10 டிசம்பர், 2011

Offline Hacking - உத்தரவின்றி உள்ளே வா.. பகுதி 02


கடந்த பதிவின் தெடர்ச்சி.......

பலர் ஆவலோடு எதிர்பார்த்த இந்த பதிவு இரண்டாம் பாகம். நான் ஏற்கனவே சொன்னது போல இன்று வெளியிடுகிறேன். அதாவது இணையத்தோடோ அல்லது வேறு ஏதும் வலையமைப்புகளோடோ இணையாத தொடரறா (Offline) நிலையில் உள்ள கணினிகளினை எவ்வாறு துருவல் (Hacking) செய்வது? என்பது பற்றிய பதிவுதான் இது. இதில் முதலாவது பகுதியில் தருவல் பற்றியும் அடிப்படைகள் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில் எவ்வாறு துருவல் (Hacking) செய்யப் போகிறோம். அதற்க்கு என்ன ஆயுதத்தை பயன்படுத்தப்போகிறோம் என்பது பற்றிய ஒரு அறிமுகம்.

பொதுவாக தொடரறா நிலையில் உள்ள கணினிகள் எனப்படுவது நாம் சாதாரணமாக எமது வீடுகளில் வைத்திருக்ககூடியவை அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களி்ல் உள்ளவையே ஆகும். இவை பொதுவாக விண்டோஸ் இயங்குமுறைமை (Operating System) கொண்டே இயக்கப்படுகிறன. (இந்த துருவலும் விண்டோஸ் அடிப்படை கணினிகளில் மாத்திரமே சாத்தியம்). விண்டோஸ் இயங்கு முறைமைகளில் எமது தரவுகள் User Account என்ற பயனர் கணக்குகள் மூலமே தனியாள் மயப்படுத்தப்படுகிறன (Personal). ஒருவருடைய தரவுகளை கையாள வேண்டுமெனில் அவருடைய User Accountsக்கான கடவுச் சொற்கள் எமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதிலும் Administrator கணக்கு மூலம் இன்னொருவருடைய உரிமைகளையும் கட்டுப்படுத்தலாம்.


ஆகவே இப்போது நாம் ஒரு கணினியின் வன்தட்டினுள் செல்ல அந்த கணினியின் பயனர் கணக்கை உடைக்க வேண்டும். எனவே இதனை செய்ய சில பிரத்தியேக மென்பொருள்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் Winternals_ERD_Commander_2007  இதனை பணம் கொடுத்து பெற வேண்டுமென்றாலும் நான் தருகிற இணைப்பில் இலவசமாக பதிவிறக்கலாம் (Download). இது ஒரு போலி இயங்கு முறைமை அதாவது Live CD என்று சொல்வோம். OEM அடிப்படையிலான மென்பொருள். சாதாரணமாக வெறும் குறுந்தட்டை (CD) வைத்தே கணினியின் வன்தட்டை (Hard Disk) இயக்கலாம். எனவே இது ISO Image கோப்பாக கிடைக்கும். இதனை என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உடனே ஒரு குறுந்தட்டில் பதிந்து எடுங்கள். ISO Image கோப்புககள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாவிட்டால் நான் எழுதிய இந்த பதிவை படியுங்கள்.
அவ்வாறு நீங்கள் பதிந்த குறுந்தட்டு ஒரு Bootable CD ஆக வரும். இதனை தான் நாம் கணினியின் கடவுச் சொல்களை திருட பயன்படுத்தப் போகிறோம்.

தொடர்ந்தும் மென்பொருளை தரவிக்கி குறுந்தட்டில் பதிந்து விட்டீர்கள். இதனை எவ்வாறு பயன்படுத்துவது? முடிந்தால் சுயமாக பயன்படுத்தி பாருங்கள். அல்லது செய்முறை விளக்கம் நான் முதலிலேயே சொன்னது போல 3ம் பகுதியில் எதிர்பாருங்கள்.

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..

பகுதி 03

9 டிசம்பர், 2011

Offline Hacking - உத்தரவின்றி உள்ளே வா.. -பகுதி 01)



விரைவில்............ Hacking ஆரம்பம்..  


கணினி, இணையம் இவை இரண்டையும் பற்றிக் கேட்டால் "தெரியாது" என்று சொல்கின்ற அளவுக்கு இன்று ஒருவரும் இல்லை என்று சொல்லலாம், அந்தளவுக்கு இவை இரண்டினதும் தாக்கம் மனிதரிடையே மொழி, வயது, இன பாகுபாடின்றி ஊடுருவியிருக்கிறது. நம்மில் பலர் நமது இவை இரண்டையும் எந்தளவுக்கு அறிந்து வைத்துள்ளோம் என கேட்டால் அவரவர் தேவைக்கு ஏற்ப என்று சொல்வீர்கள். ஆனால் இதையே முழு மூச்சாக கொண்டவர்கள் இந்த துறையுடனேயே ஒன்றித்தவர்களுக்கான பதிவு இது. ஏனெனில் ஒவ்வொரு துறையை எடுத்தாலும் அவை கட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பது போல Information Technology (IT) என்கின்ற தகவல் தொழில்நுட்ப துறையும் சில கட்டங்களை (Levels) கொண்டிருக்கிறது. அவை என்னென்னவென்று அந்த துறையோடே இருப்பவரகள் நன்கு அறிவார்கள். சுருங்க சொன்னால் "சாதாரணமாக கணினியில் நாம் கற்பது தொடங்கி கணினிக்கு நாம் கற்றுக் கொடுப்பது வரை இதனை ஆங்கிலத்தில் Programming என்பார்கள்"

எனவே இந்தப் பதிவை வாசிக்கின்ற நீங்கள் இப்போது எந்த இடத்தில் (கணினி அறிவை பொறுத்தவரை) இருக்கிறீர்கள் என்பது தெரியாது..! ஆனால் தலைப்பில் சொன்னது படியே கணினித்துறையின் உச்சக்கட்டம் நான் முன் சொன்னது போல கணினிக்கு நாம் கற்றுக் கொடுப்பது/கணினியை நாம் முட்டாளாக்குவது என்று அர்த்தப்படக்கூடிய "துருவல் நடவடிக்கை" ஆங்கிலத்தில் Hacking என்று சொல்வோம். தக.தொழி.நுட்ப துறையோடு இணைந்தவர்கள் பலர் அறிய நினைக்கிற/தாங்களே செய்ய நினைக்கிற ஒரு விடயம். இதை தவிர பலர் நிகழ்காலங்களில் பேசிக் கொள்வது Facebook Hacking என்பார்கள் அல்லது Email Hacking போன்றவை பற்றி. இதனால் துருவல் (Hacking) பற்றிய அடிப்படை எண்ணம் நம்மில் பலரிடையே தேவையான அளவு இருக்கிறது. இதையே புரியாதவர்களுக்காக ஒற்றை வரியில் சொல்கிறேன்.. ஒருவரின் பாதுகாக்கப்பட்ட/தனியாள் மயப்படுத்தப்பட்ட கணினியினுள்ளோ/இணையம் சார்ந்த அமைப்பினுள்ளோ அவற்றிலுள்ள பிழைகளை சரியாக பயன்படுத்தி அனுமதியின்றி நுழைந்து கொள்வது என்று சொல்லலாம். இன்னும் தகவல் தேவைப்பட்டால் சென்ற வருடம் நான் எழுதிய இந்த பதிவை படித்து பாருங்கள்.  

தலைப்பில் சொன்னதற்க்கு சம்பந்தமேயில்லாமல் இவன் ஏன் வீணாக பாடம் எடுக்கிறான்..? என நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. "ஆழம் அறியாமல் காலை விடக்கூடாது" என்பதற்காகத்தான் இந்த முன் ஏற்பாடு.

துருவல் (Hacking) பற்றிய அடிப்படை அறிவும் வந்து விட்டது. இனி என்ன செய்யப்போகிறோம்..?    



பொதுவாக நாமறிந்த துருவல் (Hacking) என்பது இணையம் சார்ந்தது (முன் சொன்னது போன்று). ஆனால் நான் சொல்லப் போகின்ற இந்த துருவல் (Hacking) தொடரறு (Offline) நிலையில் அதாவது இணையத்தோடு இணையாத நிலையில்/ வலையமைப்போடு இணையாத நிலையில் உள்ள ஒரு கணினியிலிருந்து தகவல்களை எவ்வாறு திருடுவது பற்றிதான். 

இது மிகவும் நீண்டதொரு பதிவு எனவே அனைத்தையும் ஒரேதடவையில் சொல்லவும் முடியாது..மூச்சுப்பிடித்து வாசிக்க உங்களாலும் முடியாது ஆனபடியால் இதனை நான் பிரதான 3 பகுதிகளாக பிரித்திருக்கிறேன். இதன் முதலாவது பகுதியில் துருவல் (Hacking) அடிப்படைகளை பகிர்ந்திருக்கிறேன். தொடர்ந்து திங்கட்கிழமை எழுதப்போகின்ற பதிவில் நமது இந்த துருவல் (Hacking) வேலைக்கு பயன்படுத்தப் போகின்ற ஆயுதங்கள் பற்றிய அறிமுகம்/ விளக்கம். இறுதியாக தொடர்போகும் 3ஆவது பகுதியில் எப்படி துருவல் (Hacking) செய்வது என்று விளக்கமாக எழுதுகின்றேன். 

...உங்கள் வருகைக்கு நன்றி... வழமைபோல Intli மற்றும் Tamil 10 வலைத்தளங்களில் ஓட்டு அளித்து இந்தப் பதிவு ஏனையோரையும் சென்றடைய உதவுங்கள்..


5 டிசம்பர், 2011

Skype இல் மறைந்திருக்கும் சில Emotions

                                         
பொதுவாகவே ஸ்கைப் என்ற வார்த்தை கணினி பற்றிய அறிவற்றவர்களும் அறிந்திருக்க கூடியது. மேலும் இதன் பயன்பாட்டை பற்றி முழுதாக அறியாத பலரும் இதை பற்றி பேசி கேட்கிறோம். அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்கைப் இல் என்று நீங்கள் கேட்கலாம்..! பொதுவாக நமக்கு அதிகம் பயன்படுகின்ற/நாம் பயன்படுத்துகின்ற ஒரு விடயம் விரைவில் பிரபல்யமாகிவிடும். அதற்கு மென்பொருட்களும் விதிவிலக்கல்ல.

ஆனால் கொள்ளளவிலேயே சிறிய இடத்தை கொண்ட இந்த மென்பொருள் இவ்வளவு பிரபலமானதற்கு காரணம் இது மென்பொருள் என்பதையும் தாண்டி ஒரு தொலைத்தொடர்பு சாதனத்திற்கு இணையாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. காரணம் நீங்கள் அறிந்ததே. இந்த மென்பொருள் வெறுமனே அழைப்பு (Calling) வசதியை மட்டுமன்றி கூடவே அரட்டை (Chatting) வசதியையும் வழங்குகிறது. அதிலும் இணைய அரட்டையின் போது உணர்வுகளை வெளிக்காட்ட நாம் பயன்படுத்துகின்ற குறியீடுகளே Emotions/Smileys எனப்படுகிறன.

                     இயல்பாக ஸ்கைப் மென்பொருளோடு குறிப்பிட்ட Smileys வருகின்றன. ஆனால் அவை மட்டும்தான் அம் மென்பொருளோடு வருவதில்லை. கூடவே சில Emotions/Smileys மறைந்திருக்கின்றன. பின்வருமாறு உங்கள் அரட்டையில் தட்டச்சு செய்து அவற்றையும் பெற்று விடலாம்...

   குறியீடு .                                .              தட்டச்சு செய்ய 
  அடையாளம் .                                      வேண்டிய முறை



பிடித்திருந்தால் மறக்காமல் Tamil 10 மற்றும் இன்ட்லி தளங்களில் ஓட்டு போட்டு செல்லுங்கள்.


     

4 டிசம்பர், 2011

கணிணியிலும் மாயாஜாலம் செய்யலாம்..!

இறுதி மாதத்தின் மற்றுமொரு பதிவினூடாக சந்திக்கின்றேன். இந்த தடவை நான் சொல்லப் போவதும் வழமை போல புதுமையானதும் வினோதமுமான விடயம். அதாவது நம்மில் பல பேர் விண்டோஸ் இயங்கு முறைமை அடிப்படையில் இயங்கும் கணினிகளையே பயன்படுத்துகின்றோம். பதிப்புக்கள் மட்டுமே வேறுபடுகின்றன. ஆனால் இந்த விண்டோஸ் இயங்குதளங்களில் சில தொழிற்பாடுகள் நம்ப முடியாதவையாகவும், விசித்திரமாகவும் இருக்கும். இது ஒன்றும் அந்த இயங்கு முறைமை (Operating System) களின் குறையில்லை. அவற்றின் பண்புகளை தவறாக பயன்படுத்தும் போது சில வினோதங்களை காணலாம். அவ்வாறு விண்டோஸ் இயங்கு முறைமையில் நான் தேடி கண்ட சில வினோதங்கள்/மாயாஜாலங்கள் இவை .. நீங்களும் செய்து பாருங்கள்..

MAGIC 01 
உங்களின் விண்டோஸ் இயங்கு முறைமை கணினியின் ஏதாவது ஒரு இடத்தில் சென்று CON என்ற பெயரில் ஒரு ஃபோல்டரை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.. என்னதான் முயன்றாலும் அது முடியாது.. ஏனென்றால் CON என்பது Windows இயங்கு முறைமையால் வேறுபிரித்தாளப்படும் CONSOLE என்ற குறியீடு. அனால் இதை செய்ய Command Prompt இல் mkdir \\.\d:\con  என டைப் செய்து Enter கீயை அழுத்த உங்கள் D ட்ரைவில் CON என்ற பெயரில் ஃபோல்டர் உருவாகிவிடும். 

இதே போல நீங்கள் உருவாக்கிய அந்த ஃபோல்டரை அழிக்க rmdir \\.\d:\con என டைப் செய்யவும்..

MAGIC 02
ஒரு வெறும் நோட்பேட் ஃபைலை திறங்கள்.. அதில் Bush hid the facts என தட்டச்சு செய்யுங்கள். பின் அதனை சேமித்து விட்டு குறித்த ஃபைலை மூடி விடுங்கள். பின் மீண்டும் அந்த ஃபைலை திறந்து நடப்பதை பாருங்கள்..

MAGIC 03
இது மைக்ராசாஃட் ஆபீஸ் தொகுப்பில் உள்ள ஒரு வினோதம். உங்கள் கணினியில் மைக்ராசாஃட் ஆபீஸ் வேர்ட் இருந்தால் அதனை திறங்கள். 
பின் அதில் =rand (200,99) என தட்டச்சு செய்து Enter கீயை அழுத்துங்கள்.. நடப்பதை பாருங்கள்.. 

இவை போல இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை வருகின்ற பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.


இந்த தீம்கள் (Themes) உங்கள் கணினியிலும் ஒளிந்திருக்கும்..!


     மீண்டும் ஒரு முறை வருடத்தின் இறுதி மாதத்தின் முதல் பதிவினூடாக இணைகின்றேன். வித்தியாசமானதும் புதுமையானதுமான பதிவுகளுக்காகவே இருப்பது IT CORNER. அது போல இம்முறையும் நான் சொல்லப்போவது நீங்கள் கனவிலும் நினைக்காத விண்டோஸ் 7 இயங்கு முறைமையின் (Operating System) ஒளிந்திருக்கும் ஒரு வசதி/விடயம்/அதிசயம் பற்றித்தான். எனவே செய்து பார்க்க உங்களிடம் விண்டோஸ் 7 இயங்கு முறைமை அவசியம்..

                   அதாவது பொதுவாக அழகுக்கும் இலகு பாவனைக்கும் பெயர் போனது விண்டோஸ் 7 இயங்கு முறைமை. இதற்கு பெரிதும் துணை புரிவது விண்டோஸ் 7 பதிப்பில் விஷேடமாக மைக்ரோசாஃட் (Microsoft) அறிமுகப்படுத்திய தீம்கள். பல்வேறு விதமான வடிவமைப்பு அடிப்படைகளுடன் தன்னியக்கமாகவே 7 வார்ப்புருக்களை (Theme) உட்பொதிக்கப் பெற்று விண்டோஸ் 7 இனுடைய Ultimate தொகுப்பு கிடைக்கப் பெறுகிறது.(ஏனையவற்றில் எவ்வாறு வருகிறன என்பது தெரியவில்லை).

          இதற்க்கும் மேலாக சில வார்ப்புருக்களை மைக்ரோசாஃட் இணையத்தளமூடாக இலவசமாக வழங்கியும் வருகிறது. ஆனாலும் நம்மை அறியாமலே நம்முடைய இந்த விண்டோஸ் 7 இயங்கு முறைமையினுள் பல வார்ப்புருக்கள் (Themes) ஒளிந்திருக்கின்றன என்பதை அறிவீர்களா?.. அவை உங்கள் பதிப்பை பொறுத்தும் உங்கள் அமைவிடத்தை (Region) பொறுத்தும் வேறுபடுகின்றன. அவற்றை தோண்டி எடுக்க நீங்கள் தயாரா??

    முதலில் உங்கள் Windows Explore இல் சென்று Address Bar இல் பின்வருமாறு தட்டச்சு செய்து தேடுங்கள்..



பின் உங்கள் Explorer பின்வருமாறு தோன்றும்.



      அதாவது எல்லோருக்கும் ஒரே மாதிரி பெறுபேறு கிடைக்காது. ஏனெனில் நான் முன் சொன்னது போல பதிப்பை பொறுத்தும் உங்கள் அமைவிடத்தை பொறுத்தும் வார்ப்புருக்கள் (Themes) வேறுபடும். எனவே தோன்றுகின்ற 5 கோப்புறைகளினுள்ளும் (Folders) காணப்படுகின்ற Theme என்ற கோப்புறையை திறந்து உள்ளிருக்கும் வார்ப்புருவை நிறுவலாம். அல்லது நீங்கள் விரும்பினால் அவற்றை தனித்தனி படங்களாகவும் பெறலாம். ஒவ்வொரு நாடுகளினதும் பல வார்ப்புருக்கள் காணப்படுகின்றன. 

       இனியென்ன இப்போதே உங்கள் கணிணியையும் சல்லடை போடுங்கள்.. எத்தனை தீம்களை கண்டு பிடித்தீர்கள்.. பின்னுாட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Share With your friends