இணைய உலாவிகள் எனும் போது இன்றைய நாட்களில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பல இணைய உலாவிகளை அறிமுகப்படுத்துகின்றன. அதில் நம்முடைய விருப்பத்திற்க்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு மென்பொருளைப் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் கூகிளின் குரோம் உலாவியை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் இணைய உலாவல் அனுபவத்தை இன்னும் மெருகூட்ட இந்த பதிவு உதவும் என நினைக்கிறேன்.
அதாவது Extensions என்ற பகுதியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) மென்பொருளுக்கு இருந்தாலும் Extension களை வைத்தே புதுமை செய்தது கூகிளின் குரோம் உலாவி. எம் தேவைக்கேற்ப கூகிளின் Webstore இல் ஆயிரக்கணக்கான Extension கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் உங்களுடைய ஒரு குரோம் உலாவியில் கட்டாயம் இருக்க வேண்டிய சிறந்த 5 Extension களை தந்திருக்கிறேன். வாசித்து பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.
Google Dictionary
இந்த Extension ஐ தரவிறக்கி உங்கள் குரோம் உலாவியில் நிறுவியதன் பின் Toolbar இல் புதிதாக ஒரு Icon சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். நீங்கள் குறித்த ஒரு இணையத்தளத்தை பார்வையிடும் போது நீங்கள் கருத்தை அறிய வேண்டிய சொல்லை Select செய்து பின் குறித்த Icon ஐ அழுத்த ஒரு Balloon திறந்து உங்களின் சொல்லுக்கான அர்த்தத்தை காண்பிக்கும். இனி நீங்கள் இணைய உலாவலில் ஈடுபடும் போது எந்தவொரு சொல்லுக்குமான அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் இணைய உலாவல் மேலும் வளம் பெறும். இங்கே தரவிறக்கலாம்
Ad Block
இன்றைய நாட்களில் இணைய வாயிலான விளம்பரப்படுத்தல்கள் மிகவும் அதிகமானவை. இவை சில வேளைகளில் நன்மையை தந்தாலும் பல வேளைகளில் எமது இணைய உலாவலை தடை செய்பவையாகவே உள்ளன. அதுமட்டுமன்றி இணையத்தை மெதுவாக்க கூடியவையும் இவையே. ஆனால் இவற்றை தடுக்க இந்த AdBlock Extension உதவுகிறது. இது நீங்கள் தரிசிக்கும் இணையப்பக்கங்களில் உள்ள விளம்பரங்களை தடை செய்து அவற்றின் உள்ளடக்கத்தை மட்டுமே காண்பிக்கும். இதனால் உங்கள் இணைய இணைப்பு வேகமாக இருப்பதுடன் தேவையில்லாத விளம்பரங்களால் நமது கவனம் கலைவதும் குறையும். இங்கே தரவிறக்கலாம்
Turn Off the Lights
இது காணொளி (Video) பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட Extension. அதாவது இணையத்தில் அதிகமாக நாம் காணொளிகளை பார்க்கும் போது திரையரங்கில் பார்ப்பது போன்ற உணர்வை இது தருகிறது. அதாவது குறித்த வலைப்பக்கத்தில் ஒரு காணொளியை Play செய்யும் போது அந்த காணொளியை தவிர்ந்த ஏனைய இடங்களை இருள் நிலையில் இது வைத்துக் கொள்ளும். ஆகவே ஒரு புதுமையான அனுபவத்தை பெறலாம். மேலும் இதனுடைய Settings இல் இருளின் அளவு, எப்போது பின்புலம் இருளடைய வேண்டும் போன்ற பலவற்றை நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ள முடிவதும் கூடுதல் சிறப்பம்சம். இங்கே தரவிறக்கலாம்
Google Mail Checker
இந்த Extension பற்றி நான் சொல்லவே தேவையில்லை. ஏனெனில் பெயரில் உள்ளது போலவே எந்தவொரு இணையப் பக்கத்தில் இருந்தும் உங்கள் ஜீ-மெயிலை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வருகின்ற மின்னஞ்சல்களுக்கு உடனேயே பதிலும் அனுப்பிவிடலாம். நிறுவியதன் பின் உங்கள் Toolbar இல் சேர்கின்ற சிறிய G Icon உங்களின் மின்னஞ்சல் நிலவரத்தை சொல்லிக் கொண்டே இருக்கும். இங்கே தரவிறக்கலாம்
Angry Birds
இந்தப் பெயரை அறியாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். ஏனெனில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கட்டிப் போட்ட 2011ம் ஆண்டின் கணினி விளையாட்டு. ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமே விளையாட முடிந்த இந்த விளையாட்டை முதன் முதலில் கணினியில் விளையாடவைத்து என்னைப் போன்ற பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய பெருமை குரோம் உலாவியையே சாரும். இணைய உலாவலின் போது மிகச்சிறந்த பொழுது போக்கு. இங்கே தரவிறக்கலாம்
...பதிவு பிடித்திருந்தால் இன்ட்லி மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் வாக்களித்து பதிவை பிரபலமாக்குங்கள்...
2 கருத்துகள்:
உங்கள் வருகைக்கு நன்றி.. இப்பதிவு பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்..
பயனுள்ள பதிவு! நன்றி சார்!
கருத்துரையிடுக