நம்மில் பலபேருக்கு கூகிள் இணையத்தளம் பறறி கேட்டால் இன்டர்நெட்டில் தேடுவதற்கான தேடுபொறி என்று உடனடியாக சொல்லி விடுவார்கள்.அந்த அளவுக்கு அது தேடலுக்கு
பிரபலமானது.ஆயினும் கூகிள் தளத்தின் சேவைகள் தேடுபொறிச் செயற்பாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை.ஆனால் அதன் ஏனைய சேவைகள் பற்றிக் கேள்விப்பட்டவர்களும்
அதனைப் பயன்படுத்துபவர்களும் குறைவே.கூகிளை உபயோகித்து பல விடயங்களையும் தேடிய நாம் இப்போது கொஞ்சம் கூகிளின் உள்ளே தேடிப் பெற்றவைகளில் சிலவற்றை
பார்ப்போமா?
1.மேம்படுத்திய தேடு பொறி http://labs.google.com/accessible/
இது சாதாரண தேடுபொறியில் இருந்து வேறுபட்டது.சாதாரணமாக google.com இல் தேடும்போது தற்போது பயன்பாட்டில் இல்லாமல் நின்றுபோன இணையத்தளங்கள்
மற்றும் உபயோகத்தில் இல்லாத தளங்கள் எல்லாவற்றையும் பட்டியலிடும்.ஆனால்,இந்த மேம்படுத்திய தேடுபொறியோ பயன்பாட்டில் இருக்கின்ற அதாவது உயிருள்ள
இணையத்தளங்கள் மற்றும் கோப்புக்களை மாத்திரமே பட்டியலிடுகிறது.இது எமக்கு மேலும் பயனுள்ளதுதானே...
2.விளம்பர சேவை (Adsense)
http://google.com/adsense
இது முற்றுமுழுதாக இணையத்தளங்களை நடாத்துபவர்களுக்குரியது.அவர்களுடைய தளப்பராதரிப்பு செலவில் ஓரளவையேனும் இதனுாடாக ஈடுசெய்யலாம்.இது வெவ்வேறு
நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்ற விளம்பரங்களை கூகிளினூடாக உங்கள் இணையத்தளங்களில் பிரசுரிக்கும் வகையிலானது.குறித்த நிறுவனத்திடமிருந்து குறித்த விளம்ப
ரத்திற்காக கூகிள் நிறுவனம் பெறுகின்ற பணத்தில் ஒரு தொகையினை கூகிள் உங்களுக்கு காசோலை மூலமாக அனுப்பி வைக்கும்.இங்கு சென்று உங்களுக்குரிய கணக்கினை
ஆரம்பித்தால் ஸ்கிரிப்ட் கோடிங் கிடைக்கும்.அதனை உங்கள் தளத்தின் பக்கங்களில் சேர்த்து வடிவமைத்தால் சரி உங்கள் தளத்துக்கு வருகை தருகிறவர்கள் கூகிளின் விளம்பரங்
களை பார்க்ககூடியதாக இருக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பல்வெறு வடிவங்களில் விளம்பரங்கள் தெரியக்கூடியவாறு ஸ்கிறிப்ட் கோடிங்களை கூகிள் தருகிறது.
3.விளம்பர சேவை (Ad words)
http:/google.com/adwords
இதுவும் விளம்பர சேவைதான்.ஆனால் இது உங்களை கூகிளில் விளம்பரப்படுத்துவதற்க்கானது.வெவ்வேறு இணையத்தளங்களில் உங்கள் விளம்பரம் இடம் பெறுவதுடன்
அந்த விளம்பரம் கிளிக் செய்யப்படுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் ஒவ் வொரு கிளிக்கிற்கும் உங்களிடம் கட்டணம் அறவிடப்படும்.
4.தளப்புள்ளி விபரம்
http:/google.com/analytics
இது இணையத்தளங்களை நடாத்துபவர்களுக்கானது.இலவசமானதும் கூட.இதன் மூலம் உங்கள் இணையத்தளத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள்?..எங்கிருந்து எப்போது வந்தார்கள்?
எவற்றைப் பார்த்தார்கள்??எவ்வளவு நேரம் தளத்தில் செலவழித்தார்கள்?என்றெல்லாம் விலாவரியான அறிக்கையினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.இந்தச் சேவை
கூகிளினால் 2005ம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஒரு தடவை முயன்றுதான் பாருங்களேன்.
5.சந்தேகம் தீர்த்தல்
http:/answers.google.com/
இங்கே கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதிவு செய்யப்பட்ட வல்லுனர்கள் பதிலளிப்பார்கள்.அவர்களுடைய பதிலுக்காக பணம் செலுத்துவதற்க்கு கூகிள் அனுமதிக்கும்.
6.சேமிப்பகம்
http:/base.google.com
இங்கே பயனர்கள் தங்கள் கோப்புக்கள் பக்கங்களை கூகிள் சேவர்களிலும் தரவுத்தளங்களிலும் பிறர் தெடிப் பெற்றுக் கொள்ள வழி செய்யலாம்.
7.வலைப்பூ தேடி
http:/blogsearch.google.com/
குறிப்பாக இணையத்தில் காணப்படுகின்ற ப்ளொக்ஸ் (Blogs) எனப்படும் வலைப்பூக்களை தேடுவதற்கான பிரத்தியேகமான பகுதியாகும்.பிறமொழி வலைப்பூக்களையும்
இங்கே தேடலாம்.
8.புத்தகக் குறி
http:/google.com/bookmarks
பயனர்கள் தமது இரசனைக்குட்பட்ட தேவையான தளங்களின் முகவரிகளை Online இலேயே சேமித்துக் குறித்து வைப்பதற்க்கான பகுதி இதுவாகும்.
Concept By
A.Shanojan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக