சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி இரசிக்கும் நிகழ்ச்சியாக கார்ட்டூன் தொடர்கள் காணப்படுவதை நாமறிவோம்.இந்த கார்ட்டூன் நிகழ்ச்சிகளை உருவாக்க பல்வேறு மென்பொருள்கள் மற்றும் உயர்தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற காலம்
மாறிவிட்டது.இப்போது நாமெல்லோரும் கார்ட்டுன் தொடர்களென்ன கணினிவிளையாட்டுக்களையே மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் உருவாக்கிவிடலாம்.
எந்தக் கணினி மொழிபற்றிய அறிவுமில்லாமலே உயர்தரத்திலான அசையும் வீடியோ மற்றும் ஒலித்தோற்றங்களை கொணட கார்ட்டூன் தொடர்களை இலகுவாக அமைக்க உதவும் மென்பொருளே Scratch எனப்படுவதாகும்.அமெரிக்காவின் MIT நிறுவனத்தின் மீடியாலேப் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இம்
மென்பொருள் மூலம் எமக்குத் தேவையான கார்ட்டூன் தொடர்களை இன்டராக்டிவ் நிலையில் அமைத்துக்கொள்ள முடியும்.Scratch மென்பொருளை கணினியில் நிறுவ அதனுடன் பல மாதிரி கார்ட்டூன் அமைப்புக்களும் நிறுவப்படும்.அக் கார்ட்டூன் படங்களை Customize செய்ய முடிவதோடு
நாம் விரும்பினால் புதிதாக கார்ட்டூன் படங்களையும் உருவாக்க முடியும்.நாமுருவாக்கும் கார்ட்டூன்களுக்கு ஒலிகளையும் இணைக்கமுடிவதோடு கார்ட்டூன் அமையவேண்டிய பின்னணி நிலைகளையும் எம்மால் மாற்ற முடியும்.எமக்கு விரும்பியவாறு ஒரு திரைக்கதைக்கேற்ப பாத்திரங்களை கையாண்டு
கார்ட்டூன் திரைப்படமொன்றையே தொகுத்து வெளியிடும் வாய்ப்பை இந்த மென்பொருள் வழங்குகின்றது.சிறுவர்கள் பலரும் இந்த மென்பொருளை பயன்படுத்தி பல வித்தியாசமான ஆக்கங்களை உருவாக்கி Scratch இணையத்தளத்தின் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த மென்பொருளை http://scratch.mit.edu/pages/download எனும் இணைய முகவரியிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அழகிய கோலங்களில் உங்கள் எண்ணக்கோலங்களை வடித்திட Scratch உள்ளது.இன்றே நீங்களும் உங்கள் உள்ளத்து கற்பனைகளுக்கு வடிவம்
கொடுங்கள்
தொகுப்பு
A.Shanojan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக