன்போது அதற்கு குறுக்காக யார் சென்றாலும் அவர்களை கவனிக்காது அவர்களை தாக்கி தனது காரியத்தை கச்சிதமாக முடிக்கும்.இது மிகவும் அபாயகரமான நிலையாகும்.அனேகமான தொழிற்துறை ரோபோக்கள் பாதுகாப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றன.கணினியால் அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களில்
திடீர் மாற்றங்கள் அல்லது கோளாறுகள் என்பன ஏற்படும் நிலையில் ரோபோவொன்றின் செயற்பாடு பற்றி எதிர்வுகூறவே முடியாது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவே அமையலாம் என நம்பப்படுகிறது. 

ரோபோக்களையும் கணினிகளையும் பற்றி பேசும் போது செயற்கை அறிவின் வாயிலாக அவை என்னதான் ஆற்றல் பெற்றவையாக திகழ்ந்தாலும் மனித மூளையில் உறையும் அறிவிற்கு ஒப்பாக அவற்றை கருத முடியாது,எனவும் ஒப்பிடவும் கூடாது எனவும் அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.மனித மூளையின் வடிவமைப்பு,அதன் செயற்பாடு,அதிலுள்ள நுட்பம்,நுணுக்கம் இவை பற்றி இதுவரைகாலமும் அறிந்தவற்றை விட அறியாதவையே அதிகம்.மூளை அலைகள் ஏறத்தாள ஒரு மணியில் 6கிலோமீற்றர்/செக்கன் வேகத்தில் பயணம் செய்யக்கூடியவை என அண்மைக்கால ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன.இதனை கீழ்வரும் காணொளி தொகுப்பு விளக்குகிறது.


இந்த வீடியோ காட்சியில் நீங்கள் காண்பது உலகின் The Advanced Intellingent  என அழைக்கப்படுகின்ற ASIMO இன ரோபோவையே.இவ் ASIMO என்ற சொற்பதம் உங்களுக்கு ஒருவேளை புதிததாக இருக்கலாம்.அதாவது (எந்திரன் திரைப்படத்தில் Chittiயினுடைய A.I.R.D Approvalஇன் போது இது மனிதனை தாக்காத அசிமோ விதிகளுக்கு அமைய உருவாக்கபட்டதா என்று கேட்கப்படுவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்).அதாவது ஐசக் அசிமோ என்ற அறிஞர் ரோபோக்களுக்கான மூன்று விதிகளை வகுத்துள்ளார்.

  1.  ரோபோக்கள் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்க கூடாது.
  2. சட்டத்திற்கு புறம்பாக இல்லாமல் மனிதர்கள் விதிக்கின்ற எல்லா   ஆணைகளுக்கும் ரேபபோக்கள் கீழ்ப்படிய வேண்டும்.
  3. ரோபோக்கள் முதல் இரண்டு விதிகளுக்கும் முரண்படாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் 


இவையே அந்த மூன்று விதிகளுமாகும்.இந்த விதிகளை உருவாக்கவேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற வினா பலருக்கும் எழலாம்.உலகின் வல்லரசு நாடுகள் ரோபோக்களை யுத்த நடவடிக்கைகளுக்கு பழக்கி வருகின்றன.ஏவுகணைகளை ஏவவும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கவும் அணு உலைகளில் பணிகளில் ஈடுபடவும் ரோபோக்களே பயன்படுத்தப்படுகின்றன.இதனாலேயே இந்த விதிகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது.ஹிரோஷிமாவிலும்,நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டு அதனால் விளைந்த நாசத்தை பார்த்த பின்னரும் அதனைக் காட்டிலும் பன்மடங்கு கொடிய ஆயுதங்களையும் படைக்கலங்களையும் ஏவுகணைகளையும் 
வல்லரசு நாடுகள் தயாரித்த வண்ணமே உள்ளன.இப்பணிகளில் ரோபோக்களும் பயன்படுத்தப்படுகின்றன.மனித மூளையின் ஆற்றலைக் கொண்ட அல்லது ஆற்றலை மீறிய ரோபோக்கள் இயங்கத்தொடங்கி விட்டால் அதன் இயக்கத்தை யாராலும் நிறுத்த முடியாது.மனித குலத்தின் மீது வைக்கப்பட்ட அணுகுண்டாக அது அமைந்து விடும்.அதன் பின்னர் ரோபோக்களின் நெடிய பயணம் நிறுத்த முடியாத நீண்ட பயணமாக தொடர்ந்து கொண்டே இருக்கும் என மைக்கல் கார்னால்ஸ் என்ற அறிஞர் அறிவு நிலைக்கான போட்டி (The race to the intelligent state) என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார்.நாம் வாழும் உலகில் உமது அன்றாட கடமைகளில் நாம் துரிதமான சுறுசுறுப்பை கொண்டிருத்தலின் 
அவசியத்தை இந்த மனிதப்போலிகளின் வியாபிப்பு வேண்டிநிற்கிறது.அனிதனாலேயே உருவாக்கப்பட்டு பின்னர் மனிதனுக்கே அது கேடாக அமைந்து போதல் பொருத்தமில்லாத செயல்தான்.இருந்தும் தனிமனிதர்களின் செயற்பாடுகளில் மனிதப்போலிகளின் அவசியம் தேவைப்படாத அளவு சுறுசுறுப்பும் வினைத்திறனும் காணப்படவேண்டியது காலத்தின் தேவையாக மாறிவிட்டது.மனிதப்போலிகளின் தேவையை மட்டுப்படுத்தக்கூடிய நிலையில் எமது செயல்கள் மற்றும் மனப்பாங்குகள் காணப்படும் போதே எமக்குச் சவாலாக உருவெடுத்துள்ள மனிதப்போலிகளை நாம் விஞ்ச முடியும்,வெல்ல முடியும்,வெல்வோமா.....???? வருங்காலம் உங்கள் கைகளில்...   




15 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன் PART-02


இன்றைய காலகட்டங்களில் மனிதப்போலிகள் என அழைக்கப்படும் Humanoidகளின் அபரிமிதமான வளர்ச்சி மனிதஇனத்தையே அச்சுறுத்துவதாக அமைந்து கொண்டிருக்கிறது..இந்த நிலையை தற்போது வெளிவந்த தலைவரின் எந்திரன் உட்பட பல ஆங்கில திரைபடங்களும் படம்பிடித்து காட்டியிருக்கினறன..எனினும் தற்காலங்களில் இது சாத்தியமான நிலைதான. வேலைத்தளங்களில் கருமங்களை ஆற்றுவதற்காக உபயோகப்படுத்தப்படும் மனிதப்போலிகளின் மூலம் வேலையின் பெறுபேற்றில் துல்லியம் வினைத்திறன் மிக்க பலன்,நீடித்த பயன்பாட்டுத் தன்மை,என்பன அதிகரித்துள்ளன.ரோபோக்களை விட 
மனிதர்களால் காரியங்களை செய்ய முடியுமானாலும் சோம்பல்,களைப்பு போன்ற தன்மைகள் மனிதர்களால் செய்யப்படும் காரியத்தின் வினைத்திறனை பாதிக்கும்.ஆனால் இது ரோபோ தொடர்பில் இல்லவே இல்லை.
கைத்தொழிற்துறையில் சம்பந்தப்பட்ட பல தொழிற்சாலைகளில் ரோபோக்கள் பல காரியங்களை செய்வதற்காக அதிகளவில் பாவிக்கப்பட்டு வருகின்றது.உலகளவில் மிகவேகமாக மனிதப்போலிகளின் வியாபிப்பு பரவி வருகிறது.சுமார் 800,000 ரோபோக்கள் உலகளவில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 42சதவீதம் ஜப்பானிலும் 40சதவீதம் ஐரோப்பாவிலும் மற்றும் 18சதவீதம் ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்றன.கார் தயாரிப்பு,பொதி செய்தல்,இலத்திரனியல் கூறுகள் பொருத்துகை என பல நிலைகளில் பயன்படுத்த ரோபோக்கள் இப்போது ஆடம்பரமாக சில செல்வந்தர்களின் வீடுகளிலும் பயன்னடுத்தப்படுவது
கண்கூடு,

இதே போல மனிதனால் செய்யச் சிரமமான பல காரியங்களை செய்யும் தகவுடைய ரோபோக்களும் பாவனையுள்ளன.இது இவ்வாறிருக்க இராணுவ நடவடிக்கைகளிலும் மிகவும் நுணுக்கமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இராணுவ ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன.ஜப்பான் போன்ற நாடுகளில் முதியோர்களை கவனிக்கும் பணியில் கூட ரோபோக்கள் ஈடுபடுகின்றமை ஒரு மென்மையான செய்திதான்...

ரோபோ கண்டுபிடிப்பு உருவாகி பல தசாப்தங்களுக்கு பின்னர் ரோபோக்களுக்கு மனித உணர்வுகளை வழங்கும் நடவடிக்கை மீதான ஆர்வம் விஞ்ஞானிகளிடம் வலுப்பெற்றது.இதனால் பல உயிர்பான மனித உணர்வுள்ள மனிதப்போலி உருப்படிகள் அடிக்கடி தோன்றத்தொடங்கின.தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிலையங்களில் கடமையாற்றும் மனிதப்போலி ரோபோக்களின் தொழிற்பாடு மனிதனோடு இடைத்தாக்கம் கொண்டதாக காணப்பட்டது.இதனால் மனிதனோடு இடைத்தொடர்பாடும் வலிமை கொண்ட நிலையில் மனிதப்போலிகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உருவானது.

மனிதப் போலிகளின் உருவாக்கமா???  பகுதி-03 இல் காத்திருங்கள்..


10 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன்



இன்றைய நாட்களில் உலகத்தமிழர்கள் அனைவர் வாயிலும் அடிபடும் ஒரு சொல் "எந்திரன்" என்றால் அது மிகையாது..அந்தளவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து சக்கைபோடு பொட்டுகொண்டிருக்கிறது எந்திரன்.இது சாதாரண திரைப்படம் என்பதையும் கடந்து அனைவரின் கவனத்தையும் இயந்திரமனிதனின் பக்கம் திருப்பியிருக்கிறது..இந்த காலத்தில் ரோபோக்களை பற்றி பலரும் அறியத் துடிக்கின்றனர்.அதிலும் முக்கியமாக Chitti போன்று உணர்வுகள் Program செய்யப்பட்ட ரோபோக்கள் இருக்கினறனவா.. என்ற சந்தேகமும். கூட...அப்படியெனில் ஷங்கர் படத்தில் காட்டியிருப்பது
என்ன நம்மை ஏமாற்றுகிறாரா..இந்த ஆய்வு இத்தனையும் தாண்டி எனது கவனமும் சற்று எந்திரனின் பக்கம்.."புதிய மனிதா பூமிக்கு வா" என்று நானும் ரோபோக்கள் பற்றிய விவரங்களை திரட்டி ஒரு தொகுப்பாக தருகிறேன்.அன்றிலிருந்து இன்றுவரை ரோபோக்களின் வளர்ச்சி ...சாதனைகள்,எதிர்காலத்தில் ரோபோக்களின் நிலை போன்றவற்றை தொகுத்து இடையிடையே படங்கள் (Images),காணொளிகள் (Video) போன்றவற்றுடன் தர விளைகிறேன்.முற்றிலும் புதிய விடயங்கள் என்பதால் உங்களுக்கு இலகுவாக விளங்க இடையிடையே எந்திரன் திரைப்படத்தின் காட்சிகளையும் உதாரணமாக கூறுகிறேன்..எனினும் இக் கட்டுரை 3 பகுதிகளாகவே
வெளிவர உள்ளது வாசித்து பயனடையுங்கள்...




"மழை பெய்கிறது,..தரையில் கால் வழுக்கிவிடும் என சாட்டுபோக்கு ஏதும் சொல்லாமல் சொல்லும் அத்தனை வேலைகளையும் வேகமாக விரைவாக ஆசையுடன் செய்யும் மனிதப்போலிகளை உருவாக்குவதில் ஜப்பான் வெற்றிகண்டுள்ளது."இது 2007ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு செய்தியில் இருந்து கத்தரிக்கப்பட்ட பகுதி.160 சென்டிமீற்றர்கள் உயரமுடைய HRP-3 Promet MK-II என்ற இயந்திர மனிதனை Kawada தொழில் நிலையம் உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் மனிதனைப் போன்றே கருமங்களாற்றும் இந்த மனிதப்போலிகளின் வளர்ச்சி பற்றி நாம் அறிந்து கொள்ளல் அவசியமானதே!
Humanoid என்ற சொல்லை நீங்கள் அறிந்திருக்ககூடும்(அண்மையில் எந்திரன் திரைப்படத்தில் கூட இந்த சொல் பாவிக்கப்பட்டிருந்தது.)இதன் பொருத்தமான தமிழ் வடிவம் மனிதப்போலி என்பதாகும்.அதாவது மனிதனைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளவை இந்த வகைக்குள் அடங்கும்(இலகுவாக சொல்வதாயின் Chitti போன்ற ரோபோக்கள்) சாதாரணமாக விஞ்ஞான புனைக்கதைகள் அவற்றை தழுவி தயாரிக்கபடுகின்ற திரைப்படங்கள் போன்றவற்றில் மனிதப்போலிகளின்(Humanoid) வித்தியாசம் நிறைந்த ஆச்சரியப் படைப்புகளை சந்திக்கமுடியும். எடுத்துக்காட்டாக StarTrek: The next Generation இன் The Chase எனும் அங்கத்தை குறிப்பிடலாம். மனிதப் போலிகளின் அடிப்படையிலிருந்தே Robot எனும் ரோபோக்களும் எமது கவனத்திற்கு புலப்பட தொடங்கின..  

மனிதஉருவில் காணப்படும் மனிதப்போலிகளின் சலனம்,அசைவு,செயற்பாடு என்பன கணினியின் ஆளுகைக்குட்படுத்தப்படும் நிலையில் அது ரோபோ என வழங்கப்படுகிறது என பொதுவாக சொல்லலாம்.ரோபோக்களுக்கு ஒருவரும் ஒவ்வொரு வரைவிலக்கணம் சொல்கின்றனர்.பொதுமைப்பாடான வரைவிலக்கணம் ஏதும் இருப்பதாக தகவலில்லை.இருந்த போதும் சர்வதேச நியமக்குறியீடு ISO-8373 இன்படி தன்னியக்கமாக கட்டுப்படுத்தப்படும் மீள் செய்நிரலாக்கத்திற்கு உட்படக்கூடிய பல்நோக்குடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுக்களில் தொழிற்படும் தகவுள்ள,நிலையான இடத்தில் 
அல்லது நடமாடும் தகவுள்ள தொழில்துறை வடிவங்களே ரோபோ என வறையறுக்கப்படுகிறது.(அப்பாடா! என்ன பெரிய வரைவிலக்கணம் ...இதை ஒருவர் கேட்டால் எப்படிய்யா சொல்வது என நீங்கள் கேட்பது புரிகிறது...) தொழில்துறை ரோபோக்களின் முண்ணனி ஆளுமையான Joseph Engelberger,"ரோபோவை என்னால் வரைவிலக்கணபடுத்த முடியாது.ஆனால் ஒன்றைப்பார்த்தவுடன் அது ரொபோதானா.. என தீர்மானிக்க முடியும்" என ரோபோவைப் பற்றி குறிப்பிடுகிறார்.இதேவேளை "கணினியால் கட்டுப்படுத்தப்பட்டு காரியங்களை தன்னியக்கமாகச் செய்யக்கூடிய வகையில் காணப்படும் இயந்திரம்
" என ரோபோ என்பதற்கு The Cambridge Advanced Learner's Dictionary கருத்துச் சொல்கிறது.

இந்த எல்லா வரைவிலக்கணங்களிலிருந்தும் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.அதாவது மனிதனின் செயற்பாடுகளை கணினி மூலம் செய்நிரலாக்கம் செய்த நிலையில் ஆற்றக்கூடிய இயந்திரம் ரோபோ எனலாம்.

இனி சற்று ரோபோ பற்றிய வரலாற்று ஏடுகளை புரட்டுவோமானால் செயற்கை மனிதர்கள் அதாவது மனிதப்போலிகளின்(Humanoid) வரலாறு மிகவும் பழமையானதாக காணப்படுகிறது.ஆனாலும் 1206ஆம் ஆண்டு அரேபிய கண்டுபிடிப்பாளர் அல் ஜஸாரி (Al Jasary) என்பவர் உலகின் முதலாவது செய்நிரலாக்கம் மூலம் இயங்கும் மனிதப்போலி ரோபோவை உருவாக்கியதாக சான்றுகளுள்ளன.இதேவேளை 1495 இல் மனிதப்போலி ரோபோவின் வடிவமைப்பொன்று "மோனாலீசா" ஓவியத்தை வரைந்த ஆய்வாளர் லியோனாடா டாவின்சி அவர்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்டுள்ளதுஇவ்வாறாக பரிணாமம் 
பெற்ற மனிதப்போலிகளின் உருவாக்கத்தின் போக்கு இன்றளவில் மனிதனுக்கே சவாலாக உருவெடுத்துள்ள தன்மை வெகுவாக உணரப்பட்டுள்ளது.......
மனித குலத்திற்கு சவாலான நிலையா அது என்ன???                                

பகுதி-02 இல் காணுங்கள்..
.




2 நவம்பர், 2010

புதிய அறிமுகம்

முதலாவது கணினி செய்நிரலாளர்

பேணூயின் எண்களை அக்காலத்தில் உருவாக்கப்பட்ட கணித்தல் பொறியினால் கணிப்பது தொடர்பாக விளக்கினார்.இதனால் இவரின் இந்த விளக்கம் தொடர்பான ஆவணமே உலகின் முதலாவது கனிணி செய்நிரல்(Computer programe) எனக் கணிக்கப்படுகிறது.இதனடிப்படையில் உலகின் முதலாவது கணினி செய்நிரலாளர் (Computer programer) ஆக Ada lovelace எனும் பெண்மணியே கணிக்கப்படுகிறார்.

பணிச்செயல் முறை உருவான கதை


கணினி மென்பொருள் கூறுகளால் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அதில் பணிகளை செய்து முடிப்பதற்கு செய்நிரல்கள் (Programs) அவசியப்பட்டன.இதன்போது தலைமுறைக்கு தலைமுறை பல கணினி மொழிகள் உபயோகிக்கபட்டன.இருந்த போதிலும் இவ்வாறு கணினி மொழிகளால் அறிவுறுத்தப்படும் நிலைகளின் போது கணினியில் பொதுவானதொரு தளமேடை காணப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.இதன் போதே கணினி இயக்கமுறைமைகள் (Operating Systems) உருவாக்கப்பட்டன.ஆரம்பகாலத்தில் DOS எனப்படும் Disk operating system மாத்திரமே
Operating systemஆக பாவிக்கப்பட்டது.பின்னாளில் கணினிகளின் சாரளத்தை (Windows) தமது கைகளில் பெற்றுக் கொண்ட Microsoft நிறுவனம் காலத்துக்கு காலம் நவீன உத்திகளை கொண்ட புதிய Operating systemகளை வெளியிடுவதில் இன்றுவரை ஊக்கமாக செயல்பட்டுவருகிறது.Microsoft மூலம் வெளியிடப்பட்ட OSகளாக Windows3.X,Windows95,Windows NT Workstation,Windows98,Windows2000Professional,Windows Me,Windows XP Home Edition,Windows XP Professional Edition,Windows Vista மற்றும் Windows 7 (வரும் ஆண்டு Windows 8) போன்றவற்றை
குறித்து காட்டலாம்.Apple கணினிகளுக்கு வேறாக MAc OSX எனும் முறைமையும் வெளிவந்தது.ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் Open Source பக்கம் அதிக கவனத்தை செலுத்தியிருப்பதனால் Linux வகையில் அமைந்த OSகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Share With your friends