22 அக்டோபர், 2013

தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 02)



எனது வலைப்பதிவின் ஒக்டோபர் மாதத்திற்கான மற்றொரு பதிவு மூலமாக உங்களை சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. மேலும் IT CORNER வலைப்பதிவுக்கான பிரத்தியேக பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே உங்கள் பலரின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இங்கே நீங்கள் காண்கிறவற்றை தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப தகவல்கள், இலவச மென்பொருள் தரவிறக்கங்கள் இவற்றோடு தொழில்நுட்பம் சம்பந்தமான சந்தேகங்கள் தீர்வுகள் என பலதரப்பட்ட விடயங்களோடு அந்தப்பக்கம் புதுப்பிக்கப்படுகிறது. உங்கள் தொழில்நுட்பம் சம்பந்தமான சந்தேகங்களை IT CORNER பக்கத்தின் Wall இல் அல்லது Private Message ஆக அனுப்பி வைக்கலாம். பொருத்தமான சரியான தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம்

சென்ற வாரம் உங்களோடு தொடரறா (Online) தரவு சேமிப்பு பற்றிய அடிப்படைகளை பகிர்ந்திருந்தேன். அந்த விபரங்களின் அடிப்படையில் இந்த வசதியை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்வது தொடரறா (Online) தரவு சேமிப்பு சேவையை வழங்குகின்ற மிகப்பிரபலமான 5 நிறுவனங்களையும் இந்தப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

1.        1. Drop Box


இணையத்தில் தொடரறா தரவு தேக்கத்திற்கு மிகப் பிரபலமான சேவை இதுதான். அதுமட்டுமன்றி இணையப்பரப்பில் இந்த நாகரீகத்தை தொடக்கி வைத்த பெருமையும் இவர்களையே சாரும். இலவசமாகவே உங்களுக்கான கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஆரம்பத்தில் 2GB கொள்ளளவு மட்டுமே வழங்கப்படும். மற்ற சேவை வழங்குனர்கள் இந்த அளவை அதிகரிக்க பணம் கேட்பார்கள் ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசம். உங்கள் பேஸ்புக், ட்விட்டர்  மற்றும் மின்னஞ்சல் மூலமாக இவர்களை நீங்கள் Share செய்தீர்களானால் அதற்கேற்றால் போல உங்கள் கொள்ளளவும் அதிகரிக்கும். முயற்ச்சித்து பாருங்கள்.


முகவரி: www.dropbox.com



2. Google Drive


நான் மேலே சொன்ன Drop Box இற்கு அடுத்தபடியாக மிகப்பிரபலமான சேவை. இணைய ஜாம்பவான் கூகிள் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை. தற்காலங்களில் மிகப்பிரபலமாக பேசப்படுகிறது. உங்களின் Gmail கணக்கு மூலமே உளநுழையலாம். ஆரம்ப கொள்ளளவு 5GB. கூகிளோடு இணைந்து செயல்படுவதால் அதன் ஏனைய சேவைகளோடும் இணைத்த பயன்படுத்தக்கூடிய வசதி. பாதுகாப்பானது.

முகவரி: drive.google.com



      

       3. Sky Drive
c     
      
இணையத்தில் காணப்படுகின்ற பிரபலமான தொடரறா தகவல் சேமிப்பு சேவைகளில் இதுவும் ஒன்று. மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனம் தருகின்ற சேவைகளுள் இதுவும் ஒன்று. நீங்கள் Hotmail கணக்கு பாவிப்பவராக இருந்தால் இந்த சேவையை பயன்படுத்த முடியும். தரவு சேமிப்பு அளவு 25GB முதல் ஆரம்பிக்கிறது. MS Office சார்ந்த ஆவணங்களை Online மூலாக பரிமாற உகந்தது.  
முகவரி: www.skydrive.com





4. Box Drive



இணையத்தில் பாரியளவான கோப்புக்களை பகிர்ந்து கொள்ள இணையத்தளங்களை நடாத்துபவர்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சேவை. இலவச கணக்குகளுக்கு 10GB வரையான இடமே வழங்கப்பட்டாலும் Premium கணக்குகளுக்கு 100GB வரை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. பாதுகாப்பு முன்னையவற்றை விட சற்று குறைவு.






5. Sugar Sync

இணையப்பரப்பில் உள்ள சேவைகளிலேயே மிகவும் அதிகமான கொள்ளளவை தருகின்ற சேவைகளுள் ஒன்று. நான் இதன் முந்தைய பதிவில் சொன்னது போன்று Data BackUp இற்கு மிகப்பொருத்தமான தளம். 60GB முதல் 1000+GB வரை சேமிக்கலாம். ஆனால் இலவச சேவை இல்லை. எந்தப் Package ஐயும் Trial ஆக 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம். 

                               முகவரி: https://www.sugarsync.com/


இணையப்பரப்பில் நாளாந்தம் பல புதிய புதிய தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்கள் உருவாகி கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும் அதிக பயனர்களைக் கொண்டதுமான 5 தளங்கள் இவை. பொருத்தமானதை பயன்படுத்துங்கள். கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள்.

19 அக்டோபர், 2013

IT CORNER வலைப்பதிவு இப்போது பேஸ்புக் மூலமாகவும்

அன்பார்ந்த வாசகர்களே…


தொழில்நுட்ப உலகின் அன்றாட நிகழ்வுகளையும், புதிய தொழில்நுட்ப குறிப்புக்களையும் இன்னும் இதர விடயங்களையும் தேடி எனது வலைப்பதிவினை வாசிக்கின்ற உங்களுக்கு இன்னும் வசதியாக IT CORNER வலைப்பதிவின் பிரத்தியேக பேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப துறை சார்ந்த சந்தேகங்கள்-விளக்கங்கள், தொழில்நுட்ப துறை சார்ந்த குறிப்புகள் என அனைத்தையும் தமிழில் உங்கள் பேஸ்புக்கின் முகப்பு பக்கத்திலேயே பெற கீழே உள்ள IT CORNER இன் பேஸ்புக் பக்கத்தை LIKE செய்யுங்கள். 





18 அக்டோபர், 2013

இணைய வெளி – இது நீங்கள் அறிந்திராத வினோதங்களின் தொகுப்பு (தொடர் பதிவு)


கொண்டாட்டங்கள், விடுமுறைகள், மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் எனது மற்றொரு தொழில்நுட்ப பதிவு மூலமாக உங்களோடு இணைவது மகிழ்ச்சி தருகிறது. மனித குலத்தின் நாகரீக வளர்ச்சியும் அதன் பயனாக விளைந்த கண்டுபிடிப்புகளும் தகவல் தொடர்பாடலில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சிகளும் வியப்புக்குரியன. அந்தவகையில் நாங்கள் இப்போது கணினி மற்றும் இணையம் என்ற இந்த இரண்டின் ஆளுகைக்குட்பட்ட யுகத்தில் இருப்பது நீங்களறிந்ததே. குறிப்பாக இணையம் எங்கள் கைகளுக்கு வந்த பிறகு இன்றைய தலைமுறையினரின் தொழில் தொடங்கி பொழுதுபோக்கு ஏன் சில சமயங்களில் திருமணம் வரை அதில்தான் நடந்தேறுகிறது

இவ்வாறு எல்லாமுமாக இருக்கின்ற இணையத்தில் உலா வருகின்ற உங்களுக்கு இதுவரை உங்கள் இணைய உலாவல் (Web Browsing) அனுபவத்தில் கிடைத்திருக்காத என்று நான் நம்புகின்ற சில இணையத்தின் பக்கங்களை அறிமுகப்படுத்துகின்ற சுவாரஸ்யமான பதிவுதான் இணையவெளி. அதாவது பலகோடிக்கணக்கான இணையப்பக்கங்களின் பின்னலில் உருவானதே இணையம். இதில் எல்லா பக்கங்களும் ஒரே மாதிரியாக ஒரே வகையாக அமைவதில்லை. இணையத்தில் சுவாரஸ்யம் தேடி உலவுகின்ற (Browsing) உங்களுக்கு அந்த இணையமே சுவாரஸ்யமானால்தொடர்ந்து படியுங்கள்.   

#1 உங்கள் சுட்டியை (Mouse) சுட்டும் படங்கள்

இணையப்பரப்பில் உலாவருகின்ற வினோத தளங்களில் உங்கள் கணினியின் சுட்டியோடு (Mouse) கொஞ்சம் விளையாடிப்பார்க்கின்ற இணையத்தளம் இது. இந்த இணையத்தளத்தை திறக்கின்ற போது உங்களுக்கு தெரிகின்ற கறுப்பான பகுதியில் Mouse Cursor இனை சில செக்கன்களுக்கு நிறுத்தி வைத்தீர்களானால் உங்கள் Mouse Cursor எந்தப்பகுதியில் உள்ளதோ அதை காட்டுகின்றது போல Random ஆக Image தோன்றுகிறது. முயற்ச்சித்து பாருங்கள்
முகவரி: http://www.pointerpointer.com/

#2 உங்கள் நண்பர் எத்தனை மணிநேரம் தூங்குகிறார்?

நீங்கள் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இதை முயற்ச்சித்து பாருங்கள். அதாவது உங்கள் ட்விட்டர் நண்பர் துங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறார் என்பதை கணக்கிட்டு சொல்லுகின்றது இந்த தளம். குறித்த நபரின் இறுதி 1000 பதிவுகளை கணிப்பிட்டு முடிவுகளை காட்சிப்படுத்துகிறது.
முகவரி: http://sleepingtime.org

#3 திகில் திரைப்பட இணையத்தளம்

Interactive Movie வகையை சேர்ந்த இணையத்தளம். அதாவது இங்கு சென்று Begin என்பதை கிளிக் செய்தீர்களானால் உங்களை ஒரு காணொளி பக்கத்திற்கு அழைத்து செல்லும். அந்த காணொளியானது திரைப்படம் போன்று ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த கதை எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக ஒரு கட்டத்தில் ஒருவன் கொலை செய்யப்படும் போது உங்களிடம் ஆம் இல்லை என்று கேட்கப்படுகிறது. உங்கள் பதில் ஆம் என்றால் குறித்த நபர் கொல்லப்பட்டு திரைக்கதை நகரும். இல்லையென்றால் கொல்லப்படாமல் கதை தொடர்ந்து செல்லும். ஆனால் கொடுரம் திகில் நிறைந்த காட்சிகளே அதிகம் என்பதால் அவதானம் கொள்க.

#4 ஸ்நெப் (Snap) குமிழிகள்




மேலுள்ள படத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள். நாங்கள் சாதாரணமாக உடையக்கூடிய பொருட்களை அனுப்புவதற்கு பயன்படுத்துகின்ற காற்று குமிழிகள் கொண்ட சுற்றுறையை உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்கள் சிறுவயதுகளில் இவ்வாறான குமிழிகளை உடைத்து விளையாடுவதில் அலாதி பிரியமுடையவராக இருந்திருந்தீர்களானால் அதே வேலையை கொஞ்சம் மொடர்னாக (Modern) உங்கள் கணினியில் செய்யக்கூடிய வாய்ப்பை இந்த தளம் தருகிறது. Bubble Wrap Simulator என்ற பெயரில் பொழுதுபோக்கு விளையாட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடிப் பாருங்கள்.
முகவரி: http://www.snapbubbles.com/

#5 முப்பரிமாண (3D) தோற்றத்தை உங்கள் சுட்டியோடு உருவாக்குங்கள்

ஊடாடு (Interactive) நிலையுடன் கூடிய முப்பரிமான வரைதலை (Drawing) சாத்தியமாக்குகின்ற இணையத்தளம்தான் இது. உங்களின் Mouse cursor இனை மட்டும் பயன்படுத்தி செய்யக்கூடியதாக இருப்பதுவே இதன் சிறப்பம்சம். முயற்சித்து பாருங்கள்.

என்னுடைய தேடல் அனுபவத்தில் கிடைத்த வினோத தளங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இது போன்ற இன்னும் பல தளங்களை வருகின்ற காலங்களில் பகிருகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

13 அக்டோபர், 2013

தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 01)



ஆரம்பிக்க முன்…

மீண்டும் பல நாட்கள் கழித்து எனது வலைப்பதிவின் ஒரு பதிவு மூலமாக உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி… கடந்த சில வாரங்களாக எனது இந்த தளத்தின் வாசகர்களின் வருகை அதிகரித்திருக்கிறது, எனது வலைப்பதிவின் பதிவுகளை வாசிக்கின்ற நண்பர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள்… முதலாவது தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக நீங்கள் இங்கு வந்து பதிவுகளை (Posts) வாசித்து பயன் பெறுகிறீர்கள் அதோடு நின்றுவிடாமல் உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களையும் மற்றும் இன்னும் நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களையும் குறிப்பிடுங்கள் மேலும் இது போன்று தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக இருக்கின்ற உங்கள் நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுபோலவே மிக முக்கியமானது எனது முன்னைய கால பதிவுகளில் தரவிறக்கத்திற்காகவோ அல்லது ஏதேனும் இணையத்தள முகவரிகளோ பதிவுகளில் வழங்கப்பட்டிருந்தால் சேவையக மாற்றங்கள் காரணமாக தற்காலங்களில் அவை செயல்படாமல் போகலாம்… அவ்வாறான இணைப்புக்களை மறக்காமல் பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்.. நன்றி.

******************************************************************************************************************************************************************

கணினி துறையை பொறுத்தவரை இணையத்தின் தோற்றம் மிக முக்கிய படிக்கல் என்றாலும் இணையத்தின் வேகத்தினை துரிதப்படுத்திய அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னரே இணையத்தின் முழுமையான பயன்பாடும் அவசியமும் உணரப்பட்டதெனலாம். அந்தவகையில் இணையம் மூலமாக என்னவெல்லாம் சாதிக்கின்றோம், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் எமக்கு நன்கு தெரிந்ததே… அந்த வரிசையில் நான் முன்சொன்ன அகல்கற்றை (Broadband) தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னர் அறிமுகமான வசதிகளில் ஒன்றுதான் தொடரறா தகவல் சேமிப்பு.

சாதாரணமாக தரவுகள் தகவல்கள் என்பவற்றை சேமிப்பது என்பது எமக்கு தெரியும். அது என்ன தொடரறா தகவல் சேமிப்பு? அதாவது உங்கள் தகவல்களை இணையம் மூலமாக எங்கிருந்தும் ஆளுகை செய்யக்கூடிய வகையில் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு சேவையகத்தில் சேமிப்பதும் தனிப்பயனாக்கப்பட்ட (Customized) வழி மூலமாக மீளப்பெறுவதும் உள்ளவற்றை புதுப்பித்தலுமே தொடரறா தகவல்  சேமிப்பு எனப்படுகிறது. இது Cloud Storage  என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை விளக்குகின்ற வரிப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.




தொடரறா தகவல் சேமிப்பு எவ்வாறு இயங்குகின்றது? அதன் செயன்முறைகள் என்னவென்பது பற்றியெல்லாம் அறிந்து கொண்டோம், இனி இந்த புதுநுட்பத்தை எவ்வாறு இணையத்தோடு இணைந்த எமது அன்றாட பணிகளில் பயன்படுத்துவது அதற்கான சேவை வழங்குனர்கள் பற்றி பார்க்கலாம். எமது தரவுகளை எமது கணினிகளின் வன்தட்டுக்களிலேயே (Hard Disk) எப்போதும் சேமித்திருப்போம். பாதுகாப்புக்காக கடவுச்சொற்கள் கூட அமைத்திருப்போம். வன்தட்டுக்களில் தரவுகளை சேமிப்பது சரிதான், அனால் அவை உங்கள் தரவுகளை 100%  சரியாக பேணுமா என்றால் நிச்சயமாக இல்லை. வன்தட்டுக்கள் பழுதடைதல், வைரஸ் தாக்கம், Data corrupt இப்படியாக பல காரணங்கள் சொல்லலாம். அதுபோலவே மிக முக்கியமான மற்றொன்று Data Backup. பலபேர் தங்கள் Backupகளை DVDகளிலோ அல்லது Hard Diskலேயே வைத்திருப்பார்கள். அவசர System Restore வேலைகளுக்கு இது கைகொடுத்தாலும் உண்மையில் இவ்வாறான Back Up ள் பாதுகாப்பற்றவைதான். அப்படியானால் இந்த வேலைகளை பாதுகாப்பாகவும் அதிக நாள் பேணக்கூடியவாறும் மேற்கொள்ள என்ன செய்யலாம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இங்குதான் நான் சொன்ன தொடரறா தகவல் சேமிப்பு உதவிக்கு வருகிறது. தொடரறா சேவையகங்கள் (Online Servers) என்பவை பாதுகாப்பானதும் தனிப்பயனாக்கம் செய்யக்கூடியவை மட்டுமன்றி இணையம் மூலமாக எங்கிருந்தும் அணுக கூடியவை. எனவே முக்கியமான தரவு சேமிப்புக்கள், Back Up போன்ற வேலைகளுக்கு இதனை பயன்படுத்தலாம்.

இந்த சேவையை இணையப்பரப்பில் பல நிறுவனங்கள் பலவிதமாக வழங்குகின்றன. அதில் நம்பகத்தன்மையானதும் பாதுகாப்பானவையுமாக சிறந்த 5 சேவைகளையும் அவற்றை பயன்படுத்துகின்ற வழிமுறைகளையும் தொகுத்து பகுதி02 இல் தருகிறேன். கருத்துக்களை மறக்காமல் எழுதுவதோடு உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள்….

12 அக்டோபர், 2013

மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சுலபமான 8 பராமரிப்பு வழிமுறைகள்



நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் கணினிகள் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது. ஆனாலும் இன்றைய நாட்களில் மேசைக்கணினிகளை (Desktop Computers) விட மடிக்கணினிகள் (Laptop) தருகின்ற அதிகமான வசதிகளாலும் பாவனைக்கு இலகுவாக அமைவதனாலும் இப்போது பெரும்பாலான வகை மடிக்கணினிகளை மேசைக்கணினிகளின் விலையிலேயே கொள்வனவு செய்ய முடிவதும் அனைவரினதும் மோகமும் மடிக்கணினிகள் நோக்கி திருப்பியிருக்கிறது. இதனால் இப்போதெல்லாம் வீட்டுக்கொரு மடிக்கணினி என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மேசைக்கணினிகளை விட மடிக்கணினிகள் பல வசதிகளையும் பாவனைக்கு இலகுவாகவும் அமைந்தாலும் ஒரு மடிக்கணினியை நீண்டகாலம் ஒழுங்காக பாவிப்பதற்க்கும், அது சிக்கலின்றி இயங்குவதற்கும் அவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.

ஆனாலும் அவையும் சாதாரண ஒரு கணினி செய்கின்ற வேலையைதானே செய்கின்றன அவற்றை ஏன் விஷேடமாக பாரமரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்? அல்லது வெறுமனே தூசு தட்டினால் போதமானது என்று சிலர் நினைக்கலாம் ஆனால் தூசு தட்டுவது மட்டும் ஒரு மடிக்கணினிக்கு பாதுகாப்பை ஏற்படுத்தாது. வன்பொருள் ரீதியாகவும் மென்பொருள் ரீதியாகவும் அவை பாரமரிக்கப்படும் போது மாத்திரமே மடிக்கணினிகள் சிறப்பாக இயங்கும். அவ்வாறு நீங்களும் உங்களுக்கென்று ஒரு மடிக்கணினியை உபயோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு பயன்படக்கூடிய சில பராமரிப்பு முறைகளை தொகுத்து தருகின்றேன். அவற்றை பின்பற்றி உங்கள் மடிக்கணினிகளின் பாவனையையும் செயல்பாட்டையும் வினைத்திறனாக்குங்கள். 





#1 தூசுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். (Watch out for dust)

எமது சாதாரண மேசைக்கணினிகள் போன்றே மடிக்கணினிகளிலும் வெப்பம் மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்றுவதற்கான Processor Fan மற்றும் அதற்கான துவாரங்களும் காணப்படும். மடிக்கணினிகள் தொடர்ந்து பாவிக்கப்பட்டாலும் இந்த துவாரங்களை நாம் கவனிப்பதில்லை, இதனால் ஏனைய பாகங்களை விட இந்த துவாரங்கள் அமைந்துள்ள பகுதிகள் மட்டும் தூசி படிந்து காணப்படும். இந்நிலை நீடிக்குமானால் காலப்போக்கில் அந்த துவாரங்கள் அடைக்கபட்டு CPU Fan இனால் ஒழுங்காக வெப்பத்தை/தூசிகளை வெளியேற்ற முடியாமல் போவதுடன் அது அதிக வெப்பமான (Over heating) நிலையை தோற்றுவிக்கும். இதனால் உங்கள் மடிக்கணினி மட்டுமல்ல உங்கள் உடலுக்கும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம், எனவே உங்கள் மடிகணினிகளின் வன்பொருள் பாகங்களை வாரமொரு முறை சுத்தம் செய்யுங்கள்.

#2 குளிர்மையாக வைத்திருங்கள் (Keep it cool)

நீங்கள் அதிகமான நேரம் தொடர்ந்தும் மடிக்கணினியை பாவிப்பவராக இருந்தால் மின்விசிறியின் (Fan) அருகிலோ அல்லது குளிரூட்டி பொருத்தப்பட்ட இடத்திலோ நீங்கள் இருந்து உங்கள் மடிக்கணினியை பயன்படுத்துவதுடன் நேரடியான உங்கள் மடியில் வைத்து அதிகநேரம் மடிக்கணினிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாத போது Lap tray பயன்படுத்துங்கள் அல்லது Cushion போன்ற அமைப்புக்கள் மீது வைத்து பயன்படுத்துங்கள்.

#3 சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை பாவியுங்கள். (Install a firewall and antivirus software)

உங்கள் கணினியின் இயங்கு முறைமையானது (Operating System) நச்சுநிரல் (Virus) பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். அதிலும் இணையப் பயன்பாடு கொண்ட மடிக்கணினியாக இருந்தால் இந்த ஏற்பாடு அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் Apple இன் Mac வகை மடிக்கணினிகளையோ அல்லது Ubuntu போன்ற இயங்குதளங்களை பயன்படுத்தினால் இந்த கவலையில்லை. ஆனால் Microsoft இனது எந்தவொரு பதிப்பை (Xp, Vista, 7, 8) பயன்படுத்தினாலும் நிச்சயம் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவ வேண்டும். சில மடிக்கணினி வகைகளோடு Original Windows Genuine Windows தொகுப்பு வழங்கப்படும் அவ்வாறான கணினி கொண்டவர்கள் Microsoft இலவசமாக தருகின்ற Security Essentials மென்பொருளை பயன்படுத்தலாம் அதையே Microsoft பரிந்துரைக்கிறது. அவ்வாறில்லாமல் Pirated Version பயன்படுத்துபவர்கள் ஏதேனும் நல்ல Antivirus (Bit defender, Kaspersky, Avast, AVG, etc...) மென்பொருளை நிறுவுவது சிறந்தது.

#4 தேவையில்லாத மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் (Eliminate unused programs)

நீங்கள் பயன்படுத்துகின்ற மடிக்கணினியை நீங்கள் அதிகமாக எந்த தேவைக்காக பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற மென்பொருள்களை மட்டுமே மடிக்கணினிகளில் நிறுவுங்கள், தேவையற்ற செயலிகளை (Program) நிறுவுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயற்பாட்டு வேகம் அதிகரிக்கப்படுவதுடன் மடிக்கணினியின் சீரான மற்றும் நெடுநாள் பாவனைக்கும் வழிவகுக்கும். மேலும் தேவையற்ற மென்பொருட்களை தவிர்ப்பது உங்கள் வன்தட்டின் (Hard disk) சேமிப்பளவினையும் (Storage space) அதிகரிக்கும் இதனால் முக்கியமான தரவுகளை அவசர வேளைகளில் சேமிக்கவும் முடியும்.

#5 உங்கள் தகவல்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள் (Defragment hard drives)

சாதாரணமாக எந்தவிதமான கணினியை பயன்படுத்துபவர்களும் அறிந்திருக்கின்ற விஷயம் என்று நினைக்கின்றேன். கணினியை பாராமரிக்கின்ற வழிகளில் மிக முக்கியமானது. காரணம் நீங்கள் அதிகளவு மென்பொருட்களையும் கோப்புக்களையும் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணினி ஒழுங்காக இயங்குவதற்கும் கணினியின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். வன்தட்டில் அதிகளவு தரவுகள் பதியப்படுகின்ற போது அவை குறித்த ஒழுங்கில் சீராக அடுத்தடுத்து எப்போதும் பதியப்படுவதில்லை, இதனால் இடப்பற்றாகக்குறை, நீங்கள் தரவுகளை மீளப்பெற முயற்சிக்கின்ற போது அதற்க்கு அதிகளவு நேர விரயம் போன்ற பல சிக்கல்களும் தோன்றும், இதனை தவிர்க்க வன்தட்டில் குழம்பிக்கிடக்கின்ற தரவுகளை வரிசையாக அடுக்கி சீர்படுத்துகின்ற செயன்முறைதான் Defragment என்று சொல்லப்படுகின்றது. இதனை குறைந்தது வாரத்தில் ஒருமுறையாவது செய்வது சிறந்தது. Start->Allprograms->Accessories->System Tools->Disk defragment சென்று உங்கள் மடிக்கணினியையும் ஒழுங்குபடுத்தலாம்.

#6 பதிவுகளை தெளிவுபடுத்துங்கள் (Clean your registry)

உங்கள் கணினியில் நீங்கள் எந்தவொரு மென்பொருளையும், கோப்புக்களையும் (Files) பயன்படுத்தும் போதோ அல்லது நிறுவும் போதோ உங்கள் கணினி அநைத செயல்பாடு ஒவ்வொன்றுக்குமான பதிவுகளை தன்னுள் சேமத்து (Registry) கொள்கிறது. இவை சீராக எந்தவித பிரச்சினைகளுமின்றி (Corrupt) இருக்கின்றபோது மட்டுமே கணினியானது சீராக இயங்கும். இந்த Registry Cleaner இல் ஏற்படும் பிரச்சினைகள் நேரடியாக வெளிக்காட்டப்படுவதில்லைஇவை மறைமுகமான பாதக விளைவுகளையே ஏற்படுத்தும், அதே போல அந்த பிரச்சினைகளை நேரடியாக சரிசெய்வது சிரமம் இதனால் இதற்கென்று சில Registry Cleaner மென்பொருட்கள் இருக்கின்றன. சிறந்த ஒரு மென்பொருளை நிறுவி உங்கள் கணினியின் Registryயை சோதித்து கொள்ளுங்கள்.

#7 தற்காலிக கோப்புக்களை நீக்கிவிடுங்கள் (Delete temporary internet files)

நீங்கள் இணையப்பக்கங்களில் உலாவருகின்ற போது உங்கள் உலாவிகளால் உங்கள் கணினிகளில் சேமிக்கப்படுகின்ற கோப்புக்கள் மற்றும் சில மென்பொருள்களால் தானாகவே உருவாக்கப்படுகின்ற கோப்புக்களே Temporary Files எனப்படுகின்றன. இவற்றை கிரமமாக (Regular) நீக்குவதன் மூலம் உங்கள் மடிக்கணினியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். Run இல் சென்று %Temp% என தட்டச்சு செய்து Ok அழுத்த கிடைக்கின்ற சாளரத்தில் (Window) உள்ள அனைத்து  கோப்புக்களையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள். ஓரிரண்டு கோப்புக்களை அழிக்க முடியாது, காரணம் அவை உங்கள் இயங்குமுறைமைக்கான கோப்புக்கள்.

#8 மின்கலங்களை பராமரியுங்கள். (Power surge protection)

மடிக்கணினிகளை பொறுத்தவரையில் அதனுடைய மின்கலங்கள் (Battery) மிக முக்கியமானவை. உங்கள் மடிக்கணினியின் மின்கலத்தை சிறப்பாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை கைக்கொள்ளுங்கள்.

  • எப்போதும் over charging செய்யாதீர்கள். Battery charge ஆனவுடன் மின் இணைப்பை துண்டியுங்கள்.
  • மடிக்கணினியை பாவிக்காத வேளைகளில் முக்கியமாக இரவுப் பொழுதுகளில் Charge இல்   வைத்துவிடாதீர்கள். மின்னோட்டத்தில் அதிகரிப்பு/குறைவு அடிக்கடி ஏற்படுவதால் அது batteryயை பாதிக்க கூடும்.
  • முடியுமானவரை Battery யை முழுமையாக பாவியுங்கள். Battery Low செய்தி கிடைத்த பின்னரே Charge செய்யுங்கள். ஆனால் முக்கியமான நேரங்களில் இது அவசியமில்லை.

நான் மேற்சொன்ன இந்த 8 வழிமுறைகளையும் தொடர்ந்து கைக்கொள்வதன் மூலம் உங்கள் மடிக்கணினியையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் எந்தவொரு செய்முறையும் கட்டாயமானது இல்லை. ஆனால் பொதுவாக ஒரு கணினி சீராக இயங்க இவற்றை கைக்கொள்ள வேண்டும். கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 -ஷான்

Share With your friends